சென்னை; ""தரமணியில் அமைக் கப்படும் இரண்டாவது டைசல் உயிரியல் தொழில் நுட்ப பூங்காவிற்கான பணிகள், வரும் 2011ம் ஆண் டுக்குள் நிறைவடையும்,'' என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தரமணியில் இரண்டாவது டைசல் உயிரியல் தொழில்நுட்ப பூங்கா அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
முதல் கல்லை எடுத்து வைத்து, பணியை துவக்கி வைத்த பின், துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:மருத்துவ உயிர்தொழில் நுட்பம், ஊட்டச்சத்தியல், விவசாய உயிர் தொழில் நுட்பம், மருத்துவ பொருட்கள் மற்றும் உயிர் தகவலியல் ஆகிய துறைகளுக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுத் தேவைகளுக்காக இரண்டாவது டைசல் உயிரியல் பூங்கா அமைக்க இன்று அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. பூங்கா அமைக்கும் பணி 2011ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.மொத்தம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு லட்சம் சதுரடியில் இந்த பூங்கா அமையும். தமிழக அரசு டைசல் உயிரியல் பூங்காவை ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக அங்கீகரித்துள்ளது.
இங்கு பல்வேறு நிறுவனங்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட ஊக்குவிக்கின்றன. ஆராய்ச்சிக்காக சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. பூங்காவில் அனைத்து கட்டமைப்பு மற்றும் பரிசோதனைக் கூடங்களை ஏற்படுத்தி, சலுகைக் கட்டணத் தில் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு மத்திய அரசு 14 கோடி ரூபாய் நிதியளித்துள்ளது. ஆராய்ச்சிக்கான தொழில்நுட்ப கருவிகள் வாங்க இந்த நிதி பயன் படுத்தப்படும். இந்த பூங்கா மூலம் தமிழக அரசிற்கு மாதந்தோறும் 45 லட்சம் முதல் 65 லட்சம் ரூபாய் வரை வாடகை வருமானம் கிடைக்கும். இதர வருவாயும் வர வாய்ப்புள்ளது.
இந்த உயிரியல் பூங்காவில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் புதிய நிறுவனங்கள் வரவுள்ளன. இதனால், 1,500க்கும் மேற் பட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக