ஞாயிறு, 27 ஜூன், 2010

அறிஞர் அண்ணா : ஒரு சிறப்பு பார்வை !



 

அப்பாவியாக தோற்றமளித்த அறிஞன்.எதிராளியையும் வசப்படுத்திய வைசியன்.குரலால்,எழுத்தால்,ஆண்ட மன்னன்.தமிழ் நாட்டின் அண்ணன் அறிஞர் அண்ணா.

சி.என்.எ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் "தளபதி" .பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார்.அதன் பிறகு எல்லோருக்கும்  அவர் அண்ணாதான்.

பள்ளியில் படிக்கும்போதே பொடி போடும் பழக்கம் கொண்டவர்.கல்லூரிக் காலத்தில் வெற்றிலை போடும் பழக்கத்திற்கு ஆளானார்.அதன் காரணமாக எச்சில் துப்ப வகுப்பில் ஜன்னல் ஓரமாக அமர்ந்துகொள்வார்.வெற்றிலை போடும்  பழக்கம் அவரின் மரணம் வரை இருந்தது.


பெரியாரின் சீடராக, பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணா ஒரு கட்டத்தில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டு பிரிந்து "திராவிட முனேற்ற கழகம்"  என்ற தனி கட்சி கண்டார்.இருந்த போதிலும்  பெரியாரை " என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் " என்று பெரியாருக்கு மகுடம் சூட்டினார்.

அண்ணாவின் மனைவி பெயர் ராணி.இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.தன் அக்கா மகள் சௌந்தர்யாவின் குழந்தைகளான பரிமளம்,கௌதமன்,இளங்கோ,ராஜேந்திரன் ஆகியோரை தத்தெடுத்து வளர்த்தார்.

தலை சீவமாட்டார்.கண்ணாடி பார்க்க மாட்டார் மோதிரமும்,கைகடிகாரமும் அணிவது கிடையாது.என்னை காலண்டர் பார்க்கவைத்து,கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலை கைதியாக்கிவிட்டதே  இந்த முதமைச்சர் பதவி என்று அடிகடி சொல்லிகொள்வார்.

முதமைச்சராக இருந்து அவர் மறைந்த போது அவரிடம் இருந்த சொத்துக்கள் காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலம்,ஒரு வீடு,சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு,நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூ. 5000, மைலாப்பூர் இந்தியன் வங்கியில் ரூ.5000. இவை மட்டும்தான் அவர் விட்டு சென்ற சொத்துக்கள்.

அண்ணா தொடர்ந்து மணிக்கணக்கில் பொது கூட்டங்களில் பேசக்கூடியவர்.அதுவும் அடுக்கு மொழியில் பேசுவதில் அவரை மிஞ்ச தமிழகத்தில் ஆள் கிடையாது.அப்படிப்பட்ட அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு.அது தேர்தல் நேரம்.அவர் பேசியது " காலமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை,போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை......என்பதே அந்தப் பேச்சு.

ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமைக் கொண்டவர் அண்ணா.அவரது ஆங்கிலப் பேச்சாற்றல் ஆங்கிலேரையே வியக்கவைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. யேல் (yale ) பல்கலைகழகத்தில் அவர் ஆற்றிய உரை ஒரு வரலாற்று சம்பவம்.

இன்னும் வரும்................

 

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

நீர் நலமுடன் வாழ்க
அன்பன்

மதுரை சரவணன் சொன்னது…

அண்ணா அருமை...வாழ்த்துக்கள். வளரட்டும்....

ஸாதிகா சொன்னது…

அறிந்திராத சுவாரஸ்யமான விஷயங்கள் அண்ணாதுரையைப்பற்றி தந்து இருக்கின்றீர்கள்.தொடருங்கள்.

movithan சொன்னது…

அழகான சிறு குறிப்பு.

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
@ R அவர்களே
@ மதுரை சரவணன் அவர்களே.

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
@சகோதரி ஸாதிகா அவர்களே
@ மால்குடி அவர்களே.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பல அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அபுல்பசர்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அண்ணா ஒரு சிறந்த தலைவர். அவரை பற்றிய உங்கள்பார்வை நல்லாருக்கு தொடருங்கள் அபுல்பசர்.

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் ன்றி
@ அக்பர்
@ ஸ்டார்ஜன்