வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

முடி வெட்ட ரூ 12 லட்சம்

புருனே சுல்தானுக்கு முடிவெட்ட 12 லட்ச ரூபாய் செலவு
ஆகஸ்ட் 27,2009,22:23 ISTலண்டன் : புருனே நாட்டு சுல்தானுக்கு முடி வெட்டுவதற்கு 12 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் புருனே நாட்டு சுல்தான் ஹசனல் போல்கியா(63). இவர் லண்டனில் உள்ள கென் மாடஸ்டோ என்ற சிகையலங்கார நிபுணரிடம் தான் கடந்த 16 ஆண்டு காலமாக முடி வெட்டிக் கொள்கிறார். சாதாரணமாக தனது வாடிக்கையாளருக்கு முடிவெட்ட இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் கென் மாடஸ்டோ, புருனே நாட்டின் நட்சத்திர ஓட்டலில் இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து சுல்தானுக்கு நேரம் கிடைக்கும் போது முடிவெட்டி விட்டுக் கணிசமான பணத்துடன் லண்டன் திரும்புவார். சொகுசு விமானத்தில் பயணிக்கும் செலவு, நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, இவருக்கு முடிவெட்ட கணிசமாகக் கட்டணம் என ஒரு முறை சுல்தானுக்கு முடிவெட்ட 12 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவாகிறது.

கருத்துகள் இல்லை: