செவ்வாய், 27 ஜூலை, 2010

எல்லைக் கோடும் ! வறுமைக் கோடும் ?

 
  
தேசத்தை பிரித்துக்காட்டுவது 
எல்லைக் கோடு

தேசத்தின் மக்களைப் பிரித்துபோடுவது 
வறுமைக் கோடு

எல்லைக் கோடு தேசத்தின் அடையாளம் 

வறுமைக் கோடு தேசத்தின் அவமானம் 

வறுமைக் கோட்டிற்கு மேல் -  வளமாம் 
வறுமைக் கோட்டிற்கு கீழ் -  பஞ்சமாம் 

செழிப்பின் நிறம் -      பச்சையாம்
வறுமையின் நிறம் -  சிவப்பாம் 
பிரித்தது யார்.
அதிகார வர்க்கமா, ஆளும் அரசா ?

கோடிகளில் புரளுகிறது  அங்கே ஒரு கூட்டம் 
தெருக் கோடி  குப்பைகளை புரட்டுகிறது இங்கே ஒரு கூட்டம்

வறுமை தேசங்கள் என்றால் நாம் கை காட்டுவது
ஆப்ரிக்க தேசங்களை 
வறுமைக் கோட்டிற்கு கீழ் இத்தனைக் கோடிபேர் இந்தியாவில் 
யுனெஸ்கோ நம்மை சுட்டிக்  காட்டுகிறது.

ஏன் இந்த சமமின்மை ? ஏன் இந்த பொருளாதார வேறு பாடு ?

வல்லரசு இந்தியா ! பெருமைதான் எமக்கு 
வறுமைக் கோட்டிற்கு கீழ் கோடி மக்கள்
எங்கே போய் முட்டிக் கொள்வது ?


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த 
ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய 

மீசை முறுக்கிய முண்டாசு கவிஞனே 

கோடிப் பேருக்கு உணவில்லையே இந்த பாரதத்தில் 
கோபம் கொண்டு யார் கோவணத்தை பறிப்பது ?


வளமையைக்  கொண்டு வறுமையை வெல்வோம் 
தோள் கொடு தோழா!
.







5 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அருமை அபுல்பசர்.

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கு,கருத்துக்கும்
நன்றி @ அக்பர்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வறுமை என்பது மிகக்கொடுமை. இளமையில் வறுமை அதனினும் கொடியது.

Unknown சொன்னது…

ஆரம்பமே.. அருமை

Unknown சொன்னது…

வாருங்கள்.சிநேகிதி.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.