புதன், 30 ஜூன், 2010

அறிஞர் அண்ணா: ஒரு சிறப்புப் பார்வை(இறுதி பகுதி)




 
"கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும்.

அதுபோன்றே " எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ,மறப்போம் மன்னிப்போம்,கத்தியை தீட்டாதே புத்தியைத்  தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க,  ஏழையின் சிரிப்பில் இறைவனைக்  காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, 

இதுபோன்ற  பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும்,பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த  எடுத்துகாட்டுகளாகும்.

புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். வாசிக்கும் திறந்தான் ஒரு மனிதனை அறிவுடையவனாக அடையாளம் காட்டும்என்பார் அண்ணா.பழைய மூர் மார்க்கட்டில் இருந்த யுனிவர்சல், சென்னை ஹிக்கிம்பாதம்ஸ், இந்த இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கில புத்தகங்களையும் வாங்கிவிடுவார்.

ஹிக்கிம்பாதம்ஸ் எடுத்த கணக்கின்படி மைசூர் மகாராஜா சாம்ராஜ் உடையாரும்,அண்ணாவும்தான் அந்தக் காலத்தில் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்கலாம்.


ஓர் இரவு திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (360  பக்கங்கள் கொண்டது) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார். எந்த பொதுக் கூட்டத்திற்கு வந்தாலும் தாமதமாகத்தான் வருவார்.

முன்னால் வந்தால் அடுத்தவரை பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள்,அதனால் ஊறுக்கு வெளியில் நின்று அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வருகிறேன் என்பார்.

இத்தாலிக்கு சென்ற அண்ணா போப்பாண்டவரை சந்தித்து, கோவா விடுதலைக்குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் "மோகன் ரானடோவை" விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அண்ணாவின் கோரிக்கையை ஏற்று மோகன் ரானா விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான ரானடே, அண்ணாவிற்கு நன்றி சொல்ல சென்னை வந்தார். ஆனால் அண்ணா இறந்துபோயிருந்தார்.

வாழும்போதும் சரித்திர நாயனாக வாழ்ந்த அண்ணா தன இறப்பிலும் ஒரு சாதனையை படைத்துவிட்டார். ஆம், அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்ட கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 

1806 ம் ஆண்டு மறைந்த பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1907 ம்  ஆண்டு மறைந்த எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் ஆகியோருக்கு கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது உலக சாதனை புத்தகமான " கின்னஸ் ".

" வங்க கடலோரம் துயில் கொள்கிறான் அந்த தங்கத்  தமிழன் "  

நட்புடன்.



8 கருத்துகள்:

Swengnr சொன்னது…

நல்ல பதிவு! முடித்து விட்டீர்களே!

Praveenkumar சொன்னது…

மிகவும் சிறந்த மாமேதையை பற்றி அருமையான தகவல்கள்..! ஈடுஇணையில்லாத பேரறிஞரை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..!

goma சொன்னது…

அண்ணா அண்ணாதான்
அவர் சொன்னா சொன்னதுதான்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

அது எம்.ஜி.ஆர் சமாதி என்று நினைக்கிறேன் அபுல்பசர். சரிபார்த்து கொள்ளவும்.

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,
பின்னூட்டத்திற்கும் நன்றி
@software Engineer

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி
@பிரவின்குமார்

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி
@கோமா

Unknown சொன்னது…

தவறுதலாக எம்.ஜி.ஆர்.சமாதி இடம்பெற்றுவிட்டது. இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது. சுட்டி காட்டியமைக்கு நன்றி
@அக்பர்.