உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் கண்காட்சியில், தமிழில் உருவாக்கப்பட்டுள்ள ஏராளமான புதிய மென்பொருள்கள் இடம் பெறுகின்றன.
தமிழ் இணைய மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 400 பேர் பிரதிநிதிகளாகப் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 120 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.தமிழ் இணைய மாநாட்டின் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
பல்வேறு அரசுத் துறைகள், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, கணித் தமிழ்ச் சங்கம், உத்தமம் அமைப்பு, ஊடகங்கள், மென்பொருள் நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கின்றன.இந்த அரங்குகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இணையதள வசதி கொடுக்கப்படுகிறது. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் ஏறத்தாழ ரூ.1 கோடி செலவில் கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன.

