ஸ்டாக்ஹோம்: 2009ம் ஆண்டிற்கான வேதியியல் துறை கண்டுபிடிப்புக்காக சிதம்பரத்தை சேர்ந்த தமிழரான, விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் உள்ள எம்.ஆர்.சி., ஆய்வகத்தில் ரைபோசோம் தொடர்பான இவரது ஆராய்ச்சிக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. இவருடன் இந்த விருதை அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் ஏ.ஸ்டீட்ஸ் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த அடா இ.யோனத் ஆகியோர் பகிர்ந்து கொள்கிறார்கள். தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 1952ல் சிதம்பரத்தில் பிறந்தவர். தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இதற்கு முன்னராக தமிழகத்தை சேர்ந்த சர் சி.வி.ராமன் மற்றும் சுப்ரமணியம் சந்திரசேகர் ஆகியோர் நோபல் பரிசு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 கருத்து:
தமிழர் ஒருவர் விருது பெற்றது நல்லதுதான் . நாட்டில் இல்லாத, அடுத்த நாட்டு குடிமகனாக இருக்கும், ஒரு தமிழர் விருதை பெற்றார் என்றவுடன், எப்படி நாம் பெருமை பட்டுள்ளோம் என்று காட்டிக்கொள்கிறோமோ, அதே அளவு ஈழத்தில் நம் சக தமிழன் நாய்களை விட கேவலமாக , பன்றிகளை விட கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு புல்டோசர்களை கொண்டு உயிரோடு ஏற்றி கொல்லப்பட்டதற்கு அசிங்கப்பட வேண்டும், வெட்கப்பட வேண்டும்.
இன்னும் விலங்குகளை போல மூன்று லக்ஷ்ம பேர் தமிழர்கள்தாம் திறந்தவெளி சிறையில் உள்ளார்கள். அவர்களை நினைத்து கொதிக்க வேண்டும்.
விருது பெற்ற தமிழரை நினைத்து கௌரவபட்டுகொல்லுவோம்.
சிறையில் வாழும் தமிழர்களை நினைத்து கொதித்து எழுவோம்.
விருதுக்க்காகவேனும் , தமிழனை பாராட்ட கூடிய தகுதி சோனியா நாய்க்கும் காங்கிரஸ் கழுதைக்கும் கிடையாது.
எனென்றால் இந்த நாயும் கழுதையும்தான் தமிழன் வெட்டவெளி சிறையில் இர்ருப்பதற்கு முழு காரணமாநதுகள்.
தோழர்
www.mdmkonline.com
கருத்துரையிடுக