மூளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஜூலை, 2010

மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்




மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை.

மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும். இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர். அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். 

இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆய்வு நடத்தினார். ஒருவருக்கு உள்ள திறமை மற்றும் தனித்தன்மை என்ன என்று மூளைக்கு தான் தெரியும். 

எனவே, மூளையை “ஸ்கேன்” செய்வதன் மூலம் இதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக அவர் 6 ஆயிரம் பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து ஆய்வு மேற் கொண்டு அதன் முடிவில் " மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்காலத் திட்டங்களை " தீர்மானிக்கலாம் என கண்டறிந்துள்ளார்.

வியாழன், 3 ஜூன், 2010

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?



 
புத்திசாலிதனத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் மூளையின் அமைப்பில் சின்ன,சின்ன வித்தியாசங்கள் உண்டு.பெண்களின் மூளையில் உள்ள செல்களை விட ஆண்களின் மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகம்.

அதனால்,மூளையின் எடையும் ஒரு 100 கிராம் அதிகம்.( அதாவது ஆண்களுக்கு தலைக்கனம் அதிகம்) பெண்களின் மூளையில் செல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்,செல்களுக்கிடையே உள்ள இணைப்பு அதிகம். அதாவது, பெண்கள் குறைந்த அளவு செல்களை வைத்துகொண்டு விரைவாக வேலை செய்கிறார்கள்.
          
மூளையில் லிம்பிக் சிஸ்டம் என்றொரு அமைப்பு இருக்கிறது.இதுதான் நமது பலவித உணர்ச்சிகளைக் கையாள்கிறது. இது,ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். இதன் விளைவாக மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவது,உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திகொள்வது,ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் மேலானவர்கள்.

இதனால்தான் குழந்தைகளைக் கவனிப்பது,வீட்டைப் பராமரிப்பது, போன்ற விசயங்களைப் பெண்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள்.உலகத்தின் எந்தக் கலாச்சாரமாக இருந்தாலும் இதுதான் நியதி. மூளையின் இடப்பக்கம் ,கணக்குப் போடுவது, தர்க்க ரீதியான சிந்தனைகள் இதற்கு பொறுப்பு. 

மூளையின் வலப்பக்கம் மொழியாற்றல், பேச்சுத்திறன் இதற்கு பொறுப்பு. இடப்பக்க மூளையையும் வலப்பக்க மூளையையும் கோர்பஸ் கோலோசம் (corpus colosum) என்ற ஒரு " சாலை " இணைக்கிறது. ஆண்களைவிடப் பெண்களின் மூளையில் இந்த சாலை பெரியது.  அதன் காரணமாகப்  பெண்களின் மூளையில் தகவல் பரிமாற்றங்கள் மிக வேகமாக நடக்கின்றன. 

இதனால் பெண்கள், மூளையின் இரண்டு  பக்கங்களையும்  அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொழியை கற்றுகொள்வதில் ஆரம்பித்து, உள்ளுளணர்வு என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு திறன் சற்று  கூடுதல். ஆண்கள் கணக்குப் போடுவதில் கில்லாடிகள்.   

நன்றி:
புதிய தலைமுறை.