சனி, 12 டிசம்பர், 2009

தொலைக்காட்சியில் தொலைந்து போனவர்கள்



பொழு​து​போக்கை மைய​மாக வைத்​துக் கண்​டு​பி​டிக்​கப்​பட்ட தொலைக்​காட்சி,​​ இன்று நம் அனை​வ​ரின் வாழ்​வி​லும் தொலைந்து போன காட்​சி​க​ளைத்​தான் காண்​பித்​துக் கொண்​டி​ருக்​கி​றது.​ தொலைக்​காட்​சி​யைப் பார்த்து வாழ்க்​கை​யைத் தொலைத்​த​வர்​க​ளும் உண்டு.​​ ​ ​ 

தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​க​ளில் வட இந்​தி​யர்​களை விட தென்​னிந்​தி​யர்​கள் அதிக கவ​னம் செலுத்​து​வ​தா​க​வும்,​​ தமி​ழ​கத்​தில் சரா​ச​ரி​யாக நாள் ஒன்​றுக்கு 6.5 எபி​சோ​டு​க​ளைப் பார்ப்​ப​தா​க​வும்,​​ அதி​லும் குறிப்​பிட்ட 3 சானல்​களை 54 சத​வீ​தம் பேர் பார்ப்​ப​தா​க​வும் தனி​யார் நிறு​வ​னம் ஒன்​றின் புள்​ளி​வி​வ​ரம் தெரி​விக்​கி​றது.​​ ​ ​ கேர​ளத்​தில் இது 4 எபி​சோ​டு​க​ளாக உள்​ள​தா​க​வும்,​​ பிற்​பக​லில் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​க​ளைப் பார்ப்​ப​தில் கேர​ளம்,​​ கர்​நா​ட​கத்தை விட தமி​ழ​க​மும்,​​ ஆந்​தி​ர​மும் தான் முன்​ன​ணி​யில் உள்​ள​தா​க​வும்,​​ அதி​லும் முன்​ன​ணி​யில் இருப்​ப​வர்​கள் பெண்​கள் என்​றும் அந்​தப் புள்​ளி​வி​வ​ரம் மேலும் தெரி​விக்​கி​றது.​​ ​ ​ 

தொலைக்​காட்​சி​க​ளால் நம்​ம​வர்​கள் அடைந்த பயன்​தான் என்ன?​ பக்​கத்து வீடு​க​ளு​ட​னான தொடர்​பும்,​​ சச்​ச​ர​வு​க​ளும் குறைந்​துள்​ளது.​ கொலை​யும்,​​ கொள்​ளை​க​ளும்,​​ வீடு​க​ளில் பிரச்​னை​க​ளும் அதி​க​ரித்​துள்​ளன என்​பது தான் பதில்.​ ​​ ​ பெண்​க​ளை​யும்,​​ தொடர்​க​ளை​யும் மைய​மாக வைத்தே இன்​றைய டிவி சேனல்​கள் தொடங்​கப்​பட்டு இயங்கி வரு​கின்​றன.​ தொலைக்​காட்​சி​க​ளில் ஒளி​ப​ரப்​பா​கும் பெரும்​பா​லான நிகழ்ச்​சி​கள் கொலைக்​காட்​சி​க​ளா​கத்​தான் இருக்​கின்​றன என்​பது வருத்​தப்​பட வேண்​டிய ஒன்று.​​ 

​ நல்ல நிகழ்ச்​சி​களை வழங்​கும் டிவி சேனல்​க​ளுக்கு நம்​மி​டையே பெரிய அள​வில் வர​வேற்​பில்லை என்​ப​தும்,​​ இந்த தொலைக்​காட்சி தொடர்​க​ளின் ஆதிக்​கத்​துக்​குக் கார​ணம்.​ ​​ ​ ​ பெண்​களை மட்​டு​மன்றி குழந்​தை​க​ளை​யும் கவ​ரக்​கூ​டிய வகை​யில் ​ ஏரா​ள​மான டிவி சேனல்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.​ அதில் ஒளி​ப​ரப்​பா​கும் நிகழ்ச்​சி​கள் பிஞ்​சுக் குழந்​தை​க​ளின் மன​தில் நஞ்சை விதைப்​ப​தா​கத்​தான் உள்​ளன.​ ​​ ​ சிறு​வ​ய​தி​லேயே டிவிக்கு அடி​மை​யா​கும் குழந்​தை​கள் கண்​பார்​வைக் குறை​பா​டு​க​ளுக்கு உள்​ளா​வ​தா​க​வும்,​​ மன​ரீ​தி​யான பாதிப்​புக்​குள்​ளா​வ​தா​க​வும் ஆய்​வு​கள் தெரி​விக்​கின்​றன.​​ ​ 

தீபா​வளி,​​ பொங்​கல் போன்ற விழாக்​களை வீதி​யில் கொண்​டா​டிய காலம் போய் இன்று டிவி​யில் பார்த்து ரசிக்​கிற காலத்​தில் இருக்​கி​றோம்.​ பண்​டி​கைக் காலங்​க​ளில் கோயில்​க​ளுக்​குச் செல்​வது,​​ உற​வி​னர்​க​ளின் வீடு​க​ளுக்​குச் சென்று வரு​வது போன்ற பழக்க வழக்​கங்​கள் எல்​லாம் இன்று நம்​மி​டம் இருந்து மறைந்து போய்​விட்​டது ​(மறந்து போய்​விட்​டது)​ என்றே சொல்​ல​லாம்.​ ​​ ​ ​ ஓடி விளை​யாடு பாப்பா என்று சொன்ன கவி​ஞர் பாரதி வாழ்ந்த நாட்​டில்,​​ இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழ​கி​விட்​டோம்.​​ ​ ​ டிவி சேனல்​கள்,​​ இணை​யத்​தின் வரு​கை​யால் இன்​றைக்கு மைதா​னங்​க​ளில் விளை​யா​டு​வோ​ரின் எண்​ணிக்​கை​யும்,​​ தெரு​மு​னை​க​ளில் கதை பேசு​ப​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மா​கக் குறைந்​துள்​ளது.​ ​​ ​ ​ 

தொலைக்​காட்​சிக்கு அடுத்​த​ப​டி​யாக இன்று ஏரா​ள​மா​னோரை தன்​னு​டைய கட்​டுக்​குள் வைத்​தி​ருப்​பது இணை​ய​த​ளம்.​ தொலைக்​காட்​சி​யின் பரி​ணாம வளர்ச்சி என்று சொல்​லக்​கூ​டிய அள​வுக்கு வளர்ச்​சி​யை​யும்,​​ வர​வேற்​பை​யும் பெற்​றுள்​ளது இணை​ய​த​ளம்.​ ​​ ​ அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்​க​ளைப் போன்று தோன்​றி​யி​ருக்​கும் தெரு​முனை பிர​வு​ஸிங் சென்​டர்​கள்.​ ​ ​​ ​ ​

தொலைக்​காட்​சி​யால் ​ சமூ​கத்​தில் மாற்​றங்​க​ளும்,​​ இணை​யத்​தால் வளர்ச்​சி​யும் ஏற்​பட்​டுள்​ளன என்​பதை ஒத்​துக்​கொள்​ளும் அதே வேளை​யில் அத​னால் ஏற்​பட்​டுள்ள சமூ​கச் சீர​ழி​வு​க​ளை​யும் எண்​ணிப்​பார்க்க வேண்​டும்.​ ​​ ​ ​ மணிக்​க​ணக்​காக டிவி மற்​றும் இணை​ய​த​ளங்​க​ளின் முன் அம​ரும் பெரும்​பா​லன இளை​ஞர்​கள் மன​அ​ழுத்​தத்​தால் பாதிக்​கப்​ப​டு​வ​தா​க​வும்,​​ தவ​றான வழி​க​ளில் செல்​வ​தா​க​வும்,​​ சிலர் தற்​கொலை செய்து கொள்​ளும் நிலைக்​குத் தள்​ளப்​ப​டு​வ​தா​க​வும் மருத்​து​வர்​கள் கூறு​கின்​ற​னர்.​ ​​ ​

சுற்​றத்​தோ​டும்,​​ உற​வு​க​ளோ​டும் வாழ்ந்​த​வர்​கள் அக்​கால மனி​தர்​கள்.​ தொலைக்​காட்​சி​யோ​டும்,​​ இணை​யத்​தோ​டும் வாழ்ந்து கொண்​டி​ருக்​கி​ற​வர்​கள் இக்​கால மனி​தர்​கள்.​​ ​ ​ இன்​றைய இளை​ஞர்​கள் விளை​யாட்​டுப் போட்​டி​க​ளில் பங்​கேற்​ப​தை​விட,​​ அதைப் பார்த்து ரசிப்​ப​தைத்​தான் விரும்​பு​கின்​ற​னர்.​ இதன்​வி​ளைவு கிரிக்​கெட் தவிர மற்ற விளை​யாட்​டு​க​ளில் மெச்​சு​கின்ற அள​வுக்கு இந்​தி​யர் யாரும் இல்லை.​ ​ இந்​தி​யா​வின் தேசிய விளை​யாட்​டான ஹாக்​கி​யின் நிலையோ மிக​வும் பரி​தா​பத்​துக்​கு​ரி​யது.​​ ​ ​ 

உலக வரை​ப​டத்​தில் ஒளிந்​தி​ருக்​கும் நாடு​கள் கூட ஒலிம்​பிக்​கில் கோப்​பையை வென்ற நாடு​க​ளின் பட்​டிய​லில் ஒளிர்​கி​றது.​ ஆனால் உல​கின் இரண்​டா​வது பெரிய மக்​கள் தொகையை கொண்ட இந்​தி​யா​வின் நிலையோ வெற்​றிப்​பட்​டிய​லில் தேடும் நிலை​யில் தான் இருக்​கி​றது.​

2 கருத்துகள்:

vinu சொன்னது…

பல குடும்பம் சிரழிந்தர்க்கு கரணம் தொலைகாட்சி நாடகங்கள் தான் . கள்ள காதல் அதிகரிக்க ஒரே காரணம் தொலைகாட்சி நாடகங்கள் தான். குடும்ப பெண்களை சீரழித்தது தொலைகாட்சி நாடகங்கள் தான். உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டுமானால் ,முதலில் தொலைகாட்சியை நிறுத்துங்கள் .. முக்கியமாக அதில் வரும் நாடகங்களை பார்காதிர்கள் .
உங்கள் குடும்பத்தில் ஏற்படும் அணைத்து மன பிரச்சனைகளுக்கும் காரணம் தொலைகாட்சி நாடகங்கள் தான்.

G VARADHARAJAN சொன்னது…

அபாரமான அலசல் தொலைக்காட்சியால தொலைந்து போனது மன நிமமதியும் இன்பமயமான வாழ்க்கையும் தான பண்டிகைகளை மக்கள் தொலைகாட்சி துணையுடன் தான கொண்டாடுவது வெட்ககேடான விடயம்