புதன், 23 ஜூன், 2010

வாருங்கள் வாழ்த்துவோம்:அன்னைத் தமிழுக்கு மகுடாபிசேகம்

பிறப் பொக்கும்
 எல்லா உயிர்க்கும் 

இன்று சூன் 23  தேதி தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பொன்னாள்.ஆம்.இன்று கோவையில் செம்மொழியாம் நம் தமிழ் மொழிக்கு,தமிழ் அன்னைக்கு மகுடாபிசேகம் நடைபெறும் நாள்.

இதற்க்கு முன்னாள் நடைப்பெற்ற உலகதமிழ் மாநாடுகளைவிட 
இன்று நடைபெறும் இந்த மாநாடு ஒரு வகையில் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. காரணம் "செம்மொழி" என்ற அந்தஸ்து கிடைக்கப்பெற்ற பிறகு நடைபெறும் முதலாவது மாநாடாகும். 

கோவை மாநகரேமே இன்று விழாகோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் எல்லா சாலைகளுமே கோவையை நோக்கியே.தமிழகத்தில் திருவிழா கொண்டாட்டமாக செம்மொழி மாநாடு சிறப்பிக்கப் படுகிறது.


மாநாட்டில் தமிழ்நாடு, இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 48 நாடுகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில், பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்க உள்ளனர்.

இந்த தமிழ் அறிஞர்களின் ஆய்வு கட்டுரைகளும், ஆராய்ச்சி கட்டுரைகளும்   செம்மொழியாம் தமிழ் மொழியை  இன்னும் செழுமைப் படுத்த உதவும்.
சங்ககாலத் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலான காட்சிகள் ஓவியங்களாகவும், சிலைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

மாநாட்டில் ஒருபுறத்தில் 21 ஆய்வரங்குகளில் கட்டுரை வாசிக்கும் நிகழ்வும், மறுபுறத்தில் தமிழறிஞர்களின் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறுவதுடன், 2,000-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

கன்னித் தமிழை, இளமை குன்றா இனிய தமிழை இன்னும் முன்னெடுக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மேன்மையடைய வேண்டும், தொன்மை மொழிக்குச் சொந்தக்காரர்களாக உள்ள தமிழ்நாட்டில் பிற மொழி மோகத்தில் உள்ளவர்களுக்கு தாய்மொழி உணர்வை, மொழிப்பற்றை வளர்க்க வேண்டும், 

தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும், பல்வேறு நாடுகளில் பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி செய்த தமிழறிஞர்களின் படைப்புகளை மக்கள் களத்துக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக, வருங்கால இளைய சமுதாயம் தமிழின் மேன்மையையும், பெருமையையும் உணர வேண்டுமென்பது மாநாட்டின் முக்கிய நோக்கம்.

ஆக தமிழுக்கும் ,தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் இந்த மாநாடு எல்லா வகையிலும் வெற்றி அடைய நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

             வளர்க தமிழ்                            வாழ்க தமிழினம் 

அன்புடன்
அபுல்



11 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

செம்மொழி மாநாடு எந்த தங்குதடையின்றி நடைபெறவேண்டும்.

goma சொன்னது…

தமிழ் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்


வாழ்க தமிழ்

Unknown சொன்னது…

நன்றி: @ஸ்டார்ஜன்
நன்றி:@கோமதி

vadivel சொன்னது…

The Cheif Guest of Tamil SEMOZHI CONFERENCE are from north india those who nevr know tamil. But the Ex President of our Nation the great Dr.A.P J Abdul Kalam is not in that cheif guest list.

Think People Think

Unknown சொன்னது…

என்ன காரணத்திற்காக முன்னாள் குடியரசு தலைவர்.டாக்டர்.அபுல் கலாம் அழைக்கப்படவில்லை என்று தெரியவில்லை. காரணம் என்னவாக இருந்தாலும் அது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய செயலே.
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வடிவேலு அவர்களே.

pratyush சொன்னது…

சகோதரர் அபுல் அவர்களே ,
சூன் 23, தொடங்கும் உலகதமிழ் செம்மொழி மாநாடுக்கு கோவையில் இன்று முதல் விழாகோலம் செலவு எல்லாம் 350 கோடிக்கு மேலேநு சொல்லிகிறாங்க.
ஒரு சந்தேகம் ஜூ என்பது தமிழ் வார்த்தை இல்லியா,
அப்பறம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ், இதை நடத்துபவர்கள் பின்பற்றுகிறர்களா ,
முத்தமிழனின் மகள் இரண்டு நாட்கள் முன் விஜய் டீவியில் சினிமா விருது வழங்கும் விழாவில் அருமையாக ஒரு தமிழ் உரை ஆற்றினர் , டாமில், வொன்டர் புல்,
எல்லோர்க்கும் தமிழ் பெயர் சூட்டவேண்டுமாம், தமிழன் விரும்புகிறான்

ஏதோ சில தமிழ் பெயர்கள் :
லெனின்
புஷ்
ஆதித்ய
கிரண்
______நிதி (இது சத்தியமா தமிழ் பெயருங்க )

சரி இந்த மாநாடு என்ன சாதிக்க போகிறது , ஹை கோர்ட்லே வழக்காடு மொழியாக்க வேண்டும் இன்று வழக்கு அறிஞர்கள் தொடர் உண்ணா நோன்பு இன்னும் இருகிறார்கள் (மதுரையிலும் சென்னையிலும் ),சரி தமிழ் தான் இப்படி என்றால், தமிழன் இலங்கையில் , தமிழகத்தில் (இராமேசுவரத்தில், கன்னியாகுமரியில் மீனவர்கள் )?
ஆனா தமிழ் கூறி தமிழ் விற்றும் சில தமிழர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்,இனியும் இருப்பார்கள்

நீங்க என்னை குதர்க்கமா பேசறதா நினைகவேண்டம் ஆதங்கம் சார் ,
தப்பு இருந்த மன்னிச்சுருங்க ,
தமிழ் வாழ்த்த தமிழன் வாழுவான்
நிச்சயம்

தறுதலை சொன்னது…

ஏன், புஷ்பவனம் குப்புசாமி, விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் இவங்கெல்லாம் தமிழ நல்லா உச்சரிக்குற காரணத்துக்காக 'செம்மொழியான தமிழ் மொழி' பாடறதுக்கு வாய்ப்பு கொடுக்கல. என்ன செய்ய, காலத்தின் கொடுமை.

மத்தபடி, அப்துல் கலாமை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் எல்லாம் ஒண்ணுதான்.

--------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - 23 -06 -2010 )

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை சொன்னது…

கேக்க நல்லா இருக்கு பாடல்.
தமிழ் வாழ்க! மிக்க நன்றி.
HD டவுன்லோட் லிங்க்>
http://hotfile.com/dl/50119636/8912e2c/Semmozhi.zip.html

Unknown சொன்னது…

நண்பர் பிரத்யுஷ் (pratyush) அவர்களே.
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதில் எனக்கு மிகவும் சந்தோசம்.
தங்களின் ஆதங்கம் புரிகின்றது."ஜூ" என்பது வடமொழி சொல்.அதனால்தான் "சூ" என்று குறிப்பிடுகிறார்கள்.
1981 -இல் மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்கு ஆன செலவு ரூ.10 கோடி.அப்பொழுது அது பெரிய தொகை.
தற்பொழுது அரசு ரூ.350 கோடி செலவு செய்திருக்கிறது.இந்த தொகை உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு மட்டும்
அல்லாமல் கோவை மாநகரத்தின் வளர்ச்சி பணிகளுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாடு சாதிக்கப்போவதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த மாநாட்டின் மூலம் திரட்டப்படும் தமிழ் அறிஞர்களின்,ஆய்வு கட்டுரைகளும்,ஆராய்சிக் கட்டுரைகளும்
தமிழ் மொழியை மேலும் முன்னெடுத்துச் செல்ல பெரிதும் உதவியாக இருக்கும்.

விரைவிலேயே உயர் நீதிமன்றத்தில் செம்மொழியாம் தமிழ்மொழி வழக்காடுமொழியாக வரும் என்று
எதிர்ப் பார்ப்போம்
நட்புடன்
அபுல்.

Unknown சொன்னது…

நண்பர் தறுதலை அவர்களே.தங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி.
புஷ்பவனம் குப்புசாமியும், டாக்டர்:விஜலட்சுமி நவநீத கிருஷ்ணன் அவர்களும்
சிறந்த கலைஞர்கள்தான்.மறுபதற்கில்லை.
நீங்கள்தான் சொல்லி விட்டீர்களே களத்தின் கொடுமை என்று.வேற என்ன சொல்ல.
நட்புடன்
அபுல்.

Unknown சொன்னது…

நண்பர் தமிழன் அவர்களே தங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி.