ஹோட்டலை விட்டு ப்ரிட்னியும், மாக்ஸ் மார்ட்டினும் வெளியே வரும்போது நள்ளிரவை தாண்டி இருந்தது.நல்ல குளிர்.ப்ரிட்டினிக்கு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை.நண்பர் ஏராளம் உண்டு என்றாலும் யார் வீட்டுக்கும் போகவும் பிடிக்கவில்லை.ஓரிடத்தில் உட்காரவும் முடியாத அவஸ்தை.பதற்றமும் கலவர உணர்வும்,அடிவயிற்று பயமும் அவளை ஆக்கிரமித்திருந்தன.
என்ன ஆகும் மார்டின்? ஆயிரத்தி ஒன்றாவது முறையாக கேட்டாள்.
அமைதியாக இரு,நல்லதே நடக்கும் என்று மார்டின் சொன்னார்.
பிரிட்னிக்கு மட்டுமல்ல ....மார்டினுக்கும் அது அமில பரீட்சை.கவிஞனாக தன் வாழ்க்கையைத் தேர்வு செய்துகொண்டு ஸ்பெயினிலிருந்து புறப்பட்ட நாளாக ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்த கொக்கு அவர்.
நிறைய மேடை நாடகங்கள்,விளம்பரப் படங்கள், இசை ஆல்பங்களுக்கு எழுதிவிட்ட பிறகும் எதிர்பார்த்த அந்த பிரமாண்ட வெற்றி இன்னும் கிடைத்தபாடில்லை.
பிரிட்னிக்கு மட்டுமல்ல ....மார்டினுக்கும் அது அமில பரீட்சை.கவிஞனாக தன் வாழ்க்கையைத் தேர்வு செய்துகொண்டு ஸ்பெயினிலிருந்து புறப்பட்ட நாளாக ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்த கொக்கு அவர்.
நிறைய மேடை நாடகங்கள்,விளம்பரப் படங்கள், இசை ஆல்பங்களுக்கு எழுதிவிட்ட பிறகும் எதிர்பார்த்த அந்த பிரமாண்ட வெற்றி இன்னும் கிடைத்தபாடில்லை.
எதோ ஒன்று,என்னமோ ஒன்று குறுக்கே மரித்துப் புகழின் கழுத்தை நெரிக்கிறது. அது எது? தெரியவில்லை.தனக்கொரு பாடல் வேண்டும் என்று 18 வயது பிரிட்டனி,அவரிடம் கேட்டு வந்தபோது,பெரிதாக எந்த எதிபார்ப்பும் இல்லாமல்தான் பாடல் எழுதினார்.சின்ன பெண்,அழகாக,துருதுருவென இருக்கிறாள்,நன்றாக பாடுகிறாள், ஒருவேளை பெரிய ஆளாக வரக்கூடும் என்பதற்கு மேல் வேறெதையும் அவர் யோசிக்கவில்லை.
ஆனால் "ஆல்பம் ரெடி" என்று ஜிவ் ரெகார்டிங் கம்பெனியின் தலைமை நிர்வாகி போன் செய்து கூப்பிட்டு ஆல்பத்தை போட்டு காட்டிய போது,மார்ட்டினும்,பிரிட்டனியும் மட்டுமல்லாமல்,அந்த முதல் பிரதியை பார்த்த அத்தனை பேருமே வாயடைத்துப் போனார்கள்.
பெண்ணே,நீ உலகை ஆளப்போகிறாய்,ஜாக்கிரதையாக இரு,உடம்பை கெடுத்துக் கொள்ளாதே,குரலையும் கெடுத்துக்கொள்ளாதே."உன் ஆட்டமும்,பாட்டும்,பூமி சுற்றிக்கொண்டிருக்கும் வரை உலகைக் சுற்றிகொண்டிருக்கும" என்று தலைமை நிர்வாகி தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார் சோனி மியூசிக்கின் நியூயார்க் பிரிவு தலைவர்.
அதுதான் கனவை வளர்த்தது.அதுதான் அச்சத்தையும் கொடுத்தது.ஹிட் ஆகிவிட்டால் சரி.ஒருவேளை ஆகாவிட்டால்?
அடுத்த ஆல்பம் என்று புன்னகை செய்தார் மார்ட்டின்.
இல்லை மார்ட்டின்,நான் கடுமையாக உழைத்திருக்கிறேன்,ஆகையால் நான் ஜெயிப்பதுதான் நியாயம்.நினைவு தெரிந்த நாளாக நான் பாடிக் கொண்டும்,ஆடிக் கொண்டும்தான் இருக்கிறேன்.நான் ஒழுங்க்காக பள்ளிகூடம்கூட போகவில்லை.எனக்கு சமையல் தெரியாது.மற்ற பலரைப் போல என்னால் ஓரிடத்தில் வேலை பார்க்கவும் முடியாது.இசையை மட்டும் நம்பி நான் பிறந்திருக்கிறேன்.அதற்கு முழு நேர்மையுடன் உழைத்திருக்கிறேன்.
மார்ட்டினுக்கு அது இன்னொரு ஆல்பம்தான்.ப்ரிட்டனி ஸ்பியர் சுக்கோ
அதுதான் வாழ்க்கை.நிறைய சொல்லியிருந்தாள்.தன்னை பற்றி,இளமை காலங்கள் பற்றி,தன் குடும்பம் பற்றி. 8 வயதில் டி.வி.ஆடிசனுக்குப்
போன ப்ரிட்டனி தேர்வானதும் வயது காரணமாக் வாய்ப்பு மறுக்கப்பட்ட
பிரிட்னி, நாளெல்லாம்,பொழுதெல்லாம் நடன வகுப்புகளிலும், நாடக தியட்டர்களிலும் பயிற்சி,பயிற்சி...என்று பிசாசு மாதிரி பயின்றார் ப்ரிட்டனி.மடோனாவை கடவுளாக வழிபட்டார்.
எனக்கு அவர்தான் இன்ஸ்பிரேசன்.என்ன முயற்சி, என்ன அசுர சாதகம்,எப்பா!எப்பேர்பட்ட புகழ் அவருக்கு.உலகம் அவரது இசையைத்தான் ரசிக்கிறது.எனக்கு அதன் பின்னால் இருக்கும் உழைப்பு தெரியும்.அந்த உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.அதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்.
இது ஒரு தருணம்.அந்தரத்தில் கட்டப்பட்ட மாய நூலின்மீது நிற்கும் தருணம்.எண்ணி ஒரே நாள்.இதோ விடிந்ததும் ப்ரிட்டனியின் முதல் ஆல்பம் ரிலீஸ் ஆகிவிடும்.வெற்றியா,இல்லையா என்பது அடுத்த ஒரு மணி நேரத்தில் தெரிந்துவிடும்." ஜிவ் ரெகார்ட்ஸ் " பெயரில் வெளியிடும் " சோனி " நிறுவனம் உலகமெங்கும் பிரபலமானது.அதன் சக்தியும் வீச்சும் அபரிமிதமானது.அறிமுகங்கள் சோனியின் மூலமாக இருப்பதற்காக எத்தனை ஆயிரம் பேர் தவமிருக்கிறார்கள்.
ப்ரிட்டனிக்கு அந்த அதிர்ஷ்ட்டம் நிறையவே இருந்தது.எக்காரணம் கொண்டும் உப்புமா கம்பனிகள் மூலம் தனது ஆல்பம் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள். 18 வயதுக்கு அத்தனை தெளிவு ஆச்சரியமானது.போராடிக்கொண்டுதான் இருந்தாள் என்றாலும்,கிடைத்த குட்டி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
முயற்சிகளை விடாமல் தொடர்ந்தாள்.திரும்பத் திரும்ப சோனியின் கதவுகளை உடையுமளவுக்குத் தட்டி எழுப்பி,தன்னை நிரூபித்து அந்த வாய்ப்பை பெற்றிருந்தாள்.
ஜிம்னாஸ்டிக்ஸ் தெரிந்திருந்தது,டிஸ்னி சேனல் நிகழ்ச்சிகளில் நடித்திருந்தது,நியூயார்க் ப்ரொபசனல் பெர்போர்மிங் ஆர்ட்ஸ் பள்ளிகூடத்தில் படித்தது," இன்னொசென்ஸ் " என்னும் இசைக்குழுவில் சில காலம் பாடியது, எல்லாம் அவளுக்கு உதவி செய்தன.
எல்லாவற்றைவிடவும் உதவியது ப்ரிட்டனியின் அபாரமான் தன்னம்பிக்கைதான்." நான் அழகானவள்,நான் இளமையானவள்,நான் திறமைசாலி,நான் கடுமையான உழைப்பாளி.எனவே நான் ஜெயித்தாக வேண்டும்".
ஆனாலும் அதிர்ஷ்ட்டம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா?
வீட்டில் அப்பாவும்,அம்மாவும் எப்போதாவது கவலை மேலோங்கினால் மெதுவாக கேட்பார்கள். அப்படி ஏதும் இருபதாக எனக்குக் தெரியவில்லை என்று சொல்லிவிடுவாள்.
அந்த முதல் ஆல்பம் " Hit Me Baby One More Time " 1998 இறுதியில் வெளியான தினம் வரை நம்பிக்கை மட்டுமே அவளது உணவாக இருந்தது.ஒரு கணமும் தனது நம்பிக்கையை அவள் தவற விட்டதில்லை. மிக நிச்சயமாக நம்பினாள்.
நான் தகுதியானவள்.எனவே நான் நிச்சயம் ஜெயிப்பேன்.
ஆல்பம் வெளியானது. அவ்வளவுதான் " ஐயோ,யார் இந்த பொண்ணு?
செம அழகாக இருக்கிறாளே? குட்டை பாவாடைச் சட்டையும் ரெட்டை பின்னலுமாக என்ன குதியாட்டம் போடுகிறாள்! குரலா இது, அதிரும் தந்திக்கருவி மாதிரி அல்லவா இருக்கிறது. இந்த பேஸ் வாய்ஸ் ஒரு வரபிரசாதம்.
எத்தனை ஆழத்திற்குப் போகிறாள்.அங்கிருந்து என்னமாய்த் தாவி மேலே உயர்கிறது அந்த குரல்.ஐயோ என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறதே! உலகமே தலைக்குமேல் வைத்துக் கொண்டாடத்
தொடங்கிவிட்டது.
சோனி அறிவித்துவிட்டது.அன்றைக்கு மாலையே ப்ரிட்டனி ஸ்பியர்ஸ்
ஓர் உலக நட்சத்திரமாகிபோனால்.ஹிட் மிகப்பெரிய ஹிட். நூற்றாண்டு கால சரித்திரத்தில் அமெரிக்காவில் வேறு எந்த பெண் கலைஞரின் முதல் ஆல்பமும் அத்தனை பெரிய ஹிட் ஆனதில்லை.
தனது முதல் வெற்றியின்போது ப்ரிட்டனிக்கு 18 வயதுகூடப் பூர்த்தியாகியிருக்கவில்லை.இன்றைக்கு முப்பதை எட்டி பிடித்துகொண்டிருக்கும் வயதில்,அவரது அந்த முதல் புகழின் சதவிகிதத்திலிருந்து அரை அங்குலம் கூடக் குறையவில்லை.
ப்ரிட்டனி ஸ்பியர்ஸ,பாப் இசை ரசிகர்களுக்கு ஒரு வாழும் தேவதை.
எத்தனையோ ஆல்பங்கள்,எவ்வளவோ வெற்றிகள்,கோடிக்கணக்கான பணம்,புகழ்,ஆடம்பரம்,உல்லாசம்,கிசுகிசுக்கள்,கசமுசாக்கள் பிறகு வந்துவிட்டன.
ஆனால் அவர் நினைத்தது நடந்து விட்டது.
நான் தகுதியானவள்.எனவே நான் ஜெயிப்பேன்.
ஆம்! ஜெயித்துவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக