அணு ஆயுதம் சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி - 2 ஏவுகணையை இந்தியா நாளை ( 23 ம் தேதி ) விண்ணில் செலுத்தி சோதனை செய்கிறது . சமீப கால தளவாட உலகில் பாதுகாப்பு , முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. இதற்கென உலக அளவில் வல்லரசு நாடுகள் ஆயிரம் கோடிக்கணக்கில் செலவழித்து வருகிறது. கடந்த சில நாடகளுக்கு முன்னதாக சீனா 60 ம் ஆண்டு விழா கொண்டாடிய தருணத்தில் ராணுவ அணிவகுப்பு மற்றும் ஆயுதங்கள் குவிப்பை உலகிற்கு காட்டி பெருமை கொண்டது.
இந்நேரத்தில் இந்தியாவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி தங்களது படைக்கு பலம் சேர்த்து வருகின்றனர். மத்திய ரக அக்னி -2 ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இது 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கும்.
முதல் முறையாக இரவு நேர சோதனை : இது 17 டன் எடை கொண்டதாகும். 20 மீட்டர் நீளம் கொண்டதாகும். தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும். இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி (டி.ஆர்.டி.ஓ.,) துறையினரும் இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்துள்ளனர். நாளை ஒரிசா மாநிலம் பாலசோர் கடல் பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதில் ஒரு விசேஷம் என்னவெனில் இந்த முறை இரவில் சோதனை நடத்தப்படுகிறது என்பது முக்கிய விஷயம் ஆகும். இது முதல் முறையாக முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக