துபையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், இந்தியா எந்த அளவு பாதிக்கப்படும்? துபை அரசுக்குச் சொந்தமான, "துபை வேர்ல்டு' நிதி நிறுவனம் 5,900 கோடி டாலர் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு மேலும் காலஅவகாசம் கோரியுள்ளது. ஏற்கெனவே பொருளாதார மந்த நிலையில் சிக்கியுள்ள உலக நாடுகள் அதை ஓர் அபாய அறிவிப்பாகப் பார்த்ததில் வியப்பில்லை.
எ னவே, இச் செய்தி உலகின் முக்கிய பங்குச் சந்தைகள் அனைத்தையும் உலுக்கிவிட்டது. நவம்பர் 27 வெள்ளிக்கிழமை அன்று 223 புள்ளிகள் சரிந்தன. குறிப்பாக, கட்டுமானத்துறை மற்றும் வங்கித்துறை பங்குகள் பெரிதும் சரிந்தன. துபையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி இந்தியாவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து சரிவு கட்டுக்குள் வந்தது.
துபையில் நேர்ந்தது என்ன? "துபை வேர்ல்டு' நிதி நிறுவனம் கட்டுமானத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், சில ஆண்டுகளுக்கு முன் 8000 கோடி டாலர் அளவுக்குக் கடன் வாங்கியிருந்தது. இத்தொகையைக் கொண்டு, நான்காண்டு காலத்துக்குக் கட்டுமானப் பணிகளை முடுக்கிவிட இந்த நிறுவனம் திட்டம் தீட்டியிருந்தது. இடையில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்தநிலை, மற்ற நாடுகளைப் போலவே, துபையின் ரியல் எஸ்டேட் துறையைப் பாதித்தது.
2008-ம் ஆண்டு வீடுகளின் விலை உச்ச நிலையில் இருந்தது. சர்வதேச நிதி நெருக்கடியின் விளைவாக விலைகள் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு வீழ்ச்சி அடைந்தன. இதன் தொடர்விளைவாக 8000 கோடி டாலர் கடனில், செலுத்த வேண்டிய 5900 கோடி டாலர் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் கோரியுள்ளது, துபை வேர்ல்டு நிதி நிறுவனம்.
இது சர்வதேச அளவில் ஓர் அதிர்ச்சி அலையைத் தோற்றுவித்துள்ளது. காரணம், பல நாடுகள் இப்போதுதான் மந்த நிலையிலிருந்து சிறிது, சிறிதாக மீட்சி அடைந்து வருகின்றன. வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழி உடைந்துவிடக் கூடாதே என்ற அச்சம் பல நாடுகளை கௌவிக்கொண்டுள்ளது. சர்வதேச அளவில் பங்கு விலைகள் மட்டும் அல்லாமல், கச்சா எண்ணெய் விலையும் சரிந்துள்ளது.
எனினும், வளைகுடா நாடுகளில், துபைக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தாலும்,எண்ணெய் வளம் மிகுந்த அபுதாபி, டோஹா போன்ற நாடுகள் செல்வச் செழிப்புடன் வலுவான நிலையில் உள்ளன. இதனால் நிதி நெருக்கடியைச் சந்திக்கும் துபைக்கு அபுதாபி உதவக்கூடும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலை யில், துபையில் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கல், இந்தியாவைப் பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்படுவது இயல்பே. கடும் பாதிப்பு இருக்காது என்பதே பல வல்லுநர்களின் மதிப்பீடு. அதிலும் குறிப்பாக, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியைப் பாதிக்காது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பணம் அனுப்புவதிலோ அல்லது இங்குள்ள உறவினர்கள் பெறுவதிலோ சிரமம் இருக்காது என்று மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சுமார் 50 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் இந்தியாவில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 46,000 கோடி ரூபாய் அளவுக்கு அனுப்புகிறார்கள். இதில் சுணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.அதேபோல், துபைக்கு இந்திய ஏற்றுமதி சரிவதற்கான சாத்தியம் இல்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா கூறியிருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.
2008-2009-ம் ஆண்டில் 2400 கோடி டாலர்கள் மதிப்பில் இந்தியப் பொருள்கள் ஏற்றுமதி ஆனது. இந்த ஏற்றுமதி அளவை நடப்பாண்டில் மேலும் அதிகரிக்க வேண்டும் என்னும் இந்திய ஏற்றுமதியாளர்களின் இலக்கு எந்த அளவு கைகூடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையை எடுத்துக்கொண்டோமானால், துபை நெருக்கடியின் விளைவாக இந்தியாவில் இந்தத் துறையினருக்கு உடனடி பாதிப்பு இராது என்பதே முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் கணிப்பாக உள்ளது.

முன்னதாக ஏற்பட்டிருந்த மந்தநிலையிலிருந்து மீட்சி அடைந்து வரும் இத்துறையினருக்கு இது ஆறுதல் அளிக்கக்கூடிய கணிப்பு எனலாம்.
அதேசமயம், இந்தித் திரை உலகத்துக்கு துபை நிகழ்வு கொஞ்சம் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். காரணம், இத்துறையினருக்கு வசூல் ஆகும் வெளிநாட்டு வருவாயில் 40 முதல் 45 சதவீதம் துபையிலிருந்து தான் கிடைக்கிறது.
அதேசமயம், இந்தித் திரை உலகத்துக்கு துபை நிகழ்வு கொஞ்சம் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். காரணம், இத்துறையினருக்கு வசூல் ஆகும் வெளிநாட்டு வருவாயில் 40 முதல் 45 சதவீதம் துபையிலிருந்து தான் கிடைக்கிறது.
சரி, துபையில் வாழும் இந்தியர்கள் நிலை என்ன? துபை பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு கணிசமானது என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போதைய நிலையில் அந்த நாட்டில் ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடுபிடிக்க சிலகாலம் ஆகலாம். எனவே அத்துறையில் முதலீடு செய்துள்ள இந்தியர்கள் பொறுமை காக்க வேண்டி இருக்கும்.
தற்போதைய நிலையில் அந்த நாட்டில் ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடுபிடிக்க சிலகாலம் ஆகலாம். எனவே அத்துறையில் முதலீடு செய்துள்ள இந்தியர்கள் பொறுமை காக்க வேண்டி இருக்கும்.
வீடுகள் விற்பனை 2008-ம் ஆண்டு பிற்பகுதியில் 50 சதவீதம் அளவு சரிந்தது. அப்படி, விற்பனை ஆன வீடுகள் மற்றும் கட்டடங்களின் பெரும் பகுதியை இந்தியர்கள்தான் வாங்கி வந்தனர் என்பது சுவையான செய்தி. இந்தத் தகவலைத் தருவது துபை நில விற்பனைத் துறை.
பொதுவாக, துபையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், 20 சதவிகிதம் பிரிட்டிஷ் குடிமக்களும், 14 சதவீதம் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களும், 11 சதவீதம் இரானியர்களும் வாங்கியுள்ளார்கள் என்று துபை அரசு தெரிவிக்கிறது.

"வில்லா' எனப்படும் தனி வீடுகளைப் பொருத்தவரை 21 சதவீத வீடுகள் இந்தியர்களுக்குச் சொந்தமானவை. ஒட் டுமொத்தமாகப் பார்க்கும்போது, துபை நெருக்கடியின் விளைவாக இந்தியா பாதிக்கப்படாமல் போனதற்குக் காரணம், இந்திய வங்கிகள் துபை வேர்ல்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ள கடன் தொகை அதிகம் அல்ல. பாரத ஸ்டேட் வங்கி ரூ. 1,500 கோடி கடன் வழங்கியுள்ளது. இது அந்த வங்கி வழங்கியுள்ள மொத்த கடன் அளவில் வெறும் 0.3 சதவீதம் மட்டுமே. அதேபோல், இன்னொரு அரசுடமை வங்கியான, பேங்க் ஆப் பரோடா சுமார் 930 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி துபை வேர்ல்டு நிறுவனத்துக்குக் கடன் வழங்கியிருக்கக் கூடும். இதுபற்றிய உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆக, இந்திய வங்கிகளின் கடன் தொகை துபை நிறுவனத்துக்கு மிதமான அளவில் மட்டுமே உள்ளது என்பது வெளிப்படை.
÷பா ரத ரிசர்வ் வங்கி இந்தத் தகவலை வங்கிகளிடமிருந்து திரட்டிக் கொண்டுள்ளது. சில தினங்களில் கடன் அளவு துல்லியமாகத் தெரியவரும்.
÷வங்கிக் கடனைத் தவிர, இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் துபையில் செய்திருக்கக்கூடிய முதலீடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய வங்கிகள் துபை ரியல் எஸ்டேட் கம்பெனிகளுக்கு சற்று தாராளமாகவே கடன் வழங்கியுள்ளன. ஆனால், இந்திய வங்கிகள் அப்படிச் செய்யாததற்கு பாரத ரிசர்வ் வங்கியின் சரியான, தெளிவான வழிகாட்டுதல்களும் நெறிமுறைகளுமே காரணம் என்றால் மிகையல்ல.
ஆக, 1997-ல் நிகழ்ந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியா, தென் கொரியா, தாய்லாந்து நாடுகளின் பொருளாதாரச் சரிவும் சரி; 2001-ல் நிகழ்ந்த ஆர்ஜென்டீனா நிதி நெருக்கடியானாலும் சரி; இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாம் எதிர்கொண்ட மிகப்பெரும் சர்வதேச நிதி நெருக்கடியானாலும் சரி; தற்போதைய துபை நிதி நெருக்கடியானாலும் சரி, வங்கிகள் "கன்ஸர்வேடிஸம்' என்னும் "மிதவாத' கோட்பாடுகளைக் கடைப்பிடித்திருந்தால் அந்த நாடுகள் நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் இருந்திருக்கும் என்பது திண்ணம்.
நன்றி:
எஸ்.கோபாலகிருஷ்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக