செவ்வாய், 19 ஜனவரி, 2010

உச்ச நீதிமன்றத்தின் பத்து கட்டளைகள்




  


மக்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில், தற்காப்புக்காக என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்த 10 விதிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. 

தீவிரவாதமும், போதைக் கடத்தலும் நடக்கும் தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்கள் அதை நேருக்கு நேர் சந்தித்து, மோதும் வகையில் அதிக அதிகாரத்தை இந்த விதிமுறைகள் அளித்துள்ளன.
 

காஷ்மீரில் தனது குடும்பத்தையே பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் தீவிரவாதியை, அவனுடைய ஏ.கே. 47 ரக துப்பாக்கியையே பிடுங்கி, குண்டுகளால் துளைத்தாள் ருக்சேனா என்ற இளம் பெண். 

அதற்கு முன், அந்தப்பெண் துப்பாக்கியை தொட்டது கூட கிடையாது. பின் எப்படி வந்தது அந்த வேகம்? சூழ்நிலைதான் அந்தப் பெண்ணுக்கு அப்படிப்பட்ட தைரியத்தை கொடுத்தது. அதேபோன்ற சூழலில் யார் வேண்டுமானாலும் திருடர்களை, தீவிரவாதிகளை தாக்கலாம், கொல்லவும் செய்யலாம்.


துப்பாக்கி முன்பும், வெடிகுண்டு முன்பும் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் மக்கள் கோழைகள் போல் அஞ்சி நடுங்கி இருக்க வேண்டிய அவசியமில்லை; ஆபத்தைக் கண்டு பயந்து ஓட வேண்டியதும் இல்லை; தற்காப்புக்காக எதிர்த்து நின்று போராடலாம்; எதிராளியை தாக்கலாம்; அப்போது எதிராளி மரணமடைந்தால் கூட அதை கொலையாகக் கருதப்பட மாட்டாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரியும் ஏ.கே. கங்குலியும் கூறியிருக்கிறார்கள்.
 

எப்போது திருப்பித் தாக்கலாம்? உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து வரும் சூழல் இருந்தாலே போதும். யார் வேண்டுமானாலும் திருப்பித் தாக்கலாம். அப்படித் தாக்கும் போது, எடுத்த
உடனேயே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல், படிப்படியாக தாக்குதலை அதிகரிப்பது என்பது முடியாத காரியம். எனவே, தற்காப்புக்காக என்ன தோன்றுகிறதோ அதை செய்யலாம். 


உயிருக்கே ஆபத்து வரும்போது, அதற்கு காரணமான சமூக விரோதிகளை கொலை கூட செய்யலாம். ஒரு கட்டுப்பாட்டையும் கூடவே விதித்துள்ளது உச்ச நீதி மன்றம்.  யாரையும் பழி வாங்கவோ,  பழைய பகையை தீர்த்துக் கொள்ளவோ இந்த விதிமுறைகளை பயன்படுத்தக் கூடாது என கண்டிப்பாகக் கூறி
யுள்ளது. 


அப்படி நடக்காமல் இருக்காது. அப்படி ஏதாவது நடந்தால், அதை கூடுதல் கண்காணிப்புடன் இருந்து கண்டுபிடிக்க வேண்டியது
போலீசாரின் கடமை.

கருத்துகள் இல்லை: