செம்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செம்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜூன், 2010

செம்மொழிகளில் வாழும் மொழியாக இருப்பது தமிழ் மட்டுமே: ஆய்வரங்கத்தில் தமிழுக்கு புகழாரம்

 
கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்,'' என்று, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க துவக்கவிழா, கொடிசியா வளாகத்திலுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது.  இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சிவத்தம்பி தலைமை வகித்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.





கிரிகோரி ஜேம்ஸ்:- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். அகராதி ஆய்வில் தலை சிறந்தவர். அவரது பேச்சு: மொழி என்பது ஆன்மா பயணத்தின் பாதை. தமிழைக் காக்கவும், தமிழை வளர்க்கவும் புதிய துணிச்சலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மொழியை, மேலும் பாதுகாக்க, இந்த ஆய்வரங்கத்தின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

உல்ரிக் நிக்லாஸ்:- (ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், அங்குள்ள தமிழர் ஒருவரை மணந்து, தமிழை முறையாகப் பயின்று, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.) நீண்ட காலத்துக்குப் பின், தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்கு கருணாநிதியின் முயற்சியால் செம்மொழித் தகுதி கிடைத்து இருக்கிறது. தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. ஜெர்மனுக்கும், தமிழகத்துக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. 

புதன், 23 ஜூன், 2010

வாருங்கள் வாழ்த்துவோம்:அன்னைத் தமிழுக்கு மகுடாபிசேகம்

பிறப் பொக்கும்
 எல்லா உயிர்க்கும் 

இன்று சூன் 23  தேதி தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பொன்னாள்.ஆம்.இன்று கோவையில் செம்மொழியாம் நம் தமிழ் மொழிக்கு,தமிழ் அன்னைக்கு மகுடாபிசேகம் நடைபெறும் நாள்.

இதற்க்கு முன்னாள் நடைப்பெற்ற உலகதமிழ் மாநாடுகளைவிட 
இன்று நடைபெறும் இந்த மாநாடு ஒரு வகையில் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. காரணம் "செம்மொழி" என்ற அந்தஸ்து கிடைக்கப்பெற்ற பிறகு நடைபெறும் முதலாவது மாநாடாகும். 

கோவை மாநகரேமே இன்று விழாகோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் எல்லா சாலைகளுமே கோவையை நோக்கியே.தமிழகத்தில் திருவிழா கொண்டாட்டமாக செம்மொழி மாநாடு சிறப்பிக்கப் படுகிறது.

சனி, 19 ஜூன், 2010

உலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை

 
 
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின், தற்போது முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடக்கிறது. தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவும் நடத்தப்படுவதுதான் உலகத் தமிழ் மாநாடு. தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள், பண்பாடு, தமிழ் மொழி வரலாறு, தொல்லியல் ஆய்வுகள், கலைகள், மொழியியல் பற்றி இம்மாநாட்டில் புதிய உண்மைகள் வெளியாகும் என்பதால் தமிழ் அறிஞர்களிடமும் மாணவர்களிடமும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


தற்போது நடைபெறும் செம்மொழி மாநாடு, இதற்கு முன் நடந்த மாநாட்டின் தொடர்ச்சி அல்ல. தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் முதல் மாநாடு. உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களை ஒன்றிணைத்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் கடின முயற்சியின் விளைவாக 1964ம் ஆண்டு, டில்லியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் துவக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்த வேண்டும் என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது. முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 ஏப்ரலில், மலேசியத் தலைநர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஏற்பாடு செய்தார். சர்வதேச தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.


இரண்டாவது மாநாடு, சென்னையில் 1968ல் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை முன்னின்று மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தில் நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது. மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்றது. முதல் மாநாட்டைப் போல் அது ஆய்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது.