வெள்ளி, 11 டிசம்பர், 2009

இணையத்திலும் செய்தி சண்டை




காசு கொடுத்​தால்​தான் செய்தி கிடைக்​கும் என்​கிற நிலை இப்​போது இல்லை.​ இணை​யம் வந்த பிறகு செய்​தி​களை இல​வ​ச​மா​கத் தெரிந்​து​கொள்ள முடி​வ​து​டன் செய்​தி​களை பல்​வேறு ஊட​கங்​கள் எந்​தெந்​தக் கோணத்​தில் வெளி​யி​டு​கின்​றன என்​பதை ஒப்​பிட்​டுப் பார்க்​க​வும் வழி இருக்​கி​றது.​ செய்​தி​கள் திரட்​டப்​பட்டு திறந்​த​வெ​ளி​யில் கொட்​டப்​ப​டு​கின்​றன.​ யாருக்கு என்ன விருப்​பமோ அதை எடுத்​துக் கொள்ள வேண்​டி​ய​து​தான்.​

பெ​ரும்​பா​லான செய்தி இணைய தளங்​க​ளில் உல​வு​வ​தற்கு எந்​தக் கட்​ட​ண​மும் கிடை​யாது.​ அச்​சில் வரும் செய்​தித்​தாள்​கள் ​ இது​போன்ற இணைய தளங்​களை நடத்​தும்​போது,​​ விளம்​பர வரு​வாய் என்​பது யானைப் பசிக்​குச் சோளப்​பொறி போன்​ற​து​தான்.​ இத​னால் சில இணைய தளங்​கள் செய்​தி​க​ளைப் படிப்​ப​தற்கு சந்தா வசூ​லிக்​கின்​றன.​ சில இணைய தளங்​க​ளில் பிரத்​யே​கச் செய்​தி​க​ளுக்கு மட்​டும் சந்தா செலுத்​தி​னால் போதும்.​ ஆனால்,​​ இணை​யச் செய்​தித் திரட்​டி​கள் இதற்​கெல்​லாம் வெடி வைக்​கின்​றன.​ செய்தி இணைய தளங்​க​ளில் உள்ள செய்​தி​க​ளைத் திரட்​டி​கள் இல​வ​ச​மாக வெளி​யிட்​டு​வி​டு​வ​தால்,​​ சந்தா வசூ​லிப்​பது என்​பதே அர்த்​த​மில்​லா​த​தா​கி​வி​டு​கி​றது.​
 

பெ ​ரும்​பா​லான இணை​யச் சேவை​க​ளைப் போன்றே,​​ செய்​தித் திரட்​டி​க​ளி​லும் முத​லி​டத்​தில் இருப்​பது கூகுள் நிறு​வ​னம்​தான்.​ செய்​தி​க​ளைத் தேடு​வ​தற்​காக இணை​யத்​தில் மேய்​ப​வர்​கள் பெரும்​பா​லும் பயன்​ப​டுத்​து​வது கூகுள் நியூஸ் எனப்​ப​டும் கூகு​ளின் செய்​தித் திரட்டி சேவை​தான்.​ இந்​தச் சேவை​யில் இணைத்​துக் கொள்​ளும்​படி செய்தி இணைய தளங்​கள் விண்​ணப்​பித்​து​விட்​டால்,​​ முக்​கி​யச் செய்​தி​க​ளின் பட்​டிய​லில் அந்​தக் குறிப்​பிட்ட இணை​ய​த​ளத்​தில் வெளி​யி​டப்​ப​டும் செய்​தி​யும் பட்டிய​லி​டப்​ப​டும்.​ அதன் மூலம் இணை​ய​த​ளத்​தைப் பார்ப்​ப​வர்​க​ளின் எண்​ணிக்கை அதி​க​ரிக்​கும்.​ அது விளம்​பர வரு​வாய்க்கு உத​வும்.​ பொது​வாக,​​ இந்​தத் திரட்​டி​கள் வழி​யாக இணைய தளங்​க​ளுக்கு வரு​வோ​ரின் விகி​தம் கிட்​டத்​தட்ட பாதி அள​வுக்கு இருப்​ப​தால்,​​ இவற்​றில் இணைத்​துக் கொள்​ளாத செய்தி இணைய தளங்​களே இல்லை என​லாம்.​
 

அ​தே​போல்,​​ எல்லா இணைய தளங்​க​ளி​லு​முள்ள செய்​தி​க​ளை​யும் ஒரே இடத்​தில் பார்க்க முடி​யும் என்​ப​தால் நேர​டி​யாக இணைய தளங்​க​ளுக்​குச் செல்​வ​தை​விட திரட்​டி​க​ளைப் பார்​வை​யி​டு​வ​தையே இன்​றைய இணைய வாச​கர்​கள் வழக்​க​மாக வைத்​தி​ருக்​கின்​ற​னர்.​ இத​னால்,​​ திரட்​டி​க​ளும் வரு​வாய் ஈட்​டிக்​கொள்​கின்​றன.​ ஒட்​டு​மொத்​த​மா​கப் பார்த்​தால்,​​ செய்தி இணைய தளங்​க​ளும் செய்​தித் திரட்​டி​க​ளும் ஒன்​றை​யொன்று சார்ந்​தவை.​ இந்​தச் சார்​புத் தன்​மை​யில் சம​நிலை எப்​போ​தெல்​லாம் தவ​றிப்​போ​கி​றதோ,​​ அப்​போ​தெல்​லாம் இரு தரப்​புக்​கும் இடையே மோதல்​கள் ஏற்​ப​டு​கின்​றன.​
 

ஊ​டக பெரும்​புள்​ளி​யான ரூபர்ட் முர்​டாக் அண்​மை​யில் கூகுள் நிறு​வ​னத்​து​டன் மோதி​ய​தால்,​​ விவ​கா​ரம் வெளிச்​சத்​துக்கு வந்​தது.​ அவ​ருக்​குச் சொந்​த​மான சில இணைய தளங்​க​ளி​லுள்ள சந்தா செலுத்​திப் பார்க்க வேண்​டிய பங்​கங்​களை கூகுள் இல​வ​ச​மாக வெளி​யிட்டு வந்​த​தால் இந்​தப் பிரச்னை உரு​வா​னது.​ முர்​டாக்​கின் கோரிக்​கை​களை கூகுள் கண்​டு​கொள்​ள​வில்லை.​ இத​னால் அதி​ருப்​தி​ய​டைந்த அவர்,​​ தனது முக்​கிய செய்தி இணைய தளங்​களை கூகுள் செய்​தித் திரட்​டி​யின் பட்​டியலி​லி​ருந்து எடுத்​து​வி​டப்​போ​வ​தாக அறி​வித்​தார்.​ ஆனா​லும் கூகுள் அசைந்து கொடுக்​க​வில்லை.​ எங்​கள் வளர்ச்​சிக்கு யாரும் தேவை​யில்லை என இரு​த​ரப்​புமே பிடி​வா​த​​மாக இருந்து வந்​தன.​
 

இப்​ப​டி​யொரு சூழ்​நி​லை​யைப் பயன்​ப​டுத்தி,​​ கூகு​ளில் இருந்து இணைய தளச் செய்தி வெளி​யீட்​டா​ளர்​க​ளைப் பிரிப்​ப​தற்கு வியூ​கம் வகுத்​தது மைக்​ரோ​சா​ஃப்ட்.​ கூகு​ளில் இருந்து வெளி​யேறி தனது பிங் திரட்​டி​யில் இணைத்​துக் கொள்​வ​தற்​காக செய்தி வெளி​யீட்​டா​ளர்​க​ளு​டன் அந்த நிறு​வ​னம் பேரம் பேசி வரு​வ​தா​க​வும் செய்தி வெளி​யா​னது.​ முக்​கி​யச் செய்தி இணைய தளங்​க​ளிலி​ருந்து பிரத்​யே​கச் செய்​தி​க​ளைப் பெற்று அவற்றை பிங் திரட்​டி​யில் இணைத்​துக் கொள்ள மைக்​ரோ​சா​ஃப்ட் முயன்று வரு​வ​தா​கக் கூறப்​பட்​டது.​ பிங் தேடு​பொ​றியை அறி​மு​கம் செய்த பிறகு தேடல் மற்​றும் விளம்​ப​ரச் சந்​தை​யில் மைக்​ரோ​சா​ஃப்ட் வேக​மாக முன்​னே​றி​யி​ருப்​ப​தா​க​வும் புள்ளி விவ​ரங்​கள் வெளி​யி​டப்​பட்​டன.​
மைக்​ரோ​சா​ஃப்​டின் காய் நகர்த்​தல்​கள் கூகுள் செய்​தித் திரட்​டியை பெரு​ம​ளவு பாதிக்​கச் செய்​யும் என்று கரு​தப்​பட்​டது.​
 

இ ​தற்கு மேல் பிடி​வா​த​மாக இருந்​தால்,​​ வரு​வாயை இழக்க வேண்​டி​யி​ருக்​கும் என்​பதை உணர்ந்த கூகுள்,​​ தற்​போது புதிய திட்​டத்தை வெளி​யிட்​டி​ருக்​கி​றது.​ இதன்​படி,​​ சந்தா செலுத்​திப் பார்க்​க​வேண்​டிய இணை​ய​ த​ளங்​க​ளில் 5 பக்​கங்​களை மட்​டுமே இல​வ​ச​மா​கப் பார்க்க அனு​ம​திக்​கும் வகை​யில் திரட்​டியை மாற்றி அமைத்​தி​ருக்​கி​றது.​ ​ அதற்கு மேல் பார்க்க முயன்​றால் சம்​பந்​தப்​பட்ட இணைய தளத்​தின் சந்தா செலுத்​து​வ​தற்​கான பக்​கம் காட்​டப்​ப​டும்.​ இதற்​காக "ஃபர்ஸ்ட் க்ளிக் ஃப்ரீ' என்​கிற சேவையை கூகுள் தொடங்​கி​யி​ருக்​கி​றது.​
 

ஆ​யி​னும் இதெல்​லாம் இணைய தளச் செய்தி வெளி​யீட்​டா​ளர்​க​ளைச் திருப்​தி​ய​டைச் செய்​யாது என்றே கரு​தப்​ப​டு​கி​றது.​ ஒரு​வர் ஓர் இணைய தளத்​தில் 5 பக்​கங்​க​ளுக்கு மேல் பார்ப்​பது என்​பதே அரி​து​தான். ​ அப்​ப​டிப் பார்க்க வேண்​டிய தேவை ஏற்​பட்​டால்,​​ வேறு இணைய தளத்​துக்​குச் சென்று அங்கு இல​வ​ச​மா​கக் கிடைக்​கக்​கூ​டிய 5 பக்​கங்​க​ளைப் பார்க்க முடி​யும்.​ இத​னால்,​​ இல​வ​ச​மாக 5 பங்​கங்​களை அனு​ம​திப்​ப​தென்​பது இந்த விவ​கா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைத்​த​தா​கி​வி​டாது.​
 

 ஊட​கங்​க​ளுக்கு எதி​ரான மோத​லில் தனது நிலையி​லி​ருந்து கூகுள் இறங்கி வந்​தி​ருப்​ப​தற்கு முக்​கி​யக் கார​ணம்,​​ இந்​தப் போட்​டி​யில் மைக்​ரோ​சா​ஃப்ட் நுழைந்​து​வி​டக்​கூ​டாது என்​ப​து​தான்.​ அதன் நோக்​க​மும் கிட்​டத்​தட்ட நிறை​வே​றி​விட்​டது.​ ஆனால்,​​ சண்டை முடிந்​து​வி​ட​வில்லை;​ சமா​தா​னம் பேச​வும் ஆளில்லை.​

நன்றி : 
திரு.மணிகண்டன்

கருத்துகள் இல்லை: