கண்ணதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
கண்ணதாசன்: மலரும் நினைவுகள்
காட்டுக்கு ராஜா சிங்கம்,கவிதைக்கு ராஜா கண்ணதாசன்! பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது. " நான் நிரந்தரமானவன்,அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்.
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல," அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும்,வர்ணிக்கப்பட்டதைப் படிபதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்" என்பது அவரே அளித்த விளக்கம்.பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
சிறுவயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாயிக்கு தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன்.அந்த வீட்டில் அவர் பெயர்:நாராயணன்
"கலங்காதிரு மனமே,உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே "
என்று "கன்னியின் காதலியில்"எழுதியது கண்ணதாசனின் முதல் பாட்டு.
மூன்றாம் பிறையில் வந்த " கண்ணே கலைமானே " கவிஞரின் கடைசிப் பாட்டு.
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார்.திடீரென்று கழுத்து,கைகளில் நகைகள் மின்னும்.திடீரென்று காணாமல் போய்விடும்.
காரணம் கேட்டால் " பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கிறது " என்று அவை அடகு வைக்கப்பட்டு இருப்பதை சொல்வார்.
மைலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல்,அபிராமபுரம் கவிதா ஹோட்டல்,இரண்டும் கவிஞருக்குப் பிடித்தஇடங்கள.பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான்.வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார்.நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும்.கவிதை வரிகள் சொல்லுபோது செருப்பு அணிய மாட்டார்.
கொஞ்சம் மது அருந்திவிட்டால்,என் சிந்தனைகள் சுருசுருப்படைவது வழக்கம்.அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும்,சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
