உலகிலேயே அதிகமான நாடுகள் பங்கேற்கும், அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை முதன்முறையாக தென்னாப்பிரிக்கா நடத்துகிறது.
வருகின்ற 11.06.2010. வெள்ளிகிழமை அன்று போட்டிகள் தொடங்குகின்றன.இப்போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டிகள் 4 நாடுகளாக 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.போட்டி தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் தம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போட்டி நடைபெறும் கால்பந்து மைதானம் வரையிலான சாலைகள் மிகவும் அழகாகவும் , அற்புதமாகவும் சீரமைக்கப்பட்டுள்ளன.
ஜோகன்னஸ்பர்க் தம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போட்டி நடைபெறும் கால்பந்து மைதானம் வரையிலான சாலைகள் மிகவும் அழகாகவும் , அற்புதமாகவும் சீரமைக்கப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள், அலுவலகங்கள் மற்றும், கார்களில் உலகக் கோப்பையை நினைவுகூரும் வகையில் வண்ணமயமான கொடிகளும், முக்கிய பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஏராளமான விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.