வியாழன், 28 ஜனவரி, 2010

பெற்ற பிள்ளைகளும் !முதியோர் இல்லங்களும்?




 

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை 
சொல் மிக்க மந்திரம் இல்லை"

எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இவை.இன்றைக்கு இந்த வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல தோன்றும்.காரணம் பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்ற கொடுமைதான். இந்த அவலம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் போகிறது.

சிந்தித்து பாருங்கள் அருமை சகோதர,சகோதிரிகளே 
உங்களை இந்த உலகிற்கு தந்தவர்கள் உங்கள் பெற்றோர்களே.உங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் அவர்களே.
அவர்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா?

உன்னை வயிற்றில் சுமக்க ஆரம்பித்த நாளிலிருந்து பெற்று எடுக்கின்ற வரை அந்த தாய்ப்படும் கஷ்டங்கள்தான் எத்தனை,எத்தனை. உன்னை நல்ல முறையில் பெற்றெடுக்க அந்த தாய் வேண்டாத தெய்வங்கள் உண்டா.போகாத புண்ணிய தளங்கள் உண்டா.


கருவுற்று இருக்கின்ற அந்த நேரத்தில் உணவு அருந்த மணம் இல்லை என்றாலும்கூட வயிற்றிலிருக்கும் உனக்கு ஊட்ட சத்து வேண்டும் என்பதற்காக  உணவு அருந்த்துவாள் உன் தாய்.

கண்ணின் மணியைப்போல் கருவுக்குள் 
உன்னை வைத்துக் காத்தவள் உன் தாய்.

நீ பிறந்ததும் உன்னை பார்த்து பரவசமடைந்து உன்னை வாரி அனைத்து,நெஞ்சில் வைத்து கொஞ்சி மகிழ்ந்த அந்த நெஞ்சை எட்டி உதைப்பது ஏன்?


நீ சிரித்தாள் அவளும் சிரித்து, நீ அழுதால் அவளும் அழுது,உனக்கு எது நல்லது,எது கெட்டது,என்று சொல்லி கொடுத்து,உன்னை சீராட்டி,பாராட்டி
வளர்த்த அந்த அன்னைக்கு நீ செய்யும் கைமாறு இதுதானா?


நீ பேச ஆரம்பித்து " அம்மா " என்று அழைக்கும் போது அதை கேட்ட மாத்திரத்தில் அந்த தாய் அடைகின்ற சந்தோசத்திற்கு அளவு உண்டா?
நீ தத்தி தத்தி நடை பயின்ற நாட்களில் சற்றே தடுமாறினாலும்,நெஞ்சம் பதறி உன்னை அந்த நெஞ்சோடு,வாஞ்சையுடன் அனைத்துகொள்ளும் அந்த பாசத்திற்கு ஈடு இணை உண்டா?




நீ நடை பயில ஆரம்பித்த அந்த நாட்களில் தந்தையின் கரம் பிடித்து நடந்த நாட்களை உன்னால் மறக்கமுடியுமா?

உன்னை தோளிலும்,முதுகிலும் தூக்கி சுமந்து தந்தை உன்னிடம் கொஞ்சி விளையாடிய அந்த நாட்களைத்தான் உன்னால் நினைக்காமல் இருக்க முடியுமா?


"தாயின் பாசம் தாய்ப்பாலுக்கு சமமானது.
களங்கமற்றது,கபடமற்றது,கலப்படமற்றது."

உங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கும் முன் 
ஒருகணம் சிந்தித்து பாருங்கள்.

இன்று நீங்கள் எடுக்கின்ற இந்த முடிவை வரும் காலங்களில் உங்கள் பிள்ளைகள் உங்கள் மீது (முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்துவிடுவது )எடுக்க மாற்றார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?


நீங்கள் எடுக்க நினைத்த இந்த முடிவைத்தானே உங்களின் பிள்ளைகளும் எடுப்பார்கள்.
தயவு செய்து பாசத்திற்கு,நேசத்திற்கும், உரிய அந்த பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்த்துவிடாதீர்கள்.

முதுமையை நேசியுங்கள், நமக்கும் முதுமை வரும் என்பதை எண்ணுங்கள்.
முதியோர்கள் நம் இல்லத்தில் (வீட்டில்)இருக்கவேண்டுமே தவிர 
" முதியோர் இல்லத்தில் " இருக்கக் கூடாது.


பகிர்ந்து கொள்ளுங்கள் : துன்பம் பாதியாகும்
புரிந்து கொள்ளுங்கள்   : இன்பம் இரட்டிப்பாகும்.


நம்பிக்கையுடன்
அபுல்பசர்.








2 கருத்துகள்:

Unknown சொன்னது…

//முதுமையை நேசியுங்கள், நமக்கும் முதுமை வரும் என்பதை எண்ணுங்கள்.//
நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

மறக்க முடியாத கருத்துக்கள்

அருமை .