
இந்த platinum car துபாய் கார் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்க பட்டுள்ளது.
முழுக்க முழுக்க white gold என்று சொல்ல படுகின்ற பிளாட்டினம் கொண்டு செய்ய பட்டுள்ளது.
இதன் விலை என்ன என்று விசாரித்து பாருங்கள்.
மனிதன் இறந்த பின் அளிக்கப்படும் கண் தானம், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை போன்று, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்தியாவில் தினமும் நடக்கும் இறப்புகளில், இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற்றால், உறுப்புக்காக காத்திருக்கும் நோயாளிகள் உயிர் பிழைக்க வாய்ப்பு ஏற்படும்.
இந்தியாவில் உடல் உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம். இதனால் தான் கடந்த 1994ம் ஆண்டு உடல் உறுப்புகள் பெறுவதற்குரிய சட்டத்தை அரசு இயற்றியது. இந்த சட்டத்தின் மூலம் உறுப்பு வேண்டியவர்கள், அரசின் உறுப்பு மாற்றும் அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். அவசர, அவசியம் கருதி தானமாகக் கிடைக்கும் உறுப்புகள் அந்த நோயாளிக்கு வழங்கப்படும். உறுப்புகளை தானம் அளிப்போரை பாதுகாக்கும் விதத்திலும், உறுப்புகளை முறையாக நீக்கி, பாரபட்சமின்றி வினியோகிப்பதை உறுதி செய்யும் விதத்திலும், தமிழக அரசால் வடிவமைக்கப்பட்ட முழுமையான சட்டம் இது.
அரசு சட்டம் இயற்றினாலும், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் ஏற்படவில்லை. உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னை, மியாட் மருத்துவமனையில் துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா மூலம் இயக்கம் ஒன்று துவக்கப்பட்டது. இருவரும் முதல் நபராக இந்த இயக்கத்தில் இணைந்து, தங்களின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக வழங்க சம்மதித்து, படிவத்தில் கையெழுத்திட்டனர். மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உடல் உறுப்புகள் கூட வேறு ஒருவருக்கு பொருத்தலாம். எச்.ஐ.வி., தாக்கியவர்களின் உடல் உறுப்புகள் மட்டுமே பயன்படாது.
உறுப்பு தானம் செய்ய வயது வித்தியாசம் கிடையாது. உறுப்புகளை உடலில் இருந்து எடுக்கும் செலவுகள், தானம் கொடுப்பவரின் குடும்பத்தைச் சேராது. உடல் உறுப்பு தானம் செய்வதால் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்திற்கு பணம் எதுவும் கிடைக்காது. இந்தியாவில் மனித உடல் உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம். தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட பின்னர், உயிரற்ற அந்த உடலில் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் தெரியாது. உறுப்புகளை தானமாக பெறுவோர், நீண்ட காலம் காத்திருக்கும் நிலை, ரத்தப்பிரிவு, திசு இயல்புகள் ஆகியவற்றின் படி தேர்ந்தெடுக்கப்படு கின்றனர்.
இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு லட்சம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், அவ்வளவு சிறுநீரகங்கள் கையிருப்பு இல்லை. 2.5 மில்லியன் அளவிற்கு இதய வால்வுகள் தேவைப்படுகின்றன. உடல் உறுப்புகள் இல்லாததால், உறுப்புகளை தானமாகப் பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியல் பெரிதாக உள்ளது. தானமளிப்போர் குறைவாக உள்ளதே இதற்கு காரணம். இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும். "மோட்' அமைப்பை பொறுத் தவரையில் www.mode.org.in என்ற இணையதளத்திலும், 22492288 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்தால், உறுதியேற்பு படிவம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். அதில், கையெழுத்திட்டு, விருப்பத்தை உறுதிபடுத்தினால், அடையாள அட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். இதற்காக எங்கும் அலைய வேண்டியதில்லை. உடல் உறுப்புகள் தானம் தரும் விஷயத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. இறந்த பின், தானம் செய்தவர்களின் உடல் உறுப்புகளை அவர்களின் உறவினர்கள் எடுக்க விடுவதில்லை. இந்த வகையில், உடல் உறுப்பு தானம் செய்தவர்களில் 30 சதவீதம் பேரின் உறுப்புகள் கிடைக்காமல் போயுள்ளன. இந்த பிரச்னையைத் தவிர்க்க, ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்தவுடன், அவரது அந்த விருப்பத்தை நண்பர்கள், நெருங்கிய உறவினர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
எந்தெந்த உறுப்புகளை தானம் தரலாம்: மனித உடலில் இருக்கும் கண்கள், கார்னியா, நுரையீரல், இதயம், இதய வால்வுகள், கல்லீரல், சிறுநீரகங்கள், கணையம், சிறுகுடல், பெமோரல், சபீனஸ் நாளங்கள், சருமம், எலும்பு, டென்டன் என்ற எலும்புகள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்யலாம். "இவற்றை வேறு ஒருவரின் உடலில் பொருத்தி இயக்கச் செய்யலாம். அறிவியல் வளர்ச்சியில் இது சாத்தியம்' என்று டாக்டர்கள் நிரூபித்துள்ளனர்.
சென்னை : மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க அவகாசம் தருமாறு பா.ம.க., தான் தேர்தல் கமிஷனிடம் கோரியுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் வருங்காலத்தில் தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கும்படி, சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க., வழக்கு தொடர்ந்திருந்தது. மற்றொரு வழக்கில், இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க, தங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென கோரியிருந்தது. முறைகேடு செய்ய முடியும் என்பதை நேரில் வந்து நிரூபிக்கும்படி தேர்தல் கமிஷன் அழைத்தது. இதையடுத்து, ஒரு வழக்கை பா.ம.க., கடந்த 24ம் தேதி வாபஸ் பெற்றதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பா.ம.க., தலைவர் மணி மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் தேர்தல் கமிஷனுக்கு நேற்று முன்தினம் நேரில் சென்றனர். அப்போது, அவர்களிடம் 10 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டு, அதில் முறைகேடு நடத்தலாம் என்பதை நிரூபிக்கும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இயந்திரங்களை ஆய்வு செய்த பா.ம.க., குழுவினர், தங்களுக்கு மேலும் அவகாசம் அளிக்கும்படி கேட்டனர். இதையடுத்து, தேர்தல் கமிஷன் அவகாசம் வழங்கியது. ஆனால், இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த மணி, ""ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியபோதெல்லாம் அதை ஒரேயடியாக நிராகரித்து வந்த தேர்தல் கமிஷன், முதல் முறையாக, இதுபற்றி விவாதம் மற்றும் செயல் விளக்கத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி,'' என்றார்.
உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் கேட்ட போது, ""பா.ம.க., கேட்டதன் அடிப்படையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சோதனையிட 27ம் தேதி அழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் கமிஷன் முன்பு பொறியாளருடன் பா.ம.க.,வினர் வந்தனர். மின்னணு இயந்திரங்களை பார்த்த அவர்கள், இவை பற்றி ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும், இன்னொரு நாள் ஒதுக்குமாறும் கேட்டனர். அதற்கு தேர்தல் கமிஷனும் சம்மதித்தது,'' என்றார். ""எனவே, பா.ம.க., தான் தாங்கள் எந்த தேதியில் மீண்டும் வர உள்ளோம் என்பதை தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்கனவே இதுபோல வந்தவர்களை தேர்தல் கமிஷன் திருப்திபடுத்தியுள்ளது,'' என்றார்.
வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைப்பு: ""நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைக்கப்பட்டு, தேர்தல் கமிஷனின் ஒரே தகவல் தளத்தில் சேர்க்கப்படும்,'' என்று நரேஷ் குப்தா தெரிவித்தார். இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியதாவது: தமிழக அளவில் அனைத்து வாக்காளர் பட்டியலும் ஒருங்கிணைத்து தகவல் தளம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, மத்தியில் தேர்தல் கமிஷனின் சர்வரில், நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலின் தகவல் தளம் இடம்பெறச் செய்வது குறித்து டில்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு செய்தால், டில்லியில் இருந்தபடி தமிழக வாக்காளர் பட்டியலை கண்காணிக்க முடியும். மேலும், காஷ்மீரில் உள்ள வாக்காளர் சென்னைக்கு இடம் மாறி வந்தால், அவர் இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும்போதே, காஷ்மீரில் உள்ள பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு விடும். அதேபோல, புதிய போட்டோ அவர்கள் கொடுக்க வேண்டியதில்லை. ஏற்கனவே, காஷ்மீரில் வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படமே, சென்னை பட்டியலுக்கு மாற்றப்பட்டு விடும். இந்த முறை விரைவில் கொண்டு வருவதற்கான தகவல் சேகரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு நரேஷ் குப்தா கூறினார்.
துபாய் : சவுதி அரேபிய உள்துறை அமைச்சர் மீது, அல்-குவைதா அமைப்பின் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் சவுதி இளவரசர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் சகோதரர் மகன் முகமது பின் நயாப். சவுதி இளவரசரான முகமது, கடந்த 10 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் துணை உள்துறை அமைச்சராக உள்ளார். பயங்கரவாத ஒழிப்புத்துறையை இவர் கவனித்து வருகிறார். அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பில் சம்பந்தப்பட்ட அல்-குவைதா தலைவர் ஒசாமா பின் லாடன் உள்பட 15 பேர் சவுதியை சேர்ந்தவர்கள் தான். எனவே, தீவிரவாத ஒழிப்பில் சவுதி அரேபியா ஆர்வம் கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் அல்-குவைதா அமைப்பை சேர்ந்த, 44 பேர் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். ஜெட்டாவில், ரம்ஜான் நோன்பையொட்டி சவுதி அரச குடும்பத்தினர் பொது மக்களிடம் எந்த பாதுகாப்பும் இன்றி நெருக்கமாக பழகுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பயங்கரவாதி ஒருவன், சவுதி அரண்மனைக்குள் நுழைந்து, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் பயங்கரவாதி பலியானான். இந்த சம்பவத்தில் இளவரசரும், உள்துறை அமைச்சருமான முகமது லேசான காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு அல்-குவைதா அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
புருனே சுல்தானுக்கு முடிவெட்ட 12 லட்ச ரூபாய் செலவு |
ஆகஸ்ட் 27,2009,22:23 IST |
லண்டன் : புருனே நாட்டு சுல்தானுக்கு முடி வெட்டுவதற்கு 12 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் புருனே நாட்டு சுல்தான் ஹசனல் போல்கியா(63). இவர் லண்டனில் உள்ள கென் மாடஸ்டோ என்ற சிகையலங்கார நிபுணரிடம் தான் கடந்த 16 ஆண்டு காலமாக முடி வெட்டிக் கொள்கிறார். சாதாரணமாக தனது வாடிக்கையாளருக்கு முடிவெட்ட இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் கென் மாடஸ்டோ, புருனே நாட்டின் நட்சத்திர ஓட்டலில் இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து சுல்தானுக்கு நேரம் கிடைக்கும் போது முடிவெட்டி விட்டுக் கணிசமான பணத்துடன் லண்டன் திரும்புவார். சொகுசு விமானத்தில் பயணிக்கும் செலவு, நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, இவருக்கு முடிவெட்ட கணிசமாகக் கட்டணம் என ஒரு முறை சுல்தானுக்கு முடிவெட்ட 12 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவாகிறது. |
இந்தியாவில் 80 லட்சம் பெண்களிடம் சிகரட் குடிக்கும் பழக்கம் இருக்கிறது |
ஆகஸ்ட் 27,2009,13:00 IST |
வாஷிங்டன் : சர்வதேச அளவில் பெண்களிடையே சிகரட் குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் இந்தியாவில் 80 லட்சம் பெண்களிடம் அந்த பழக்கம் இருப்பதாகவும் சர்வதேச நுரையீரல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருக் கிறது. உலக அளவில் அதிக அளவில் பெண்கள் புகை பிடிக்கும் நாடுகள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் 25 கோடி பெண்கள் சிகரட் குடிக்கிறார்கள் என்றும் வருடந்தோறும் 60 லட்சம் பெண்கள் இதனால் உயிரிழக்கிறார்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. | |
சென்னை; ""தரமணியில் அமைக் கப்படும் இரண்டாவது டைசல் உயிரியல் தொழில் நுட்ப பூங்காவிற்கான பணிகள், வரும் 2011ம் ஆண் டுக்குள் நிறைவடையும்,'' என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தரமணியில் இரண்டாவது டைசல் உயிரியல் தொழில்நுட்ப பூங்கா அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
முதல் கல்லை எடுத்து வைத்து, பணியை துவக்கி வைத்த பின், துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:மருத்துவ உயிர்தொழில் நுட்பம், ஊட்டச்சத்தியல், விவசாய உயிர் தொழில் நுட்பம், மருத்துவ பொருட்கள் மற்றும் உயிர் தகவலியல் ஆகிய துறைகளுக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுத் தேவைகளுக்காக இரண்டாவது டைசல் உயிரியல் பூங்கா அமைக்க இன்று அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. பூங்கா அமைக்கும் பணி 2011ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.மொத்தம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு லட்சம் சதுரடியில் இந்த பூங்கா அமையும். தமிழக அரசு டைசல் உயிரியல் பூங்காவை ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக அங்கீகரித்துள்ளது.
இங்கு பல்வேறு நிறுவனங்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட ஊக்குவிக்கின்றன. ஆராய்ச்சிக்காக சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. பூங்காவில் அனைத்து கட்டமைப்பு மற்றும் பரிசோதனைக் கூடங்களை ஏற்படுத்தி, சலுகைக் கட்டணத் தில் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு மத்திய அரசு 14 கோடி ரூபாய் நிதியளித்துள்ளது. ஆராய்ச்சிக்கான தொழில்நுட்ப கருவிகள் வாங்க இந்த நிதி பயன் படுத்தப்படும். இந்த பூங்கா மூலம் தமிழக அரசிற்கு மாதந்தோறும் 45 லட்சம் முதல் 65 லட்சம் ரூபாய் வரை வாடகை வருமானம் கிடைக்கும். இதர வருவாயும் வர வாய்ப்புள்ளது.
இந்த உயிரியல் பூங்காவில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் புதிய நிறுவனங்கள் வரவுள்ளன. இதனால், 1,500க்கும் மேற் பட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.