செவ்வாய், 3 நவம்பர், 2009

ரிசர்வ் பாங்கி வாங்கும் 200 டன் தங்கம்


புதுடெல்லி, நவ. 3-
சர்வதேச நாடுகளுக்கு நிதி உதவிகள் வழங்கி வரும் பன்னாட்டு நிதியம் தலைமையகம் அமெரிக்கா வாஷிங்டன் நகரில் உள்ளது. பன்னாட்டு நிதியத்திடம் 3 ஆயிரத்து 217 டன் தங்கம் இருப்பு உள்ளது. இதில் 8-ல் ஒரு பங்கான 403 டன் தங்கத்தை விற்பனை செய்வது என்று நிர்வாக குழு முடிவு செய்தது.
இதில் 200 டன் தங்கத்தை இந்திய ரிசர்வ் பாங்கி வாங்க முன் வந்தது. இதற்கு பன்னாட்டு நிதியம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் தங்கம் தேவை அதிகரித்து இருப்பதால் இந்த தங்கத்தை வாங்கி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விட ரிசர்வ் பாங்கி முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் அக்டோபர் மாதம் 19-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை எவ்வளவு தங்கம் வந்துள்ளது என்பதை கணக்கிட்டு அதன் மூலம் இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் தேவை என்பதை கணக்கிட்டு உள்ளனர்.
அதன்படி 200 டன் தங்கம் வாங்க ரிசர்வ் பாங்கி முடிவு செய்தது. இந்த தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 33 ஆயிரம் கோடி.
இந்தியா தங்கம் வாங்குவதை வரவேற்பதாக பன்னாட்டு நிதியம் மேலாண்மை இயக்குனர் ஸ்டாரஸ்கான் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: