சனி, 11 செப்டம்பர், 2010

பூமியை நோக்கி வரும் விண் கற்கள் !


இரண்டு விண்கற்கள் இன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது: 

பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 2010ஆர்எக்ஸ்30 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் சுமார் 32 முதல் 65 அடி நீளம் இருக்கலாம் என்று தெரிகிறது.
இது  பூமியை 2.46 லட்சம் கி.மீ. தூரத்தில் புதன்கிழமை கடக்கும். 2010ஆர்எப்12 என்ற கல் 20 முதல் 46 அடி நீளம் இருக்கும் என்று தெரிகிறது. இது 78 ஆயிரம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும். பிரபஞ்சத்தை பொருத்தவரை இந்த தொலைவு மிகமிக குறைவு. அதனால், ‘நூலிழையில்’ பூமி தப்பியது என்றே கூறலாம். இந்த கற்களால் பூமிக்கு ஆபத்து இல்லை

4 கருத்துகள்:

அணில் சொன்னது…

மோதும்னு ஜாலியா படிச்சா, மிஸ் ஆயிடுச்சே. எதாச்சும் கல்வந்து மோத முன்னாடி இங்க மனுசனே ஒருத்தொனுக்கு ஒருத்தன் அடிச்சிக்கிட்டு செத்துடுவான். இறுதி நாட்கள் நெருங்கிடுச்சின்னு பயத்தோட இருக்க வேண்டாம், மீதி நாட்கள் குறைவாக இருப்பதால் அதிக நேரம் அன்பை செலுத்த செலவிடலாம்.

Unknown சொன்னது…

வாருங்கள் ராஜ்குமார்.
" இங்க மனுசனே ஒருத்தொனுக்கு ஒருத்தன் அடிச்சிக்கிட்டு செத்துடுவான்"
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

தங்களின் வருகைக்கும்,
கருத்துக்கும் நன்றி ராஜ்குமார்..

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் சொன்னது…

ரொம்ப பயமுறுத்தீட்டீங்க, ரொம்ப நலல பகிர்வு நன்றி அபுல்

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்
மிக்க நன்றி @ தமில்தோட்டம்.