"பாபர் மசூதியை இடித்தது பா.ஜ .,மற்றும் சங்கபரிவார் அமைப்புகள்தான். இதை செய்ததற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம்' என்று, சுஷ்மா சுவராஜ் ஆவேசமாகக் கூறினார்.
லிபரான் கமிஷன் அறிக்கை மீதான விவாதம் நேற்று இரண்டாவது நாளாக பார்லி மென்டில் நடைபெற்றது. லோக்சபாவில் நடைபெற்ற இந்த விவாதத்தில், லோக் சபா பா.ஜ .,வின் துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, மத்திய அரசுக்கு சவால் விடும்வகையில் ஆவேசமாக பேசினார்.
அவர் தனது உரையில் பேசியதாவது:மசூதி இடிக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. இதுபற்றி லிபரான் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடிப்பு சம்பவத்தில் சதி இருந்ததா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ, தனது பதிலாக சதி நடந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியவில்லை என்று தெரிவித்துவிட்டதாக, லிபரான் அறிக்கை கூறுகிறது.அதேபோல, மத்திய மாநில உளவு அமைப்புகளும் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தர மறுத்துவிட்டதாகவும், லிபரான் குறிப்பிட்டுள்ளார். லிபரான் விசாரணை கமிஷன் முன்பாக ஆஜரான அரசியல் தலைவர்கள் அளித்த வாக்குமூலங்களை வைத்துக் கொண்டும், சதி நடைபெற்றதா இல்லையா என்பதை நிரூபிக்க முடியவில்லை என்று லிபரான் கூறுகிறார். அத்வானி போன்ற தலைவர்களை குறுக்குவிசாரணை செய்த முஸ்லிம் அமைப்பு தலைவர்கள் அளித்த வாக்குமூலத்தில் இருந்தும் சதி நடைபெற்றதை நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறார். இவ்வாறு நிரூபணம் செய்யவே முடியாத நிலையில், வெறுமனே பா.ஜ., மீது சதிக் குற்றச்சாட்டு கூறுவது நியாயமற்றது. எந்த முகாந்திரமும் இல்லாமல் சதி செய்து மசூதி இடிக்கப்பட்டதாக கூறுவது தவறு.
லிபரான் அறிக்கை என்பது அரசியல் காரணங்களுக்காக பொய்களை கொண்டு ஜோடிக்கப்பட்ட ஒரு ஆவணமே தவிர, இது விசாரணை அறிக்கை அல்ல. இப்போதும் கூறுகிறேன். சவாலாகவே கூறுகிறேன். நாங்கள்தான் மசூதியை இடித்தோம். பா.ஜ., மற்றும் சங்கபரிவார் அமைப்புகள் தான் மசூதியை இடித்தோம். திட்டமிட்டு செய்யவில்லை. மக்களின் எழுச்சியின் விளைவே அது. என்ன தண்டனை தருவீர்கள். எங்களை உங்களால் தண்டிக்க முடியுமானால் தண்டித்துப் பாருங்கள். தண்டனையை ஏற்க தயாராக உள்ளோம். அறிக்கையை தயார் செய்த லிபரான் ஒரு பேட்டியில், வாஜ்பாயை நல்லவர் என்று கூறுகிறார். அதே வாஜ்பாயை மற்றொரு பேட்டியில் நிர்வாக இயக்குனராக உவமைப்படுத்தி அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது இந்த அறிக்கையை தயார் செய்தது உண்மையில் லிபரான்தானா அல்லது காங்கிரஸ் கட்சியா என்ற சந்தேகம் வருகிறது.
இந்த பிரச்னைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பா.ஜ., என்றுமே துணை நிற்கும். மாறாக இதுபோன்ற அறிக் கையினால் நாட்டில் மதக்கலவரங்கள் நடைபெறவே வாய்ப்பு உருவாகியுள்ளது. லிபரான் தனது அறிக்கையில் ஒரு இடத்தில், இந்துக்களின் நலன்களுக்கு குரல் கொடுக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கபரிவார் போன்ற அமைப்புகள் இருப்பதுபோல, முஸ்லிம்களுக்கு எந்த அமைப்பும் இல்லை என்று கூறுகிறார். இதெல்லாம் பொறுப்பற்ற வார்த்தைகள். ஒருதலை பட்சமான வரிகள். இந்துக்களுடன் முஸ்லிம் களை மோதவிடுவது போன்று உள்ளது இந்த அறிக்கை. இதெல் லாம் நாட்டுக்கு நல்லதல்ல.இவ்வாறு சுஷ்மா பேசினார்.
3 கருத்துகள்:
இராமனின் பெயரால் மீண்டுமொரு முறை ஒட்டு பொறுக்க.........பாஜக வாய்ப்பு கேட்கிறது....
காங்கிரசு அந்த வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது என்று தயங்கி நிற்கிறது அவ்வளவே......
அதற்காக காங்கிரசு மதச்சார்பற்ற கொள்கைவாத கட்சி என்று நினைத்துக் கொள்ளக்கூடாது...
காங்கிரசு பாஜக நிலையில் இருந்தால்....அது இராமனின் பெயரால் அதுவும் ஓட்டுப்பொறுக்க தயாராகவிடும்...........
இவங்களும் கூட்டு களவாணிகள்தானே
Well said Madam Susma.
We are with you.
Anand
சுஷ்மாவுக்கு ஆதரவா?
சுஷ்மா அம்மையார்...
அங்கே இராமர் கோயில் கட்டியே தீருவோம்..அதற்காகவே மக்கள் பாபர் கட்டிய மசூதி இடிக்கப்பட்டது என்கிறார்.......
பாபர் மசூதி கட்டிக் கொண்டிருந்த பொழுது.............
இராமன் எங்கே போயிருந்தார்........
பாபர் தலையை முடிந்தா சீவியிருக்க வேண்டியதுதானே..........
பாபரையே ஒன்றும் செய்ய முடியாத இராமன் கடவுள்...அவனுக்கு கோயில் கட்டுவோம்ங்கிறது எவ்வகையிலான நியாயம்
கருத்துரையிடுக