சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

சென்னை மெட்ரோ ரயில்: ஒரு சிறப்புப்பார்வை ! (பகுதி- 2 )





சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை 100 அடி சாலையில் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்பதை பகுதி-1 -இல் பார்த்தோம்....

மேம்பாலங்கள் அமைத்து அதில் ரயிலை இயக்குவது நாம் பார்த்த ஒன்று.
இந்தியாவில் இது போன்ற ரயில் தடங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால் சுரங்கபதை அமைத்து அதில் எப்படி ரயிலை இயக்கப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இப்போது பறக்கும் ரயிலில் செல்லும்போது கட்டிடங்கள்,மொட்டை மாடிகளை கண்டி ரசிக்கிறோம்.மெட்ரோ ரயிலில் கட்டிடத்தின் அடித்தளத்தை ரசித்தபடி பயணம் செய்யலாம்." டனல் போரிங் மெஷின் " என்னும் நவீன துளையிடும் இயந்திரம் மூலம் பூமிக்கடியில் ஆழத்துக்கு தோண்டி சுரங்கப் பாதை அமைக்கிறார்கள்.

பூமிக்கு மேல் எந்த அதிர்வையும் இந்த பாதை வழியாக செல்லும் ரயில்கள் ஏற்படுத்தாது. 19  இடங்களில் அண்டர் கிரௌண்ட் ரயில்வே நிலையங்கள் அமைய போகிறது. சரியாக அண்ணா சாலை எல்.ஐ.சி கட்டிடத்திற்குக் கீழே ஒரு ரயில் நிலையம் அமையப்போகிறது.

 

இப்படி அமையும் ரயில்வே நிலையங்கள் எப்படி இருக்கும்....


ரயில் மற்றுமின்றி ரயில்வே நிலையங்களும் முழு குளிர்சாதனம் வசதியுடன் அமையும்.கதவுகள் சென்சார் சிஸ்டம் முறையில் இயங்கும்.நிலையங்கள் பற்றிய விபரங்கள் ரயிலுக்கு உள்ளேயே அறிவிக்கப்படும்.முழுவதும் தானியங்கி முறைதான். 

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.14,600 கோடி. ஒரு கிலோ மீட்டர் பாதை அமைக்க சுமார் ரூ.250 கோடி செலவு. திட்ட மதிப்பில்  59% ஜப்பானின் " அனைத்து நாடுகள் நட்புறவுக்கான அமைப்பு" கடனாக வழங்குகிறது.மீதமுள்ள தொகையை மத்திய,மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன.....


இந்த திட்டத்தை முடிக்க 2015 -ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் அதற்கு முன்பாகவே திட்டத்தை முடிக்க தமிழக அரசும்,இத்திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ள துணை முதலமைச்சருமான திரு.மு.க ஸ்டான்லின் அவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். 

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த ரயில் பாதைக்கான மேம்பால பணிகள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பால பணிகள் முடிவடைந்ததும் முதல் கட்டமாக " கோயம்பேடு - பரங்கிமலை " "சைதாபேட்டை - விமான நிலையம் " மார்கத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தால் ஏற்படப் போகும் நன்மைகள்:-

சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகருக்கு பஸ்சில் செல்ல ஒரு மணி நேரம் ஆகின்றது. அதவும் கூட்டத்தில் பிதுங்கியபடி செல்ல வேண்டிய சூழ்நிலை. இனி அந்த பிரச்சினை இருக்காது. 15  நிமிடங்களில் இந்த ரயிலில் குழு குழு வசதியுடன் சென்று விடலாம்.

ஆறு பெட்டிகளுடன் இயங்கவுள்ள இந்த ரயிலில் ஒரே சமயத்தில் 
1500 பேர் பயணம் செய்யலாம்.இந்த எண்ணிக்கை, குறைந்த பட்சம் 16 பஸ்கள், 300 கார்கள் அல்லது 750   டூ வீலர்கள்
சாலைகளில் இருந்து விலகி கொள்வதற்கு சமமானது.

அதுவும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் இயக்கப்பட உள்ளதால் ட்ராபிக் ஜாமே இல்லாமல் போய்விடும்.பஸ்ஸை விட கட்டணம் குறைவாக இருக்கும்,உடனுக்குடன் ரயில் இருப்பதால் கூட்ட நெரிசல் இருக்காது.ரயில் நிலையங்களை ஒட்டி ஷாப்பிங் மால்கள், சினிமா தியாட்டர்கள் வர வாய்ப்புகள் அதிகம். ஒட்டு மொத்தத்தில் சென்னையின் வளர்ச்சி விகிதம் உயரும் என்பதில் சந்தேகமில்லை.



பாதுகாப்பு எப்படி :-

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதன்மை ஆலோசகராக இருப்பது டெல்லி மெட்ரோ ரயில் கழகம்.அந்த கழகம் தந்திருக்கும் பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் " எல்லா சாதகபாதகங்களையும் முறையாக ஆய்வு செய்தே திட்டப் பணிகளை தொடங்கியுள்ளோம்.மேலும் அதி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.கட்டுமானங்கள் மிக உறுதியாக இருக்கும்.
பாதுகாப்பு  பற்றி அச்சப்படவே தேவையில்லை என்கிறது அந்த அறிக்கை.



உலகெங்கும் பல நாடுகளின் நகரங்களில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.அந்த வரிசையில் இணையப்போகிறது
" நம் சென்னை ". அந்த இனிய அனுபவத்திற்கு நாம் எல்லோரும் தயாராகுவோம்!

நட்புடன்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

சென்னை மெட்ரோ ரயில் : ஒரு சிறப்புப் பார்வை !




சென்னைக்கு வரமாக வரப்போகிறது மெட்ரோ ரயில் !

சென்னையின் இப்போதைய மக்கள் தொகை ஏறக்குறைய 1 கோடியை நெருங்கிவிட்டது.தினமும் சென்னையைக் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 50  லட்சத்துக்கும் அதிகம். வருடந்தோறும் பல லட்ச வாகனங்கள் புதிதாக சாலைக்கு வருகின்றன.

இதுதவிர பேருந்துகளில் மட்டும் நாளொன்றுக்கு 40  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயணம் செய்கின்றனர்.சென்னையில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல். 10  அல்லது 15  கிலோமீட்டர் தூரத்தை கடக்க  1  மணி நேரத்திற்கும் மேலாகிவிடுகிறது. சாலைகளின் பெரும்பகுதியை  கார்களும்,இருசக்கர வாகனங்களும்,ஆட்டோக்களும் அடைத்துகொள்கிறது.

சென்னையின் பஸ் பயணம் என்பது மிகக்கொடுமையான பயணங்களில் ஒன்றாகிவிட்டது. என்ன தான் குளிர் சாதன பேருந்துகள் விட்டாலும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிகொள்ளும் போது,பஸ் பயணம் போதுமடா சாமி என்றாகிவிடுகிறது.
 
 
இந்த போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் அருமருந்தாக வரப்போவதுதான் 
" சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ". 
மெட்ரோ  ரயில் இரண்டு வழித்தடங்களில் பயணிக்கப்போகிறது.மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம்.இன்னும் 5 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சென்னை மக்களை சுமந்து செல்ல தயார் ஆகிவிடும்.

முதல் வழித்தடம்: வடசென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து  பிராட்வே, சென்ட்ரல், ஸ்பென்சர் பிளாசா,ஜெமினி மேம்பாலம்,சைதாப்பேட்டை, கிண்டி,வழியாக சென்னை விமான நிலையம். இதில் வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை ( மொத்தம் 14.5  கி.மீ.) சுரங்கப்பாதையாகவும்,மீதமுள்ள பாதை மேம்பாலங்களிலும் அமையப்போகிறது.

இரண்டாவது வழித்தடம்: சென்னை சென்ட்ரலில் தொடங்கி வேப்பேரி,கீழ்ப்பாக்கம்,அமிஞ்சிக்கரை,அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி,அசோக் நகர் வழியாக பரங்கிமலையில் நிறைவடையும்.இதில் சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர் வரை ( 9 .7  கி.மீ.) சுரங்கப்பாதையாகவும் அமைக்கபடுகிறது. புற நகர் ரயில்,பறக்கும் ரயில்,மற்றும் பேருந்து நிலையங்கள் அனைத்தும் இந்த மெட்ரோ ரயில் பாதையுடன் இணைக்கப்படும்.
 
இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் அத்தனை தொழில் நுட்பமும் அதி நவீன தொழில்நுட்பமே.ஒரே தூணில் கட்டப்படும் மேம்பாலங்கள். 30  மீட்டருக்கு ஒரு தூண்.அதில் இரண்டு ட்ராக். இத்திட்டத்தின்  முதல் கட்ட பணிகள் (அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை ) போர்கால வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ....  

இன்னும் வரும் ............

 

செவ்வாய், 15 ஜூன், 2010

இந்தியாவின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் சென்னையில்...


வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளை துவங்குவது தொடர்பான சட்ட மசோதா கடந்த மார்ச் மாதம் லோக்சாபாவில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா டெக்னாலஜி பல்கலைக்கழகம் (வர்ஜீனியா டெக்) தனது கிளையை இந்தியாவில் துவங்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் கிளையை துவங்கும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் இதுவே. அதுவும் சென்னையில் இப்பல்கலைக்கழகம் அமைய உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலமான மார்க் ஸ்வர்ணபூமி என்ற இடத்தில் இப்பல்கலைக்கழகம் அமைகிறது.
இதற்கான ஒப்பந்தம் பல்கலைக்கழகத்தின் தலைவர் சார்லஸ் மற்றும் மார்க் ஸ்வர்ணபூமி நிர்வாக இயக்குனர் ரெட்டி ஆகியோர் இடையே
கையெழுத்தாகியுள்ளது.


வியாழன், 10 டிசம்பர், 2009

சென்னை " கூவம்" நதியாகிறது


சென்​னைப் பெரு​ந​க​ரின் அகண்ட சாக்​க​டை​க​ளாக உள்ள கூவம் ஆறு, அடை​யாறு,​ பக்​கிங்​காம் கால்​வாய் மூன்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்தி,​ சிங்​கா​ரச் சென்​னையை உரு​வாக்​கு​வ​தற்​காக சென்னை நதி​கள் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு,​ அதன் தலை​வர் பொறுப்​பை​யும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார் துணை முதல்​வர் மு.க. ஸ்டா​லின்.​ ​

1967-ல் முதன்​மு​த​லா​கத் தமி​ழ​கத்​தில் திமுக ஆட்சி அமைத்​த​போதே,​ கூவத்​தில் பட​கு​வி​டும் திட்​டத்​தைத் தொடங்​கி​னார் அன்று பொதுப்​ப​ணித்​துறை அமைச்​ச​ராக இருந்த இன்​றைய முதல்​வர் மு. கரு​ணா​நிதி. அதற்​கா​கக் கட்​டப்​பட்ட பட​குத்​து​றை​க​ளின் சிதைந்த மிச்​சங்​களை இப்​போ​தும் சில இடங்​க​ளில் காண முடி​கி​றது. அப்​போது அவ​ரால் அத்​திட்​டத்தை செய்​து​மு​டிக்க முடி​ய​வில்லை. "மகன் தந்​தைக்​காற்​றும் உதவி' அவர் தொடங்​கிய பணியை நிறைவு செய்​வ​து​தான்.​ ​ 

இந்த ஆணை​யம் எத்​த​கைய பணி​களை முத​லில் செய்​யப்​போ​கி​றது;​ இதற்​கான மதிப்​பீடு என்ன,​ இச்​செ​ல​வுக்​கான நிதியை எங்​கி​ருந்து பெறப்​போ​கி​றார்​கள் என்ற விவ​ரங்​கள் விரை​வில் இது​பற்​றிய அறி​விப்​பு​க​ளாக வெளி​யா​கும். முத​லில் கூவத்​தைத்​தான் எடுத்​துக்​கொள்ள இருக்​கின்​ற​னர்.​ ​

கூவம் மிக​மிக மோச​மாக மாச​டைந்து,​ கழி​வு​கள் நக​ர​வும் முடி​யா​த​படி தேங்​கிக் கிடக்​கி​றது. கூவத்​தில் உள்ள தண்​ணீரை எடுத்து,​ தெளி​ய​வைத்து,​ வடி​கட்​டிய நீரில் மீன்​களை விட்​டால்,​ 4 மணி நேரத்​தில் மீன்​கள் செத்​து​வி​டு​கின்​றன என்​ப​து​தான் கூவம் குறித்து ஆய்​வு​மு​டி​வு​கள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்​ஸி​ஜன் இல்லை. வெறும் நச்சு உலோ​கக் கலப்​பும்,​ சேறும் சக​தி​யும்​தான் உள்​ளன. அடை​யா​றும் அந்​த​வி​த​மா​கவே படு​மோ​ச​மாக மாச​டைந்து கிடக்​கி​றது. மணப்​பாக்​கம் தடுப்​பணை வரை அடை​யாறு கொஞ்​சம் தூய்​மை​யாக இருந்​தா​லும்,​ சென்னை பெரு​ந​க​ரத்​தில் நுழைந்​த​வு​டன் அதன் மேனி​யில் வெறும் குப்​பை​க​ளும் நச்​சுக் கழி​வு​க​ளும்​தான் கொட்​டப்​ப​டு​கின்​றன. "அடை​யாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்​தது,​ இப்​போ​தும் இருக்​கி​றது ​ என்​பதே நம்ப முடி​யாத விஷ​ய​மாக ஆகி​விட்​டது.​ ​ 

அடை​யாறு,​ கூவம்,​ பக்​கிங்​காம் கால்​வாய் ஆகி​ய​வற்​றில் 1950 களில் இருந்த நிலை உரு​வா​க​வும்,​ பட​கு​கள் ஓட​வும்,​ நீர்​வாழ் உயி​ரி​னங்​கள் அவற்​றில் காணப்​ப​டும் சூழல் மீண்​டும் வர​வேண்​டும். இது முக்​கி​ய​மான பணி என்​ப​தி​லும்,​ இதை எப்​பாடு பட்​டா​கி​லும் செய்​தாக வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்​து​கள் இருக்க முடி​யாது. இருப்​பி​னும்,​ இத்​திட்​டம் வெற்றி பெற வேண்​டு​மா​னால்,​ இது தேர்​தல் கால அர​சி​யல் பிர​சா​ர​மாக மாறு​வ​தைத் தவிர்க்க வேண்​டும். இப்​ப​டிச் சொல்​லக் கார​ணம் இருக்​கி​றது. ​

சென்​னை​யின் நதி​க​ளைத் தூய்​மைப்​ப​டுத்​தும் பணிக்கு குறைந்​த​பட்​சம் 10 ஆண்​டு​கள் தேவை. இதற்​குள் 3 சட்​டப்​பே​ரவை தேர்​தல்​க​ளை​யும் 2 உள்​ளாட்​சித் தேர்​தல்​க​ளை​யும் சென்னை சந்​திக்க நேர​லாம். இத்​திட்​டம் அர​சி​யல் கட்​சி​யின் சாத​னை​யாக முன்​வைக்​கப்​ப​டு​மா​னால்,​ இத்​திட்​டத்தை எதிர்க்​கட்​சி​கள் குறை​கூ​றும்,​ விமர்​சிக்​கும் என்​ப​தோடு,​ ஆட்சி மாற்​றம் ஏற்​ப​டு​மே​யா​னால்,​ இத்​திட்​டத்தை முற்​றி​லு​மா​கப் புறக்​க​ணிப்​பார்​கள்,​ கிடப்​பில் போடு​வார்​கள். இத​னால் மக்​க​ளுக்​கும் இழப்பு,​ சென்னை நக​ருக்​கும் இழப்பு.

சிங்​கப்​பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்​தான். இந்த நதி கூவம் போல மிக​மிக மோச​மா​காத நிலை​யி​லேயே,​ 1977-ம் ஆண்​டில்,​ "சிங்​கப்​பூர் நதி மற்​றும் கலாங் கழி​மு​கத் தூய்​மைத் திட்​டம்' தொடங்​கப்​பட்டு 10 ஆண்டு கால அவ​கா​சத்​தில் முடிக்​கத் திட்​ட​மி​டப்​பட்டு,​ அதன்​படி சிறப்​பா​கச் செய்து முடிக்​கப்​பட்​ட​தன் முழு​மு​தற் கார​ணம்-​ அது அர​சி​யல் வெற்​றி​யாக ஆக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான். சிங்​கப்​பூர் நதி​யின் கரை​யி​லும் கழி​மு​கப் பகு​தி​யி​லும் குடி​யி​ருந்த 26,000 ஏழைக் குடும்​பங்​கள் பார​பட்​ச​மின்றி ஊருக்கு வெளியே குடி​ய​மர்த்​தப்​பட்​ட​னர். 2,800 குடி​சைத்​தொ​ழில் மற்​றும் சிறு​தொ​ழில்​கூ​டங்​க​ளும் ஊருக்கு வெளியே அனுப்​பப்​பட்​டன. நடை​பாதை வணி​கர்​கள்,​ தெரு​வோர உண​வ​கங்​கள் எல்​லா​மும் கழி​வு​நீர் போக்​கி​கள் கொண்ட தனி​யி​டங்​க​ளுக்கு மாற்​றப்​பட்​டன. பிளாஸ்​டிக் பொருள் போன்ற திடக்​க​ழி​வு​கள் சிங்​கப்​பூர் நதி​யில் கலக்​கா​த​படி சிறப்​புத் தடுப்பு அமைப்​பு​கள் கரை​யோ​ரங்​க​ளில் ஏற்​ப​டுத்​தப்​பட்​டன. இதற்​கான திட்​டச் செலவு 20 கோடி டாலர்​கள்.​ ​ 

கூவத்தை அதன் உற்​பத்தி இடத்தி​லி​ருந்து கழி​மு​கம் வரை சுமார் 65 கி.மீ. தொலை​வுக்​குத் தூய்​மைப்​ப​டுத்​த​வும்,​ அடை​யாறு ​(சுமார் 48 கி.மீ.), பக்​கிங்​காம் கால்​வாய் எல்​லா​வற்​றி​லும் உள்ள ஆக்​கி​ர​மிப்​பை​யும் குடி​சைப் பகு​தி​க​ளை​யும் நீக்க வேண்​டு​மா​னால் மிகக் குறைந்​த​பட்​சம் ஒரு லட்​சம் குடி​சை​களை அகற்றி,​ புற​ந​கர்ப் பகு​தி​யில் மாற்​றி​டம் தந்​தாக வேண்​டும். பல்​வேறு ஆக்​கி​ர​மிப்​பு​கள் அகற்​றப்​பட வேண்​டும். தொழில்​நி​று​வ​னம் மற்​றும் மருத்​து​வ​ம​னைக் கழி​வு​கள் இதில் கலப்​ப​தைத் தடுக்க வேண்​டும். இத்​த​னை​யும் செய்ய வேண்​டு​மா​னால்,​ அர​சி​யல் சாய்வு இல்​லாத அர​சின் உறு​திப்​பாடு தேவை. வாக்கு வங்​கி​கள் பற்​றிய எந்த நினைப்​பும் இல்​லா​மல்,​ கட​மை​யைச் செய்​யும் உணர்வு மட்​டுமே இருந்​தால்​தான் இத்​திட்​டம் வெற்றி அடை​யும்.​ 

​ மேலும்,​ தமி​ழ​கத்​தின் தலை​ந​க​ர​மா​கிய சென்னை பெரு​ந​க​ரின் நதி​க​ளுக்கு மட்​டும் ஆணை​யம் அமைத்​தி​ருப்​ப​தைக் காட்​டி​லும்,​ ஏன் தமி​ழக நதி​கள் ஆணை​யம் என ​ அமைக்​க​வில்லை என்​பது சற்று வருத்​தம் தரு​கி​றது. தமி​ழ​கத்​தின் நதி​கள் அனைத்​துமே ஏறக்​கு​றைய கூவம்,​ அடை​யாறு போல தூய்மை கெட்​டுப்​போய் கிடக்​கின்​றன. மணல்​கொள்​ளை​யா​லும் தொழில்​து​றைக் கழி​வு​க​ளா​லும் மேனி மெலிந்து,​ நோயுற்​றுக் கிடக்​கின்​றன. இவற்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்​து​வது தமி​ழக அர​சின் பணி​தானே?​​ ​ 

வாஷிங்​ட​னுக்கு ஒரு பொட்​டோ​மேக். லண்​ட​னுக்கு ஒரு தேம்ஸ். பாரீ​சுக்கு ​ ஒரு ரைன். சென்​னைக்கு ஒரு கூவம் என்​கிற நிலை ஏற்​பட வேண்​டும் என்​பது முதல்​வர் கரு​ணா​நி​தி​யு​டைய கனவு மட்​டு​மல்ல. ஒவ்​வொரு சென்​னை​வா​சி​யின் கன​வும்​கூட. நல்​ல​தொரு முயற்சி துணை முதல்​வர் தலை​மை​யில் செயல்​ப​டத் தயா​ரா​கி​றது. இந்த ஆக்​க​பூர்​வ​மான திட்​டம் அர​சி​ய​லாக்​கப்​ப​டக் கூடாது!

வெள்ளி, 27 நவம்பர், 2009

தோண்ட,தோண்ட, ஊழல் புதையல்

சென்னை விமான நிலைய கார்கோ (சரக்கு) பிரிவில் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடந்த ஆண்டில் அரசுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் கஸ்டம்ஸ் வரி தொகையை, அதிகாரிகள் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள், கார்கோ பிரிவில் தங்கள் சோதனையை நேற்றும் தொடர்ந்தனர்.



சென்னை விமான நிலையத்தில் நடந்த சி.பி.ஐ., சோதனையில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் நடத் திய விசாரணையின் அடிப்படையில் ஏர் கார்கோ காம்ப்ளக்சில் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். இந்த வழக்கில், மேலும் நான்கு கஸ்டம்ஸ் அதிகாரிகளும், நான்கு ஏஜன்டுகளும் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணை நேற்று துவங்கியது. அந்த பார்சல்கள் எந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவை; அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதியில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள் ளன; யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர்; எவ்வளவு லஞ்ச தொகை பேரம் பேசப்பட்டது என்பது குறித்து விசாரணை தீவிரமாகி உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சென்னை விமான நிலைய கார்கோ மூலம், 22 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கையாளப்பட் டுள்ளன. இந்த பொருட்களுக்கு உண்மையான வரி விதிப்பு விதிக்கப்பட்டிருந்தால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால், பத்தில் ஒரு பங்கு கூட வரியாக வசூலிக்கப்படவில்லை. இது தான் தற்போதைய விசாரணை தீவிரத்திற்கு காரணம்.



வழக்கமாக, ஏர் கார்கோவில் இருந்து பொருட்களை டெலிவரி எடுப்பது, இரவு 7 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1 மணி வரை நடக்கும். வெளியாட்கள் தங்களை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக கஸ்டம்ஸ் அதிகாரிகள் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 23ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு ஏர் கார்கோ பிரிவிற்குள் சோதனை தொடங்கிய போது, 30 பார்சல்கள் டெலிவரி செய்யப்படாமல் கிடந்தன. அதில், உபயோகப்படுத்தப்பட்ட பழைய துணி என்று குறிப்பிடப்பட்டிருந்த பார்சல் ஒன்றில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள் இருந்தன. மேலும், சில பார்சல்களில் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் காணப்பட்டன. இந்த வகையில், பெரும்பாலான பார்சல்கள் உரிய மதிப்பு குறிப்பிடாமல், குறைந்த மதிப்பிட்டு, கேட்பாஸ் தயார் செய்யப்பட்டுள்ளதையும், இதன் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பல லட்சம் ரூபாய் கஸ்டம்ஸ் வரி மோசடி செய்யப்பட்டிருப்பதையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பார்சல்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன.



இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்றும் தங்கள் சோதனையை தொடர்ந்தனர். அப்போது, முடக்கி வைக்கப்பட்ட பார்சல்களின் உரிமையாளர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு, உரிய வரியைச் செலுத்திவிட்டு டெலிவரி எடுக்கும்படி உத்தரவிட்டனர். முதற்கட்டமாக, மூன்று பார்சலுக்கு சொந்தமான நிறுவனங்கள் நேரடியாக வந்து, உண்மையான மதிப்பிற்கு வரி கட்டிவிட்டு பார்சல்களை டெலிவரி எடுத்துச் சென்றன. இதேபோல், மற்ற பார்சல் உரிமையாளர்களையும் வரவழைத்து, முடக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணையில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சி.பி.ஐ., சோதனையைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில் நடந்து வரும் லஞ்ச, லாவண் யம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பல புகார் மனுக்கள் பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், கஸ்டம்ஸ் பிரிவில் சி.பி.ஐ., தொடர்ந்து சோதனை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



தலைக்கு இரண்டு "புல்' லஞ்சம்: சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து சென்னைக்கு பொருட்களை கடத்தும் ஏராளமான, "குருவி'கள் உள்ளனர். இவர்கள், பெரிய வியாபாரிகளின் கண்காணிப்பில் உள்ளனர். தினசரி 100 பேர், "குருவி'களாக சென்னை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இவர்களிடம் சில கஸ்டம்ஸ் அதிகாரிகள் லஞ்சமாக பணத்தை பெறுவதில்லை. மாறாக, ஒவ்வொரு, "குருவி'யும் தலா இரண்டு "ஜானிவாக்கர்' பிராண்டு மது பாட்டில்களை கொடுத்துவிட வேண்டும். ஒவ்வொரு பாட்டிலும் 1,200 ரூபாய் மதிப்புடையது. இவ்வாறு தினசரி சேகரிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டில்களை விற்பதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கிறது. இந்த பாட்டில்களை வாங்குவதற்காகவே சென்னை நகரில் பல ஏஜன்டுகள் செயல்பட்டு வருவதாகவும், அவர்களும் சி.பி.ஐ.,யின் பார்வையில் சிக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.



கோடிகளில் புரண்டனர்: சென்னை விமான நிலைய கார்கோவில், முறைகேடாக வரும் சரக்குகளை வெளியே எடுத்துச் செல்ல கஸ்டம்ஸ் அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று வந்தனர். இது குறித்து சி.பி.ஐ., நடத்திய சோதனையில், ஒன்பது கஸ்டம்ஸ் அதிகாரிகள், இரண்டு ஏஜன்டுகள் உட்பட 11 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். இதில், மற்ற அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து அவர்கள் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சி.பி.ஐ., பார்வையில் விழுந்துள்ள அந்த நான்கு அதிகாரிகளில், இரண்டு அதிகாரிகளுக்கு சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பில் வீடுகளும், வெவ்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.

வியாழன், 29 அக்டோபர், 2009

காலம் கடந்த நடவடிக்கை ?

ஐகோர்ட் வளாக மோதல் சம்பவம்; 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி, ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் பயங்கர மோதல் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தானாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்கையும் எடுத்தது. இதற்கிடையில், 'போலீஸ் அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்வது அரசைப் பொறுத்தது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டையே அணுகுமாறு உத்தரவிட்டது. தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வக்கீல் சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க, நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதியை, ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே நியமித்தார். இந்த வழக்கில் 20 நாட்களாக விசாரணை நடந்தது. சம்பவத்தின் போது, எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை 'சிடி'க்களில் பதிவு செய்து நீதிபதிகள் முன் போலீசாரும், வக்கீல்களும் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கின் மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் 'டிவிஷன் பெஞ்ச்', கடந்த 7ம் தேதி தள்ளி வைத்தது. பரபரப்பான இந்த வழக்கில், நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்', இன்று உத்தரவு பிறப்பித்தது. நீதிபதிகள் தங்களது உத்தரவில்; சம்பந்தப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது. இதன்படி சம்பவம் நடந்த நேரத்தில் பணியில் இருந்த கமிஷனரும் தற்போதைய சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியுமான ராதாகிருஷ்ணன் , கூடுதல் கமிஷனராக இருந்த விஸ்வநாதன் ( தற்போது டில்லியில் பணியாற்றுகிறார் ) , துணை கமிஷனராக இருந்த பிரேமானந்தன்சின்கா , இணை கமிஷனராக இருந்த ராமசுப்பிரமணியன் ஆகி‌ய 4 பேர் தான் முழுப்பொறுப்பு ஆவர். அந்நாளில் நடத்தப்பட்டது நீதித்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல் . அந்நாளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் கோர்ட்டை அவமதித்தாகவும் கருதப்படுகிறது. வக்கீல்கள் மீது உள்ள கிரிமினல் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை தொடரலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் 3 சிங்களர்கள் கைது


ஆலந்தூர், அக்.27-

சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 12.30 மணிக்கு கொழும்புக்கு ஒரு விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த முகமது அஷ்ரத், முகமது இர்சாத், ருஷ்மி ஆகிய 3 இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களது பாஸ்போர்ட்டை சரி பார்த்தபோது அவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே திருவனந்தபுரம் வழியாக இந்தியா வந்ததாக போலி முத்திரையிடப்பட்டு இருந்தது. அதை அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர்.
இதையடுத்து 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரும் சிங்களர்கள். இலங்கையின் சிங்கள மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள்.
இந்தியாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் எதற்காக வந்தார்கள் என்று விசாரணை நடக்கிறது. “கியூபிராஞ்ச் போலீசாரும் அவர்கள் சதித்திட்டத்துடன் நுழைந்தார்களா? என்று விசாரிக்கிறார்கள்.

புதன், 21 அக்டோபர், 2009

சென்னை - சேலம் விமான சேவை


சேலம்: கிங் பிஷர் நிறுவனம், நவ., 15 முதல் சேலம் - சென்னை விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை, நேற்று துவங்கியது. சேலம் மற்றும் சுற்று வட்டார வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடைய நீண்டநாள் கோரிக்கையான, சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை நீண்ட இழுபறியாகவே இருந்து வந்தது.

என்.இ.பி.சி., நிறுவனத்தால் 1994ல் துவக்கப்பட்ட சேலம் - சென்னை விமான சேவை போதிய வரவேற்பு இல்லாததால், 45 நாட்களுக்குள் நிறுத்தப்பட்டது. ஏர் - டெக்கான் உள்ளிட்ட வேறு விமான நிறுவனங்கள் சேலத்திலிருந்து விமான சேவையை துவக்க தயக்கம் காட்டின. கடந்த 12 ஆண்டுகளுக்கு பின், கல்விநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் சேலத்தில் அதிகரித்து, முக்கிய நகரமாக உருவெடுத்த நிலையில், மேலும் முன்னேற்றத்துக்கு விமான சேவையும் கட்டாயம் என்ற நிலை உருவாகியது.

இந்நிலையில், சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை துவக்க, கிங் பிஷர் நிறுவனம் முன்வந்தது. கிங் பிஷர் நிறுவனத்தால் அக்., 25 ல் துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட, சேலம்-சென்னை விமான சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதால், விமான சேவை சேலத்துக்கு இப்போதைக்கு கிடைக்கப்போவதில்லை என்ற ஏமாற்றம் வணிகர்களிடையே ஏற்பட்டது. தற்போது ஆன் - லைனில் கிங் பிஷர் நிறுவனம், "சேலம்-சென்னை' விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை நேற்றிலிருந்து துவங்கியது.

சேலத்திலிருந்து சென்னைக்கு 2, 877 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் நவம்பர் 15ம் தேதி முதல் விமான சேவை துவக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் கூறியதாவது: மத்திய பாதுகாப்புத் துறை சார்பில், பயணிகள் போக்குவரத்துக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதற்காக, விமான சேவை சற்று ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபு படேலுடன் கலந்து பேசி, இதற்கான துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதனால், நவ., 1க்குள் பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், கிங் பிஷர் நிறுவனம் நவ., 15 முதல் சேலம்-சென்னை விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை நேற்று துவக்கியுள்ளது. விமான கட்டணமாக 2, 877 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை-சென்னை விமான கட்டணத்தை சேலம்-சென்னைக்கும் நிர்ணயித்துள் ளனர். இவற்றை சில மாதங்களுக்காவது 500 முதல் 600 ரூபாய் வரை குறைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளோம்.

மதியம் 2.50 மணிக்கு சென்னையில் கிளம்பி, மாலை 3.50க்கு சேலத்தை வந்தடையும் விமானம், பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் 4.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.20க்கு சென்னை சென்றடையும் வகையில் விமான சேவை அமைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு துவங்கிய முதல் நாளில் இரண்டு பேர் முன்பதிவு செய்துள்ளதாக கிங் பிஷர் நிறுவன பொதுமேலாளர் எல்ஸா டிசில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு மாரியப்பன் கூறினார்.

சென்னை மருத்துவமனையில் வாசிம் அக்ரம் மனைவி திடீர் அனுமதி

சென்னை மருத்துவமனையில் வாசிம் அக்ரம் மனைவி திடீர் அனுமதி



சென்னை, அக். 20: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மனைவி ஹூமா (42) சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானத்தில் பயணம் செய்த அவர், திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்தார். இதையடுத்து அவர் பயணம் செய்த விமானம், சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அவருடன் வந்த வாசிம் அக்ரமிடம் கூறினர்.