சனி, 29 ஆகஸ்ட், 2009

சவுதி அரேபியாவில் தற்கொலை படை தாகுதல்

தற்கொலைப்படை தாக்குதலில் சவுதி உள்துறை அமைச்சர் காயம்
ஆகஸ்ட் 29,2009,00:00 IST

துபாய் : சவுதி அரேபிய உள்துறை அமைச்சர் மீது, அல்-குவைதா அமைப்பின் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் சவுதி இளவரசர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் சகோதரர் மகன் முகமது பின் நயாப். சவுதி இளவரசரான முகமது, கடந்த 10 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் துணை உள்துறை அமைச்சராக உள்ளார். பயங்கரவாத ஒழிப்புத்துறையை இவர் கவனித்து வருகிறார். அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பில் சம்பந்தப்பட்ட அல்-குவைதா தலைவர் ஒசாமா பின் லாடன் உள்பட 15 பேர் சவுதியை சேர்ந்தவர்கள் தான். எனவே, தீவிரவாத ஒழிப்பில் சவுதி அரேபியா ஆர்வம் கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் அல்-குவைதா அமைப்பை சேர்ந்த, 44 பேர் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். ஜெட்டாவில், ரம்ஜான் நோன்பையொட்டி சவுதி அரச குடும்பத்தினர் பொது மக்களிடம் எந்த பாதுகாப்பும் இன்றி நெருக்கமாக பழகுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பயங்கரவாதி ஒருவன், சவுதி அரண்மனைக்குள் நுழைந்து, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் பயங்கரவாதி பலியானான். இந்த சம்பவத்தில் இளவரசரும், உள்துறை அமைச்சருமான முகமது லேசான காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு அல்-குவைதா அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை: