வியாழன், 2 செப்டம்பர், 2010

என்ன நடக்கிறது காஷ்மீரில் ? பகுதி-2

என்ன நடக்கிறது காஷ்மீரில் ? முதல் பகுதியை படிக்க இந்த சுட்டியை
அழுத்தவும். 

தொடர்ச்சி.......

இந்தியா,பாகிஸ்தான்,இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தையில் காஷ்மீரிகளைப்  பிரதிநிகளாக கூட அழைப்பது இல்லை.ஆனால் இரு தேசங்களுக்கும் இடையிலான போரில் இதுவரை
75  ஆயிரம் காஷ்மீரிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். காஷ்மீரின் பல பகுதிகளில் இரவு 9  மணிக்கு மேல் விளக்கு ஏற்றக்கூடாது.அங்கு பயன்படுத்தப்படும் செல் போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியாது.

எந்த நேரத்திலும், யார் வீட்டிலும் நுழைந்து சோதனையிடும் அதிகாரம் ராணுவத்திற்கு உண்டு.சித்தரவதையால் கொல்லப்பட்ட உடல்கள் வீதிகளில் திடீர்,திடீர் என வீசப்படும்.எல்லைக்கோட்டிற்கு அந்தப் பக்கம் இருக்கும் உறவினர்களைப் பார்க்க வேண்டுமானால் பாஸ்போர்ட்டும்,விசாவும் வாங்கவேண்டும்.அங்கு துப்பாக்கி சத்தம் கேட்காத நாள் என ஒரு நாள் கூட இல்லை.

தற்போதைய பிரச்சினையின் தொடக்கம் எது ? காஷ்மீருக்கு நேரடியாகச் சென்றுவந்தவரும்,அதைப்ப் பற்றி தொடர்ச்சியாக எழுதிவருபவருமான பேராசிரியர் அ.மார்க்ஸ் சொல்வதைக் கேளுங்கள்." கடந்த ஏப்ரல் மாதம் "மச்சில்" என்ற ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை தினம் 500  ரூபாய் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இந்திய ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்.இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

"அவர்கள் தீவிரவாதிகள் " என வழக்கம் போல ராணுவம் அறிவித்தது.ஆனால்,அது அப்பட்டனமான கொலை என்பதும்,தங்களின் பதவி உயர்வுக்காக இராணுவத்தினர் அப்பாவிகளைச் சுட்டு கொன்றதும் மிக விரைவில் ஆதாரத்துடன் அம்பலமானது. காஷ்மீர் முழுவதும் இது மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.இளைஞர்கள் முன்னணியில்  இருந்து ஆக்ரோசத்துடன் போராடினார்கள். ஆனால் ஆயுதப் போராட்டமாகவோ,
ஆர்பாட்டம்,உண்ணாவிரதம்,என்பதாகவோ,இல்லை.
போராட்டம் தன்னெழுச்சியான தெரு சண்டையாக இருந்தது.

இளைஞர்கள் திரண்டு நின்று ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் மீது கற்களை வீசித் தாக்கினார்கள்.அவர்கள் மீது துணை ராணுவப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,கடந்த  60  நாட்களில் மட்டும்  52  பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.அதில் சிறுவர்களும் அடக்கம்.இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் தலைகளில் குடங்களுடனும்,கைகளில் கற்களுடனும் சாலைகளில் திரள்கின்றனர்.காயம்பட்டு மருத்துவமனைகளில் இருப்போருக்கு ரத்த  தானம் அளிக்க மக்களே முகாம்கள் அமைத்துள்ளனர்.போராடுபவர்களின் உணவுக்கு பெரிய அளவில் சமூக உணவுக் கூடங்களையும் அமைத்துள்ளனர்.

காஷ்மீர் வரலாற்றில் இப்படி ஒரு போராட்டம் இதுவரை நடந்தது இல்லை.

விவரம் அறிந்த வயதில் இருந்து ராணுவக் கெடுபிடி,கடும் அடக்குமுறை
மனித   உரிமை மீறல்களுக்கு மத்தியில் வளர்ந்தவர்கள் அவர்கள்.வாழ்வின் பாதி நாட்களை ஊரடங்கு வாழ்வில் கழித்தவர்கள். தற்போதைய ஆக்ரோசமான எதிர்ப்புக்கு இதுதான் பின்னணி.ஆனால், அரசு இதை இந்தக் கோணத்தில் அணுகத் தயாராக இல்லை. " வெளி நாட்டில் இருந்து பணம் வருகிறது,லஷ்கர்-இ-தொய்பா பின்னணியில் உள்ளது" என்று சொல்லிக்கொண்டு இருப்பது பிரச்சினையை தீர்க்காது.அங்கு நடப்பது அரசியல் போராட்டம்.முதலில் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போதைய காஷ்மீரத்துப் போராட்டங்கள் எந்த திசையில் செல்லும் என யாராலும் கணிக்க முடியவில்லை. யார் சொல்லியும் அதை நிறுத்தமுடியாது.ஏனெனில்,அது யார் சொல்லியும் தொடங்கியது அல்ல,இந்திய அரசு இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.மக்களே மக்களுக்காக  மக்களைக் கொண்டு நடத்தும் போராட்டத்தை எப்படி அடக்குவது ? ஒரே வழி,அவர்களின் அரசியல் கோரிக்கையைத் தீர்பதுதான்! என்கிறார் மார்க்ஸ்.

அந்த அழகிய பள்ளத்தாக்கின் அமைதி எப்படியேனும் மீட்கப்பட வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசை!.
டிஸ்கி: ஆனந்த விகடனில் வெளிவந்த இந்த கட்டுரையை வலைப்பூ வாசகர்களுக்காக அப்படியே பதிவு செய்துள்ளேன்.
நன்றி: ஆனந்த விகடன்  

நட்புடன்

10 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

காஷ்மீர் பற்றியும் மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.. ஆனந்தவிகடனின் செய்தியை உங்கள் பாணியில் விளக்கியிருப்பது அசத்தல்..

நல்ல கட்டுரை அபுல் அண்ணன்.. மேலும் தொடருங்கள்..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி அபுல்பசர்.

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
@ஸ்டார்ஜன்.

Unknown சொன்னது…

வாருங்கள் அக்பர்.
தங்களின் வருகைக்கும்,
வாழ்த்துக்கும் நன்றி

கஹடோவிட சொன்னது…

பகிர்வுக்கு நன்றி, இந்த பகிர்வு அனைவரையும் போய் சேரவேண்டுமென்பது எனது அவா? ஏனெனில் என்னைப்போன்று இன்னும் பலர் அங்கு என்ன நடப்பது என்றே தெரியாமல் இருக்குன்றது என்பதுதான் கவலைக்குறிய விடயம்.
நன்றி

Unknown சொன்னது…

வாருங்கள் "கஹடோவிட".
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

vignaani சொன்னது…

சுருக்கமாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக உள்ளது.
அறுபது ஆண்டு நிகழ்வுகளை இரு பதிவுகளில் சொல்வது கடினம்.
சர்தார் படேல் இந்தியாவில் உள்ள "சமஸ்தானங்களின்" அரசருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியாவில் இணைத்தார். காஷ்மீர் அரசர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். பாகிஸ்தான் அதே போல செய்ய முடியவில்லை.
அந்த படையெடுப்பு நிகழ்ந்திராவிட்டால் இந்தியாவுக்கு இந்த நிரந்தர தலைவலி வந்திருக்காது.
தம் எதிர்காலத்தை முடிவு செய்து கொள்ள ஓட்டெடுப்பு நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்பது சரி தான். ஆனால் இனக்கலவரங்களினால் பல இந்து பண்டிட்டுகள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டதால் அவர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள முடியாத நிலைமையும் நடத்தப்படாததற்கு ஒரு காரணம்.
ஜவஹர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவை விட நேசித்ததைவிட இந்தியப் பிரதமர் என்பதை அதிகமாக நேசித்தவர் என்பதால் காஷ்மீர் இந்தியாவின் கை விட்டு போவதை அவர் உள்ளபடி விரும்பவில்லை எனலாம். When emotinal issues override reason, incorect decisions are taken and the consequences are there for all to see.

Unknown சொன்னது…

அறுபது ஆண்டு நிகழ்வுகளை இரு பதிவுகளில் சொல்வது கடினம்.
உண்மைதான்.சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.
அந்த காஷ்மீர் மக்களின் துயரங்கள் எந்த வகையிலாவது தீர்க்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறு பட்ட கருத்து இருக்கமுடியாது.
உங்களைப் போன்றவர்கள் இதை இன்னும் சிறப்பாக எழுதினால் நன்றாக இருக்கும்.
தங்களின் வருகைக்கும்,
கருத்துப் பரிமாற்றத்திற்கும்
நன்றி @ vignaani

Mohamed Faaique சொன்னது…

நம் நாடோளில் இராணுவத்தில் இருந்தால் பெருமையாக பார்க்கப்படுகிறது.. ஆனால் எனக்கோ.. இவன் எத்தனை பெண்களை கட்பழித்திருப்பன் எத்தனை அப்பாவிகளை கொன்றிருப்பான் என்றே எண்ணத் தோன்றுகிறது..

Unknown சொன்னது…

ராணுவ வீர்களின் தியாகங்கள் பாராட்டபட வேண்டிய ஒன்றுதான்.இருந்தாலும் ஒரு சில ராணுவ வீரர்கள் செய்யும் செயலால் ஒட்டு மொத்த ராணுவத்தினருக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு விடுகிறது.

தங்களின் வருகைக்கும்,
கருத்துக்கும் மிக்க நன்றி
@ faaique .