செவ்வாய், 15 ஜூன், 2010

இந்தியாவின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் சென்னையில்...


வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளை துவங்குவது தொடர்பான சட்ட மசோதா கடந்த மார்ச் மாதம் லோக்சாபாவில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா டெக்னாலஜி பல்கலைக்கழகம் (வர்ஜீனியா டெக்) தனது கிளையை இந்தியாவில் துவங்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் கிளையை துவங்கும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் இதுவே. அதுவும் சென்னையில் இப்பல்கலைக்கழகம் அமைய உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலமான மார்க் ஸ்வர்ணபூமி என்ற இடத்தில் இப்பல்கலைக்கழகம் அமைகிறது.
இதற்கான ஒப்பந்தம் பல்கலைக்கழகத்தின் தலைவர் சார்லஸ் மற்றும் மார்க் ஸ்வர்ணபூமி நிர்வாக இயக்குனர் ரெட்டி ஆகியோர் இடையே
கையெழுத்தாகியுள்ளது.



இந்தியாவில் கோல்கட்டா, மும்பை, சென்னை ஆகிய பல்கலைக்கழகங்கள் துவங்குவதற்கு முன்னரே, பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே 1950ல் அலெக்ஸாண்டர் ஹன்டர்" என்பவரால் "மெட்ராஸ் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்' என்ற பெயரில் கல்லூரி துவக்கப்பட்டது. 1952ல் இது அரசுடமையாக்கப்பட்டது. அரசு கலைக்கல்லூரியாக இன்றும் இக்கல்லூரி சென்னையில் இயங்கி வருகிறது.


இந்தியாவில் சில மாநிலங்களில் தான் அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களும் உள்ளன. இதில் தமிழகமும் ஒன்று. சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி., மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. 

மாநில அரசின் (அறிவியல், மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், விவசாயம் உட்பட) 25க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மேலும் 20க்கும் மேற்பட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை உள்ளன. இதோடு வெளிநாட்டு பல்கலைக்கழகம் தமிழகத்தில் தனது கிளையை துவங்குவதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த கல்வி கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

நன்றி:
கல்விமலர்.

2 கருத்துகள்:

Tamilparks சொன்னது…

அருமை நல்ல தகவல்

Unknown சொன்னது…

நன்றி தமிழ்பார்க்ஸ்.