புதன், 4 நவம்பர், 2009

சகாரா பாலைவன வெயில் மூலம் மின்சாரம் தயாரிக்கதிட்டம்


ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் உலகிலேயே மிகப்பெரிய சகாரா பாலைவனம் உள்ளது. இங்கு கடுமையாக வெயில் கொளுத்துகிறது. இந்த வெயில் மூலம் (சூரிய ஒளி மூலம்) மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாலைவனத்தில் கண்ணாடிகள் பதித்து அதன் மூலம் சூரிய வெளிச்சத்தை வெப்பமாக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த வெப்பத்தின் மூலம் தண்ணீரை கொதிக்க வைத்து நீராவியின் மூலம் டர்பன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்கப்படும்.
இந்த மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள 12 மிகப்பெரிய கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இதற்குடெசர்ட் டெக்லாண்டஸ் டிரியஸ்என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.19 ஆயிரம் கோடி (400 கோடி டாலர்) செலவிடப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு கேபிள்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: