புதன், 24 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி- 2)






தொடர்ச்சி ...................

தமிழக தனியார் மருத்துவ சேவைத்துறையின் வரலாறு என்பது வெளிநாட்டு மிசனரிகள்,உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்,தனிநபர்களின் பங்களிப்போடு ஆங்கிலேயரியின் ஆட்சியிலேயே துவங்கியது.வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவ மனை,திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள சி.எப்.மருத்துவமனை,சேலம் மாவட்டம் டேனிஷ் பேட்டையில் உள்ள டேனிஷ் மிசன் மருத்துவமனை,

திருச்சியில் உள்ள (குழந்தைகளுக்கான ) அமெரிக்கன் ஆஸ்பத்திரி,போன்றவை குறைவான கட்டணத்தில் நெடுங்காலமாக மருத்துவ சேவை ஆற்றி வருகின்றன.அதனையடுத்து தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள்,பல்வேறு அறக்கட்டளைகள் ஆங்காங்கே மருத்துவமனைகள் துவக்கி, மருத்துவ சேவைகளை பரவலாக வழங்க ஆரம்பித்தன.

மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை போன்றவை அதற்கு ஒரு முக்கிய எடுத்துகாட்டு.இது தவிர இந்திய மருத்துவ முறைகளான சித்த வைத்தியம்,ஆயுர்வேதம், ஹோமியோபதி,யுனானி,போன்றவையும் கிராமப்புற மக்களின் உடல் நலனில் பெரிதும் பங்காற்றி வந்திருக்கின்றன.இன்றும் அது தொடர்கிறது.

இது போன்ற அரசு,தனியார்,தொண்டு நிறுவனங்கள்,பரம்பரை வைத்தியர்கள் ஆகியோரின் கூட்டு சேவை காரணமாக தமிழகத்தில் கொள்ளை நோய்கள்,பேறுகால உயிர் இழப்புகள் போன்றவை பெருமளவு தவிர்க்கப்பட்டு வந்திருக்கின்றன.

இதுவெல்லாம்,ஒருபுறமிருக்க சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓசையின்றி ஒரு மருத்துவப் புரட்சிக் காண வித்து ஊன்றப்பட்டது.நாட்டின் பெருமை மிகு கல்வி நிறுனங்களும்,தமிழகத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் படித்து முடித்து வெளிவந்த பட்டதாரிகளும் சொந்தமாக மருத்துவமனைகளை உருவாக்கி உழைப்பை செலுத்த ஆரம்பித்தார்கள்.

அதற்கடுத்து நடந்ததெல்லாம் அதிசயம்தான். 1983 ல் சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டியால் ஆரம்பிக்கப்பட்ட " அப்பல்லோ " மருத்துவமனை இன்று ஆலமரமாக விழுது விட்டு நாட்டின் மிகப்பெரிய மருத்துவ குழுமமாக உருவாகியிருக்கிறது. 1985 ல் ராமசாமி உடையாரால் துவக்கப்பட்ட ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகத்தின் மருத்துவமனை இன்று நாட்டின் முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று. 20 கும் மேற்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் தொலை மருத்துவம் மூலம் இலவச சேவைகளை இம்மருத்துவமனை வழங்கி வருகிறது. 


1978 ல் டாக்டர்.எஸ்.எஸ்.பத்ரிநாத் துவக்கிய " சங்கர நேத்ராலயா " இன்று உலகின் மிக கடினமான கண் அறுவை சிகிச்சைகளை அநாயாசமாக செய்து வருகிறது. 1971 ல் டாக்டர் விசுவநாதனால் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் நீரழிவு நோய் மருத்துவமனையான எம்.வி.டயாபடிக்ஸ் 1974 ல் கோவையில் ஆரம்பிக்கப்பட கே.ஜி.மருத்துவமனை,புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரான கே.எம்.செரியனால் 1987 ல் துவக்கப்பட்ட "  மெட்ராஸ் மெடிக்கல் மிசன் " என்று இந்த பட்டியல் இன்னும் நீளும்.

இது இப்படி இருக்க 1991 ல் இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பிறகு தேசிய அளவிலும்,தமிழகத்திலும் மருத்துவ சேவை துறையில் தனியார் முதலீடு,வெள்ளமென பாய்ந்தது.திறைமையும்,துடிப்பும்,மிக்க இளம் தொழில்முனைவோர் மருத்துவத் தொழில்முனைவோராக உருவானார்கள்.குறைவான கட்டணத்தில் சர்வதேச தரம் வாய்ந்த சிகிச்சையளிப்பதே அவர்களது லட்சிய வெறியாக இருந்தது.

அந்த அடிப்படையில் சென்னையில் டாக்டர்.பி.வி.ஏ.மோகன்தாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட "மியாட்", 1997 ல் துவக்கப்பட்ட " லைப்லைன் " என்று நவயுக மருத்துவமனைகள் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறி வருகின்றன.இது தவிர வட இந்திய மருத்துவமனை நிறுவனங்கள் தமிழக மருத்துவமனைகளை கையகப்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது.

சென்னையின் புகழ் பெற்ற " மலர் மருத்துவமனையை " 2008 ல் போர்டிஸ் ஹெல்த்கேர் கையகப்படுத்தியது.பில்ராத் மருத்துவமனை காளியப்பா மருத்துவமனையை வாங்கி இருக்கிறது." அடுத்த சில ஆண்டுகளில் மேலும் சில மருத்துவமனைகளை வாங்குவதன் மூலம் தென்னிந்தியாவில் வலுவாகக் கால் பதிக்க விரும்புகிறோம்" என்கிறார் " போர்டிஸ் மலர் மருத்துவமனையின் " நிர்வாக இயக்குனர்  கிரிஸ் ரமேஸ்.

மருத்துவமனை புதியதோ பழையதோ.ஆனால் இன்றைய போட்டியில் எல்லோருக்குமானதுதான்.அதனால்தான் அனைத்து நிறுவனங்களும் யார் அதிநவீன சிகிச்சை அளிப்பது, யாரிடம் ஹைடெக் சாதனங்கள் இருக்கின்றன என்பதில் தொடங்கி ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.
மருத்துவத் துறையில் பெறுவதற்கு கடினமான அங்கீகாரமான " ஜாயின்ட் கமிஷன் இண்டர்நேசனல்" தரச்சான்றை ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் அப்பல்லோ குழும மருத்துவமனைகள் பெற்றிருக்கின்றன.

இன்னும் வரும்.........................

Source : India Today 


3 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல தகவல்கள் அறிந்து கொண்டேன்.

malar சொன்னது…

''1978 ல் டாக்டர்.எஸ்.எஸ்.பத்ரிநாத் துவக்கிய " சங்கர நேத்ராலயா " இன்று உலகின் மிக கடினமான கண் அறுவை சிகிச்சைகளை அநாயாசமாக செய்து வருகிறது. '''
இது எங்கு உள்ளது.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அபுல் பசர் சார் உங்களை நான் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பதின்ம வயது நினைவுகள் - தொடர்பதிவு