சனி, 21 நவம்பர், 2009
வாட்டர்கேட் ஊழலை மீண்டும் விசாரிக்க அமெரிக்கா முடிவு
வாஷிங்டன், நவ.20: அமெரிக்க அரசியலில் மிகப் பெரிய ஊழலாகக் கருதப்படும் வாட்டர்கேட் ஊழலை மீண்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனையே பதவி விலக வைத்த இந்த ஊழல் வழக்கை 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.÷இந்த வழக்கு தொடர்பாக ஆராய தடயவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாட்டர்கேட் ஊழல் குறித்து நிக்சனுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதை ஆராய்வர்.÷அ மெரிக்காவின் தேசிய புராதன காப்பகம் இது தொடர்பாக ஆய்வு செய்ய புலனாய்வு அதிகாரிகளை நியமித்துள்ளது. இவர்கள் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ஹால்டேமானின் குறிப்புகளையும் ஆராய்வர். முன்னாள் அதிபர் நிக்சன், அவரது உதவியாளராகப் பணியாற்றிய ஹால்டேமான் இடையிலான 18 நிமிஷ உரையாடல் ஒலிநாடாவில் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரம் நிக்சனின் கூட்டாளி ஒருவரது நோட்டில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்வர்.÷இருவரிடையிலான உரையாடல் டேப் அழிந்து போயிருந்தாலும், அதன் விவரம் நோட்டில் இடம் பெற்றுள்ளது என முன்னர் விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.÷தற்போது விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் ஒலிநாடாவில் அழிந்துபோன விவரங்களைத் திரும்ப மீட்க முயல்வர். அதேபோல நோட்டுப் புத்தகத்தில் சரிவர தெரியாத எழுத்து விவரங்களையும் அவர்கள் வெளிக் கொணர்வர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக