ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
சுபவீ வலைப்பூ: ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (5)
சுபவீ வலைப்பூ: ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (5): குட்டிமணியின் கடிதம் நடராஜா தங்கதுரை, குட்டிமணி என அறியப்பட்ட சிவராஜா யோகநாதன் ஆகியோரால் 1970களின் இறுதியில் தொடங்கப்பட்ட இயக்...
சனி, 28 ஜூலை, 2012
இவரன்றி வேறு யாரால் இது முடியும் ?
கோட்டையில் எவர் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம். கொள்கையால் தமிழக மக்களின் மனங்களை ஆண்டுகொண்டிருப்பவர் தலைவர் கலைஞர்தான். கோபால புரத்திலும் அறிவாலயத் திலும் தொண்டர்களையும் பொதுமக்களையும் தினந்தோறும் சந்திக்கிறார். போயஸ்கார்டன் கதவுகளைப்போல அனுமதி மறுப்பதில்லை அறிவாலயத் தின் கதவுகள். அல்லது கொடநாடு போன்ற இடங்களைத்தேடி நம் தலைவர் ஓய்வெடுப் பதுமில்லை.
ஓய்வறியா உழைப்பாளியான அவர் நாள்தோறும் அறிவாலாயத்திற்கு வந்து பணிகளைக் கவனிப்பதைப்பார்க்கும்போதே என்னைப்போன்ற தொண்டர்களுக்குப்புத்துணர்வு பிறக்கும். ஜூலை 18ந் தேதி காலையிலும் அப்படித்தான், தலைவர் கலைஞரைக்காண அறிவாலயத்தில் கழகத்தினர் நிறைந் திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் செங்குட்டுவன் வந்திருந்தார். அவர் அருகில் மூன்று மாணவர் கள் நின்று கொண்டிருந்தார்கள்.
“கல்லூரிக்குச் செல்லவேண்டிய நேரத்தில் இங்கே வந்திருக்கிறார்களே!” என்று ஆச்சரியத்துடன் கேட்ட போது, “நாங்கள் கல்லூரியில் கால் வைப்பதற்கு காரணமாக இருந்த வரை நேரில் பார்த்து நன்றி தெரிவிப்பதற்காக வந்திருக்கோம்” என்றார்கள். ஆம்.. அந்த மூவரும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள். 2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இப்படியொரு மகத்தான வாய்ப்பு கிடைத்ததற்குக்காரணம், தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் வழங்கப்பட்ட அருந்த தியருக்கான உள்ஒதுக்கீடுதான்.
மாவட்ட கழகச்செயலாளர் அண்ணன் செங்குட்டுவன் தான் அவர்களை அழைத்து வந்திருந்தார். “இந்த மூன்று பேரும் ஒரே கூட்டுக்குடும்பத்தைச்சேர்ந்த அருந்ததியர் சமுதாயத்து மாணவர்கள். எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூவருமே தலைவர் அளித்த உள்ஒதுக்கீட்டின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்” என்றார் பெருமை பொங்க. அந்த மாணவர்களின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி! அவர்களின் நெஞ்சில் எத்தனை நன்றியுணர்ச்சி.
சென்னை மருத்துவக்கல்லூரியில் என்.திவாகர் என்ற மாணவரும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மணிபாரதி என்ற மாணவியும், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் மணிரத்தினம் என்ற மாணவரும் சேர்ந்து, நாளைய மருத்துவர்களாக உயரும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். “எங்க சமுதாயத்திலே பலரும் வியாதி வந்தால்கூட டாக்டரைப் பார்க்கிற வசதியில்லாம கைவைத்தியம் பண்ணிக்குவாங்க. அப்படி இருந்த எங்க நிலைமையை மாற்றி, இன்னைக்கு நாங்களே டாக்டராகிற நிலைமையை உருவாக் கியிருக்கிறவர் கலைஞரய்யாதான்.
அந்த மவராசனை நேரில் பார்த்து நன்றி சொல்வதற்காக வந்தோம்’’ என்றனர். மாபெரும் தலைவர் வழிநடத்தும் இயக்கத்தில் தொண்டனாக இருக்கிறோம் என்ற இயல்பான பெருமை எனக்குள் ஏற்பட்டது. அந்த மாணவர்களுக்கு தலைவரிடமிருந்து அழைப்பு வந்தது. மாவட்டக் கழகச்செயலாளருடன் சென்று தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
பிறப்பால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களுக்காக உருவான திராவிட இயக்கத்தின் நீட்சிதான் தலைவர் கலைஞர் அவர்கள். வாழும் வரலாறாய் இயக்கத்தின் சாதனை களைத்தொடர்ந்து கொண்டிருப்பவர்.
அரசியலுக்காக அவரை விமர்சிப்பவர் களும்கூட, இந்த உண்மையை உணர்ந்தே இருக்கிறார்கள். வாழ்வில் உயர்ந்துவிட்டதாலேயே வாழ்ந்து-வளர்ந்த இடத்தை மறந்துவிட்டு வசை பாடுவது வழக்கம்தான். திராவிட இயக்கத்தையும் அதன் அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தையும் அதனை வழிநடத்தும் தலைவர் கலைஞரையும் வசைபாடு பவர்கள் வர்ணாசிரமத்தின் பாதுகாவலர்கள் மட்டுமல்ல, வகுப்புவாரி உரிமை என்கிற, திராவிட இயக்கம் பெற்றுத்தந்த கொடையால் வாழ்வு பெற்றவர்களும்தான். நூறாண்டுகளுக்கு முன் தன் பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்தது எப்படி என்கிற வரலாற்றை அறியாமல்,
அல்லது அறிந்தும் அது பற்றிய சிந்தனையின்றி தி.மு.கழகம் மீது வசைபாடுவதை புதிய நாகரீக மாகக்கடைப்பிடிக்கிறார்கள்.
வாழ்க வசவாளர்கள்!’’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வழியில் செல்லும் கலைஞரோ, தன்னை வசைபாடுவோர் பற்றிக் கவலைப்படாமல் இந்த இனத்தின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, தனது ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் சமூக நீதியை நிலை நாட்டும் சட்டங்களைத்துணிந்து நடைமுறைப்படுத்தியவர் கலைஞர். பிற்படுத்தப் பட்டவர்களுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை அவரையே சாரும். பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை தந்தவரும் அவர்தான்.
மிகபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடும், பழங்குடி மக்களுக்கு 1 சதவீத ஒதுக்கீடும் தந்தவர் அவரே. இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு 3.5 சதவீத தனி ஒதுக்கீடு அளித்தவர். தாழ்த்தப்பட்ட சமுதாயமான அருந்ததிய மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டை தனது ஆட்சிக்காலத்தில் அளித்து, அந்த இனம் உயர வழியமைத்தவர்.
ஆட்சியில் தலைவர் கலைஞர் இல்லாத இந்த நிலையிலும் அருந்ததிய சமுதாயம் அவர் அளித்த உள்ஒதுக்கீட்டின் பயனை நேரடியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் அந்த மூன்று மாணவர்களுக்கும் மருத்துவக்கல்லூரியில் கிடைத்த அனுமதி எடுத்துக்காட்டுகிறது. இந்த மாணவச் செல்வங்களைப்போல அருந்ததிய சமுதாயத்து மாணவர்கள் மற்ற மாவட்டங்களிலிருந்தும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை கலைஞர் அரசு அளித்த உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, சட்டக்கல்லூரி என உயர் படிப்புகளை அந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் கற்பதற்கு வழியமைத்துத் தந்துள்ளார் கலைஞர்.
கல்வி என்பது தனி ஒருவருக்கு மட்டும் பலன் தருவ தன்று. அவரது குடும்பத்திற்கு மட்டும் பலன் தருவதும் அன்று. அவர்களின் தலைமுறைக்கே பயன் தந்து, சமுதாயத்திற்கும் பலனளிப்பது. எதிர்காலத் தலைமுறை பற்றிச் சிந்திக்கும் கலைஞர் என்ற மகத்தான தலைவரால்தான் இத்தகைய பயன்களைத் தொலை நோக்குடன் சிந்தித்து அதற்கான சட்டதிட்டங்களை நிறைவேற்ற முடியும்.
கழக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அருந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ராதா என்பவர் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணிக்காக விண்ணப்பித்திருந்தார். கலைஞர் அரசு வழங்கிய உள்ஒதுக்கீட்டின்படி அவருக்கு அந்தப் பணி கிடைக்க ஆவன அனைத்தையும் முன்னின்று செய்தவர், துணை முதல்வராக இருந்த நம் தளபதி. தலைவரின் எண்ணங்களைச்செயல்படுத்துவதில் அன்றும் இன்றும் அவர் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இளைஞரணி பாசறைக்கூட்டங்களில் இந்தத் தலைமுறைக்கு திராவிட இயக்க முன்னோடிகளின் வரலாறு கற்பிக்கப்படுகிறது. திராவிட இயக்கம் கண்ட களங்களும், பெற்ற தழும்புகளும் எடுத்துக்காட்டப்படுகின்றன. வகுப்புவாரி உரிமை தொடங்கி இன்றைய இடஒதுக்கீடு வரையிலான சமூக நீதி பற்றிய பாடம் சொல்லித்தரப்படுகிறது. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிட இனத்தின் நிலை என்ன என்பதையும், நீதிக்கட்சியில் தொடங்கி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் போராட்டங்களால் இந்த இனம் நிமிர்ந்து நிற்பதையும் பாசறைக் கூட்டங்கள் பயிற்று விக்கின்றன.
சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஒடுக்கப்பட்ட சமுதாயமாக ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள்- வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இன்று பட்டதாரிகளாக, பொறியாளர்களாக, வழக்கறிஞர் களாக, மருத்துவர்களாக, இன்னும் பற்பலத்துறைகளில் வல்லுநர்களாக சிறந்து விளங்குவதற்கு திராவிட இயக்கமே காரணம் என்பதை இளைஞர்களின் நெஞ்சில் பதிய வைக்கிறார் தளபதி. ஏற்றம் பெற்றோரின் இதயத்தில் அவர்களின் உயிர்த்துடிப்பாகத் திகழ்கிறார் சமூக நீதியின் காவல ரான தலைவர் கலைஞர்.
ஆக்கம் : திரு.ஹசன் முஹம்மது ஜின்னாஹ்.
திமுக இளைஞர் அணி மாநில துணைத் தலைவர்.
ஞாயிறு, 17 ஜூன், 2012
குலசை: உலகத் தந்தையர் தினம்
குலசை: உலகத் தந்தையர் தினம்: உலகத் தந்தையர் தினமான இன்று இந்த உலக தந்தையர்களை நினைவில் கொள்வோமே! உலகத் தந்தையர்கள் இவர்களின் கண்டுபிடிப்புக்கள் முதல் முதல...
நன்றி: பொறியாளர் சுல்தான் அவர்கள்.
நன்றி: பொறியாளர் சுல்தான் அவர்கள்.
திங்கள், 11 ஜூன், 2012
நாம் தமிழர் கட்சியின் 'புதிய பார்ப்பனியம்'
நாம் தமிழர் கட்சி ஆவணம் அக்கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், வரலாற்று சம்பவங்களாக பல திரிபுகளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட ஓட்டுக்கட்சி அரசியலால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரான தமிழ்த்தேசிய முழக்கத்தை கையிலெடுத்திருக்கும் 'செந்தமிழன்' சீமான் அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் முன்வைக்காமல், எதிர்ப்பு அரசியலிலும், தமிழினம் போற்றும் தலைவர்களை குறை சொல்வதிலும் அதீத கவனம் கொண்டு ஆவணத்தை வெளியிட்டிருக்கிறார்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20043:2012-06-10-07-42-45&catid=1:articles&Itemid=264
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20043:2012-06-10-07-42-45&catid=1:articles&Itemid=264
செவ்வாய், 14 டிசம்பர், 2010
கறைபட்டுப் போன கனவு ?
முகத்திலே முறுவல், நடையில் நம்பிக்கையின் துள்ளல்.மிடுக்காக உடை அணிந்து தலை நிமிர்ந்து நடந்து வருகிற இளைஞனின் முகத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.வசிகரமா ? கம்பீரமா ? தன்னம்பிக்கையா
எனக்கு அதைச் சொல்ல சரியான வார்த்தை அகப்படவில்லை.
வர்ணிக்க முடியாத அந்த வசீகரத்தின் பின் ஒரு வரலாறு இருக்கிறது.
நெடுநாள்களாக நானறிந்த பையன் அவன்.சில ஆண்டுகளுக்கு முன் வரை அவன் பொருளாதாரப் பின்னணி ஒன்றும் பிரமாதமாக இருந்திடவில்லை.ஆனால் அவன் நம்பிக்கை வைத்திருந்த கல்வியும்,அதற்குப்பின் இருந்த உழைப்பும்,உலகை ஜெயிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவனை மாற்றின.வெற்றியும் இளமையும் இன்று அவன் விலாசங்களாகிவிட்டன.
கம்பீரமான இளைஞன் என் ஜன்னலைக் கடந்து போனான்.அவன் முதுகுப் புறத்தைப் பார்த்த நான் பதறிப் போனேன்.அவனது ஆடையின் பின் புறம் முழுவதும் -மிடுக்கான ஆடை எனச் சற்று முன் சொன்னேனே அந்த ஆடை-முழுக்க சேறு.குதிங்காலில் இருந்து தோள்பட்டைவரை மழைச் சேறு புள்ளி புள்ளியாய் கோலமிட்டிருந்தது.புள்ளிகள் எல்லாம் பெரும் புள்ளிகள்.
எப்படி சேறு வந்தது என்று உற்றுப்பார்த்தேன்.பாதுகாக்கும் என்று எண்ணி அவன் அணிந்திருந்த ரப்பர் செருப்பு தயக்கமின்றி அவன் முதுகில் சேற்றை வாரித் தெளித்திருந்தது.முதுகெல்லாம் சேறு இருப்பதை அறியாமல் அவன் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான்
மிடுக்காக.
அவனது முன்புறத்தையும் முகத்தையும் பாத்தவர்கள் நட்புப் பாராட்டி முறுவலித்தர்கள்.முதுகைப் பார்த்தவர்கள் ஏளனமாக சிரித்து உதட்டோரம் சிரிப்பை ஒளித்துக் கொண்டார்கள்.
ஓடிப் போய் அந்த இளைஞனிடம் உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும் என ஓர் துடிப்பு எழுந்தது. பாதுகாக்கும் என நீ நினைத்த செருப்பு உன்னைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது நண்பா.உதறி தள்ளு அதை என அவனுக்குச் சொல்லும் ஆசையில் எழுந்தேன்.
என் மடியில் இருந்த செய்தித்தாள்கள் நழுவித் தரையில் விழுந்து விரிந்தன.
விரிந்த இதழ்கள் எல்லாவற்றிலும் ஊழல் செய்திகள் ஒலித்துக் கொண்டிருந்தன.காற்றையும் காந்த அலைகளையும் காசு பண்ணிய ஊழல்.படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை பதவியில் இருப்பவர்கள் பங்கு போட்டுக் கொண்ட ஊழல்.அண்டை மாநிலத்தில் அரசு நிலத்தை பெண்டு பிள்ளைகளுக்கு ஒதுக்கிய ஊழல்.
உலக அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் உள்ளிருந்தே சுருட்டிய ஊழல்.வரிக்கு வரி,வார்த்தைக்கு வார்த்தை ஊழல்கள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அந்த நொடியில் நமது அரசமைப்பு சட்டம் இந்த தேசத்தை "சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசு " என்று வர்ணிக்கின்ற வரி மனதில் ஓடி மறைந்தது.
அத்தனையும் பொய்,அர்ததமற்ற அலங்கார வார்த்தைகள் என உள்ளம் குமுறியது.
உன்னதமான ஒரு கனவு கறைபட்டுப் போனதை எண்ணிய போது இதயத்தின் ஓரத்தில் ஊமை வலி ஒன்று எழுந்தது.உட்கார்ந்து விட்டேன்.அந்த இளைஞனைப் போல் அல்லவா இருக்கிறது என் தேசம்! முதுகிலே இருக்கிற சேறு தெரியாமல் முகத்திலே முறுவல் ஏந்தி நடை போடுகிறது.காலனி போல் காப்பாற்றும் என நினைத்த அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் சகதியை அல்லவா வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறையாக நடந்திருந்தால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருமானம் வந்திருக்கும் என்கிறது மத்திய தணிக்கை அறிக்கை.அரசுக்கு இந்த பணம் வந்திருந்தால் இப்போது உள்ளதைவிட பள்ளிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகரித்திருக்கலாம்.( இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கிய நிதி 49,904 கோடி ரூபாய் ) எத்தனை விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்திருக்கலாம்! விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு 70 ஆயிரம் கோடி.இது அதைப் போல இரண்டரை மடங்கு அதிகம்.
ஊழலினால் பாதிக்கப்படுவது அமைச்சர்கள் வீட்டு குழந்தைகள் அல்ல.
அதிகாரிகளின் வீட்டு பிள்ளைகளும் அல்ல.பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும்,சிறுதொழில் புரிவோர்க்களும்தான்.ஊழல் நிறைந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெரிய நிறுவனங்கள் ஏகபோக சந்தைகளை உருவாக்கி கொள்கின்றன.அதிக லாபம் அடைகின்றன. அவை இந்த ஊழல்நிறைந்த அமைப்பைப் பாதுகாக்கவே முயற்சிக்கும்.
சமநீதி கொண்ட,சம வாய்ப்புக் கொண்ட ஒரு சமூகத்தில் நம் குழந்தைகள், நம் குழந்தைகளின் குழந்தைகள் வாழ வேண்டும் என நாம் நிஜமாகவே விரும்புவோமானால் ஊளை ஒழிக்கக் களமிறங்க வேண்டும்.அதில் ஈடுபட்டோரையும்,அவர்களைக் காப்போரையும் கடுமையாக விரைந்து தண்டிக்க வகை செய்யும் சட்டங்களும் அமைப்புகளும் கோரி நாம் குரலெழுப்ப வேண்டும்.
ஏனெனில் ஊழலை விடக் கொடுமையானது அதைக் கண்டு அமைதி காப்பது.
நன்றி : திரு.மாலன் அவர்கள்
புதிய தலைமுறை
செவ்வாய், 16 நவம்பர், 2010
இனிய தியாகத் திருநாள் (பக்ரீத்)வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அழைக்கும்.....
தியாகத் திருநாள் (பக்ரீத்)வாழ்த்துக்கள் ........

வலைப்பூ நண்பர்கள், வலைப்பூ வாசகர்கள், வலைப்பூ திரட்டிகளான தமிழ்மணம், இன்ட்லி,தமிழ்வெளி, தமிழ் 10 மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த

" இனிய தியாகத் திருநாள் (ஹஜ்ஜு பெருநாள் ) வாழ்த்துக்கள்.. "
நட்புடன்
அபுல்.
திங்கள், 25 அக்டோபர், 2010
தமிழனின் வெற்றிக்கு வாக்களிப்போம் !
நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!!
தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை.
இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில் வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின் கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!
இந்தமாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக உதவணும் என்று இவர் முடிவு செய்த போது இவரது வயது வெறும் 21
இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!
இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது!
கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது
இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspx
- இதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.
- உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.
- அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள்.
- அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.
- முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.
மறக்காமல் உங்கள் வாக்கை பதிவு செய்து ஒரு தமிழனை வெற்றி
பெறச் செய்யுங்கள்.
நன்றி : சசிகுமார்.
பாதை மாறியப் பயணங்கள் ?
இந்த படத்தைப் பார்த்ததும் இந்த பதிவின் நோக்கம் உங்களுக்கு
புரிந்திருக்கும்.
குடி குடியைக் கெடுக்கும், குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பது போன்ற வாசகங்கள் மதுபான பாட்டில்களிலேயே எழுதப்பட்டிருக்கும். ஆனால் அதை வாங்கிக் குடிக்கும் குடிமகன்கள் யாரும் அதைப் படிப்பதும் இல்லை, படித்து நடப்பதும் இல்லை.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆனால் நம்மூர் ஆண்மகன்களோ, பார் இல்லாத ஊரில் குடியிருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு குடிப் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. காலையில் 10 மணிக்கு டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படுகின்றன. இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. காலையில் வேலைக்குச் செல்வோரும், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த சமயத்திலும், டாஸ்மார்க் கடைகளின் வாயில்களை அடைத்துக் கொண்டு நிற்கும் பலரை நாம் காண முடியும். மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே புரியும்.
காலையிலேயே இவர்கள் இப்படி என்றால், மாலையும், அதையும் தாண்டி இரவிலும் இவர்கள் எப்படி இருப்பார்கள். மேலை நாடுகளில் நிலவும் தட்பவெப்ப நிலையைத் தாங்க அவர்கள் குடிக்கிறார்கள். அதுவும் உடல் நலத்திற்கு ஏற்ற அளவிற்கு மட்டுமே. ஆனால் அதை நமது குடிமகன்களோ தினமும் நிறைய தண்ணீர் குடிங்க என்று மருத்துவர் கூறுவதைக் கேட்டு நல்ல பிள்ளையாக இந்த தண்ணியைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது நமது உடலுக்கும் கேடு, நமது வீட்டிற்கும் கேடு என்பதை எப்போது உணர்வார்கள்.
இவை எல்லாவற்றிலும் கொடுமை என்னவென்றால் அரசே மது விற்பனை செய்வதுதான். குடிமக்களை காக்கவேண்டிய அரசே மக்களை குடிகாரர்களாக ஆக்கிகொண்டிருக்கிறது என்பதுதான். சாராயம் வித்தவர்கள் எல்லாம் இன்று கல்வி தந்தையாகி விட்டார்கள். கல்வியைப் போதிக்க வேண்டிய அரசோ சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது. கொடுமைக் கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கே இரண்டு கொடுமை டிங்கி,டிங்கி என்று ஆடியதாம். அது போலத்தான் இருக்கிறது அரசு சாராயம் விற்கும் முறை.
ஆண்கள் மட்டும் குடித்துகொண்டிருந்த நிலை மாறி இன்று பெண்களும் குடிக்கும் நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள். கைநிறைய சம்பளம் வாங்கும் மேல்தட்டு வர்க்க பெண்கள்( எல்லா பெண்களும் அல்ல ) பார்ட்டிகளிலும்,பப்பே,டிஸ்கொத்தே போன்ற நிகழ்ச்சிகளிலும் குடித்து கும்மாலமடிப்பதை செய்திகளிலும் பத்திரிகைகளிலும் அன்றாடம்
நாம் படிகின்றோம்.
ஒரு நல்ல குடும்பம், குடும்பத் தலைவனின் குடிப்பழக்கத்தாலேயே கெட்டு சீரழிந்து போனதை நம்மில் பலரும் வாழ்க்கையில் பார்த்திருப்போம். இன்னும் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருப்பதையும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கூலி வேலை செய்பவர்கள் மட்டுமல்ல, எத்தனையோ பெரிய நிறுவனங்களில் பெரிய பதவிகளில் பணிபுரியும் நபர்கள் கூட, தங்களது சம்பாத்தியத்தை முழுவதும் டாஸ்மார்க் கடைகளிலேயே செலவழித்துவிட்டு வீட்டிற்கு போவதை பார்த்திருக்கிறோம்.
குடிப்பழக்கத்தால் குடும்பத்தை இழந்தவர்கள் பலர், வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர், குற்றவாளிகளானவர்கள் பலர், உற்றவரை குற்றவாளியாக்கியவர்களும், உயிரையே இழந்தவர்களும் பலர் உள்ளனர். இப்படியிருக்கு, அந்த குடியால் அடையும் நன்மைதான் என்ன?
சாலையில் நடக்கும் பல வாகன விபத்துகளுக்கும் முக்கியக் காரணமாக குடியல்லவா இருக்கிறது. வாகனத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி விபத்தை ஏற்படுத்தும் இந்த குடி என்ற அரக்கனை நம் வீட்டிற்குள் வராமல் தடுக்க வேண்டாமா? சமுதாயத்தையே சீரழிக்கும் குடியால் உங்கள் குடி கெட வேண்டுமா?
குடிப்பதை மறப்போம், குடும்பத்தை காப்போம்.
சனி, 23 அக்டோபர், 2010
ரசிக்கத் தெரிந்த மனமே ! உனக்கு ? பகுதி- 2
ரசிக்க தெரிந்த மனமே !உனக்கு ? பகுதி -1 படிக்க இங்கே
என் நண்பர் ஒருவர் அழகான உடைகள் உடுத்துவார்,அவர் எது அணிந்தாலும் அவருக்கு அது பொருத்தமாகவே இருக்கும்.ஆனால் அவர் ஜீன்ஸ் அணிந்து நான் பார்த்ததே இல்லை. உலகமே அதை அணிகிறபோது அந்த ரசனை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று தோன்றும். ஒருமுறை அதை கேட்கவும் செய்தேன்." நான் ஒன்றும் சுரங்கத்தில் வேலை செய்யவில்லை" என்றார்.
என்னை எனக்கு எப்படிப் பிடித்து இருக்கிறதோ,அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் ரசனை.நிறையப் பேர் எதைச் சரி என்கிறார்களோ,அதை பின் பற்றுவதுரசனை இல்லை. " நானும் இருக்கிறேன் ... என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துகொள்ளுங்கள் என்பதற்கான முயற்சி.
நீங்கள் ரசிப்பதை இன்னொருவர் ரசிக்கவில்லை என்றால்,அது அவர் கோளாறு இல்லை. அவர் வேறொரு ரகமாக இருக்கலாம்.முடிந்தால் அவரின் ரசனையை நீங்களும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
நீரோடையின் அழகை ரசித்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு
நீரோடைக்கு அப்பால், அம்மாவின் மடியில் குழந்தை படுத்திருக்கும் அழகை ரசிப்பவரின் ரசனை அந்நியமாகத் தெரியலாம்.
பூத்துக் குலுங்கும் மலர்களின் குளுமையில் உங்கள் ரசனை பொதிந்துக் கிடக்கலாம்...... காய்ந்து கிடக்கும் கருவேல மரங்களைக் கவனித்துக் கொண்டு இருப்பவரின் ரசனைக்கு ஒரு காரணம் இருக்கும்.
மேல்தட்டு வாழ்கையின் வெளிப்பாடுகள் மட்டுமே உயர்வான ரசனை என்ற மனோபாவம் நமது தாழ்வு மனப்பான்மையைத் தான் காட்டுகிறது. மேற்கத்திய இசை நாகரிகமான ரசனை என்று ஒருவர் ஏற்றுக்கொண்டு இருப்பதைப் போலவே,இன்னொருவர் உருமி மேளத்தின் இசையை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.இதில் உயர்வென்ன...தாழ்வு என்ன ?
எல்லா ரசனைகளும் உயர்வானதுதான்.அநாகரிகம் அல்லாத அனைத்தும் ஏற்புக்கு உரிய ரசனைகள்தான். உங்களால் புரிந்துகொள்ள முடியாத ரசனைகளைக் குறைவாக மதிப்பிட வேண்டாம்.அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தனி மனிதரையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். மாறிக்கொண்டே இருக்கும் ரசனைகளை ஒரு காரணியாகக்கொண்டு மனிதர்களை மதிப்பீடு செய்யமுடியாது.
முடிந்தால் அடுத்தவரின் ரசனையில் இருக்கும் " ரசனைகளையும்" அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். அது மனித உறவுகளை மேம்படுத்தும்.....
நன்றி : திரு : கோபிநாத்
மற்றும் ஆனந்தவிகடன்
அபுல்.
புதன், 20 அக்டோபர், 2010
கண்களை விற்றா சித்திரம் வாங்குவது ?
நகரத்து வாழ்க்கையால் ஏற்படுகின்ற நன்மை,தீமைகளையும்,கிராமத்து வாழ்க்கையால் ஏற்படுகின்ற நன்மை தீமைகளைப் பற்றி அலசுவதே இந்த பதிவின் மைய கருத்தாகும்......
கிராம வாழ்க்கையிலிருந்து நாம் நகர வாழ்க்கைக்கு மாறியதால் சுகாதாரம்
தரமான கல்வி,மருத்துவ வசதி,நுட்பமான தகவல் தொடர்பு,வசதியான போக்குவரத்து,சுதந்திரமான மனநிலை, கைநிறைய வருமானம் என பெற்றது அதிகம்தான்.ஆனால் இழந்தது அதைவிட பலமடங்கு அதிகம் என்பதை கேள்வியே இல்லாமல் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையும் அதுவே?
நவீனங்களின் வரவால் தேவைக்கு அதிகமாக ஓய்வை உடலுக்குக் கொடுத்துவிட்டு,நோய்களை வாங்கி கட்டிகொள்கிறோம்.குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை வீட்டுவேலைகளை மட்டும்கூட தாங்களே செய்து வந்தாலே வியாதிகள் எங்கோ ஓடிப்போய்விடும்.உதாரணமாக உடலிலிருந்து வியர்வை வெளியேறும் அளவிற்கு வேலைகள் செய்தால்,
உடம்பில் சேரும் சோடியம் தாது உடம்பை விட்டு வெளியேறும்.
சோடியம் தாது வெளியேறினால் ரத்த அழுத்த நோய் வருவதற்குன்டான வாய்ப்புகள் மிக குறைவாகும். கூட்டுவது,துணி துவைப்பது போன்ற
குனிந்து நிமிரும் வேலைகளைச் செய்தால் தசைகள் வலுப்பெற்று முதுகுவலி ,தண்டுவடவலி ஆகிய நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

மாவாட்டுவது, அம்மி அரைப்பது,பாத்திரம் கழுவுவது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது போன்ற வேலைகளைச் செய்வதால் கழுத்து,தோள்பட்டை தசைகள் பலப்படும்.கழுத்து நரம்பு தேய்மானம் ஆவது குறைய கூடும்.கர்ப்பிணி பெண்கள் பிரசவ நாள்வரை சின்ன, சின்ன வீட்டு வேலைகளைச் செய்து வந்தால் இடுப்பு பலம் பெற்று பிரசவம் சுகமாக அமையும் வாய்ப்புகள் அதிகம்.
இப்படி கிராமத்தில் செய்துவந்த வேலைகள் அத்தனையும் நோயை எதிர்க்கும் திறன் பெற்றதாகவே இருந்தது.
ஆணோ.....பெண்ணோ ... அவரவர் வேலைகளை அவர்களே செய்துவந்தாலே அதிகாலையில் எழுந்து யோகா,நடைபயிற்சி,என்று தனியாக நேரத்தை ஒதுக்கி,பூங்காக்களின் பக்கம் ஓட வேண்டிய அவசியமே இருக்காது.
"வெஸ்டர்ன் டாய்லெட்" களின் வசதியைப் பார்த்து விட்ட நாம் அதை நம்முடைய வீட்டுக்குள்ளும் கொண்டு வந்துவிட்டோம். ஆனால் காலங்காலமாக கிராமங்களில் கடைப் பிடித்துவந்த " உட்கார்ந்து எழுவது " என்ற முறையின் மூலமாக தொடை தசைகள் இறுகி,மூட்டு தேய்மானம் குறைவதோடு,குடல் இறக்க நோய் அண்டாமல் இருப்பதன் ரகசியத்தைப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோம்.
தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, முடிகளைப் பலப்படுத்தி
கொட்டாமல் காக்கும்.மஞ்சள் தேய்த்துக் குளிப்பதா,அது
கிரிமி நாசினியாக செயல்பட்டு முகப்பருக்கள் வராமல் காக்கும்.....
ஆலங்குச்சியும்,வேலங்குச்சியும் பல்லை உறுதியாக்கும் .......இப்படி வாழ்க்கைக்கு பயனுள்ள எத்தனை எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்களை மறந்ததால்,அதன் நேர்மாறான பலன்களைத்தான் இப்போது அடைந்த கொண்டிருக்கிறோம்.
குழந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகள் என்பது சத்தான உணவு,
விளையாடுமிடம்,நல்லத் தூக்கம். நகரத்து வாழ்கையில் இந்த மூன்றுமே அவர்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை.ஊட்டச்சத்து பானங்கள்
வீடு நிறைய விளையாட்டுப் பொருட்கள், தூங்க தனி பெட்ரூம் ,குளிர்சாதன வசதி, ...என்று எல்லாமே எங்க பிள்ளைகளுக்கு பண்ணிக் கொடுத்துதானே இருக்கிறோம் ....? என்று நீங்கள் சொல்வது புரிகிறது.
ஆனால் அன்று சிறு தானியங்களில் இருந்த ஊட்டம் நிறைந்த சத்து இன்றுள்ள உணவுப் பொருட்களில் இருக்கிறதா என்று உங்கள் மருத்துவரிடமே கேட்டுபாருங்கள்.எல்லா உணவு பொருட்களின் விளைச்சலும் செயற்கை உரங்கள் மூலமே விளைவிக்கப்படுகிறது.
உங்கள் குழந்தைகளை மண்தரையிலும்,புல்தரையிலும் விளையாடவிட்டு பாருங்கள்.இதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை உங்களின் விலை உயர்ந்த விளையாட்டுபொருட்களில் அவர்களுக்கு கிடைகின்றதா என்று பாருங்கள்.
காற்றோற்றமான கிராமத்து வீட்டில் அவர்கள் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்குவதையும், குளிர்சாதனம் பொருத்திய, வீட்டின் சாத்திய அறையில் அவர்கள் தனியே உறங்குவதையும் கொஞ்சம் உங்கள் மனத்திரையில் ஓட விட்டுப்பாருங்கள்......நாம் எதையெல்லாம் இழந்து விட்டோம் என்பது வேகவேகமாக உங்களுக்கு புரியும்.....
பாரம்பரிய வாழ்க்கை,கலைகள்,பண்பாடு என்று எல்லாவற்றையும் இழந்து சினிமா,சீரியல்,தீம்பார்க், என்று செயற்கையான பொழுது போக்குகளை கற்றுக்கொண்டு,கலாச்சார சீர்கேடுகளை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் இன்று இயல்பான,இயற்கையான
வாழ்கையை இழந்து நிற்கின்றோம் என்பதே உண்மை.

உண்மையையை சொல்லப்போனால் " கண்களை விற்று சித்திரம் வாங்க முயற்சி செய்கிறோம் " என்பதே உண்மையிலும் உண்மை.
லேபிள்கள்:
ஒரு பார்வை,
கிராமம்,
சிறப்பு,
நகரம்
திங்கள், 18 அக்டோபர், 2010
ரசிக்கத் தெரிந்த மனமே ! உனக்கு ?
பெயின்ட் விற்பனை செய்கிற கடையில் சமீபத்தில் பார்த்த
ஒருகாட்சி.....
பெயின்ட் வாங்க வந்த ஒருவர் " வீட்டுக்குள்ள என்ன கலர் பெயின்ட் அடிச்சா நல்லா இருக்கும் ? இருகிறதுலேயே நல்ல கலர் எது ? என்று கேட்டார். கடைக்காரர் அழகாக ஒரு பதில் சொன்னார்.....
" கலர்ல நல்ல கலர், கெட்ட கலர்னு ஒன்னும் கிடையாது. உங்களுக்கு எந்த கலர் பிடிக்குதோ அது நல்ல கலர்.உங்களுக்கு பிடிக்காத கலர்,
இன்னொருத்தருக்குப் பிடிக்கும். அதனால எல்லா கலருமே நல்ல கலர்தான்!"
எல்லா மனிதர்களுக்குள்ளும் எதோ ஒரு ரசனை இருக்கிறது.அதைக் கவனிப்பதைவிட,ரசிப்பதைவிட,அடுத்தவரின் ரசனைப்பற்றியே அதிகம் யோசிக்கிறோம்.நம் சமூக சூழலும்,நல்ல ரசனை,மோசமான ரசனை என்று பிரித்துவைத்து இருக்கிறது. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது.
ரசனை என்பது அவரவரின் தனிப்பட்ட குணாம்சம்.சாந்தமாக,வாழ்வியல் சூழல் சார்ந்ததாக,அனுபவங்கள் ஒட்டியதாக, சுய உணர்வோடு தொடர்பு உடையதாக இருக்கும்போது,உயர்வான ரசனை,மட்டமான ரசனை,என்று தரம் பிரிப்பது எப்படிச் சரியாக இருக்கும்?
ஒரு வகையில் ரசனை என்பதே ஒரு கற்பிதம்தான்.ஐஸ்வர்யா ராய் அழகு என்று சொல்லப்பட்டதால்,அவர் அழகானவர் என்று ஏற்றுக்கொள்கிறோம்.
ஒரு பெண்ணுக்குரிய அழகியல் அம்சங்கள் என்று தனிப்பட்ட முறையில் நாம் வைத்து இருக்கிற ரசிப்புச் சித்தாந்தங்களுக்குள் அவர் வருகிறாரா, இல்லையா என்றெல்லாம் யோசிக்க முடிவதில்லை.
நாம் கொண்டாடுகிற,பெருமை பேசிக்கொள்கிற உயர்வினை,
மதிப்பீடுகளாக நாமே சித்தரிக்கிற நமது பல ரசனைகள்,புறச் சூழல்களாலும்,செயற்கையான ஏற்பாடுகளாலும்,நம்முள் புகுத்தப்பட்டவைதான்.இதில் உயர்வான ரசனை
கேவலமான ரசனை என்று பாகுபாடு செய்வது எப்படி நியாயமாகும்?
இயற்கை எழிலையும் நிலவின் அழகையும் ரசிக்காத ஒருவர் நல்ல ரசனை இல்லாதவர் என்கிற முடிவுக்கு வர முடியாது. அவருக்கு புழுதிக் காடும் எருமைக்கூட்டமும் பிடித்து இருக்கலாம்.தத்தித் தத்தி ஓடும் அணில் அழகானது என்பது உங்கள் ரசனையாக இருந்தால், அங்குலம் அங்குலமாக நகரும் ஆமை இன்னொருவரின் ரசனையாக இருக்கலாம்.
அழகான ரசனை என்று தனியாக ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்வது
உண்மையில் அது போலித்தனத்தின் வெளிப்பாடு. உங்களால் எதை எல்லாம் இயல்பாக ரசிக்க முடிகிறதோ அவை எல்லாம் அழகானவைதான்.
செடிக்குச் செடி தாவும் பட்டாம்பூச்சி உங்களுக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தலாம்.அதற்காக பன்றிக் குட்டியை ரசிக்கிறவனுக்கு ரசனை கெட்டவன் என்று பட்டம் கட்டமுடியாது. நம்முடைய பெரும்பான்மையான ரசிப்புத்தன்மைகள்,நம்மைவிடப் பெரிய ஆட்கள் என்று நம்புகிற மனிதர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவை.
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
இளைஞர்களை வளைத்துப்போடும் வலைத்தளங்கள் ?
இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் விரல்நுனியில் உலகம் வந்துவிட்டது. இது பெருமைப்படக்கூடிய விஷயம். அதேவேளையில் சிறுமைப்படவைக்கும் சில நிகழ்வுகளும் உள்ளன. பொதுவாக இணையதளங்கள் அல்லது வலைத்தளங்கள் இன்று பல்கிப்பெருகிவிட்டன.
புதியபுதிய வலைத்தளங்கள், வலைப்பூக்கள் என எக்கச்சக்கம். இவற்றின் வளர்ச்சியால் லாபம் நஷ்டம் என்று பார்க்க முடிவதில்லை. "தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று எதற்காக கவிஞர் பாடினாரோ தெரியவில்லை. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.
"தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து கொள்ளடா' என கூறத்தோன்றுகிறது. அப்படி என்னங்க நடந்துட்டுது... என அப்பாவித்தனமாகக் கேட்பவர்கள், ஒருமுறை தமிழ் இணையதளங்களில் உலா வந்தால் போதும், அழுதே விடுவார்கள். மேற்கத்திய கலாசாரம் தமிழனைக் கெட்டழித்துவிட்டது. இணையதளங்களில் தேடும் எந்திரத்தில் தமிழில் ஒரு எழுத்தை அடித்தால் போதும், வார்த்தைகளும் விஷயங்களும் தமிழையே அவமானப்படுத்துகின்றன.
இந்தத் "தூய' தமிழால் நாட்டுக்குத்தான் கேடு. காரணம் அத்தனையும் பாலியல் சார்ந்த விஷயங்களாகவே இருக்கின்றன. இதைத் தவிர்த்து அறிவியல், கணிதம், பொறியியல் பற்றி எழுதவேண்டியதுதானே. இதைச் செய்வதால் இவர்களுக்கு என்ன திருப்தியோ அல்லது என்ன லாபமோ? இப்படிப்பட்ட தமிழ் இணையப்பக்கங்களை பெண்களும், சிறுவர்களும் பார்த்தால் என்ன ஆவார்கள்?
இதுபோன்ற இடுகைகளை இணையதளங்களில் வெளியிடுபவர்களுக்கு தாய், சகோதரிகள் இருக்கிறார்களா இல்லையா? இந்த இணையதளங்களில்தான் இன்று இளையதலைமுறை மூழ்கிக் கிடக்கிறது. பொது அறிவு வளரும் என்று யாராவது நினைத்து, தங்கள் பிள்ளைகளுக்கு வலைத்தளங்களை அறிமுகப்படுத்தினால் பிள்ளைகள் விரைவாகவே வீணாகிவிடுவார்கள்.இப்படி இளைஞர்களை வளைத்துப்போட இத்தகு வலைத்தளங்கள் ஏராளமாகப் பெருகி வருவது புற்றுநோயைவிடக் கொடுமையானதாகும்.
இவற்றை யார் தடைசெய்வார்கள்.இதைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் எதுவும் உண்டா என்று தெரியவில்லை. சரி, இதை ஏன் பார்க்கிறீர்கள், இதைவிட நல்ல விஷயங்களே உங்கள் கண்ணுக்குப் படாதா என்று கேட்பவர்களும் உள்ளனர். நிச்சயமாக இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அறிமுகம். எனவே வலைக்குள் நுழைபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பிற தகவல்களுக்குள் தாராளமாக நுழைவதே சாலச்சிறந்தது.
வெள்ளி, 1 அக்டோபர், 2010
காமன் வெல்த் போட்டி : கோலாகல துவக்கம் !
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் டெல்லியில் நாளை மறுநாள் (03.10.2010) வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது.
இதில் பங்கேற்க பல நாடுகளை சேர்ந்த 8 ஆயிரம் விளையாட்டு
வீரர்கள் காமன்வெல்த் கிராமத்தில் குவிந்துள்ளனர். காமன்வெல்த் போட்டிக்கான சுடர் ஓட்டத்தை, இங்கிலாந்து ராணி எலிசபெத், கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி தொடங்கி வைத்தார். இது 54 நாடுகள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயணம் செய்து நேற்று டெல்லி வந்தடைந்தது.
நகரில் முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை மறுநாள் டெல்லி ஜவஹர்லால் ஸ்டேடியத்தை வந்தடைகிறது.அதன்பின் காமன்வெல்த் ஜோதி ஏற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிதொடங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக காமன்வெல்த்போட்டி நடப்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காமன்வெல்த் போட்டி, நாட்டின் கவுரவம். இதை தேசிய விழாவாக கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது எல்லா பணிகளும் முடிந்து, விளையாட்டு போட்டிக்கு தயார் நிலையில் டெல்லி உள்ளது.
71 நாடுகள் போட்டிகளில் பங்கேற்கின்றன. அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் வீரர்கள் டெல்லி வந்து தங்கியுள்ளனர். போட்டி நடக்கும் இடங்கள், காமன்வெல்த் கிராமம் உள்பட டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திங்கள், 20 செப்டம்பர், 2010
விண்வெளியில் உங்கள் புகைப்படம் ! ஒரு அரிய வாய்ப்பு
விண்வெளியில் தங்கள் புகைப்படம் மிதக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா' அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், புகைப்படத்தை மட்டுமல்லாமல், பெயரையும் விண்வெளியில் மிதக்க விட முடியும்.
விண்வெளிக்கு பறக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, நமது முகமாவது பறந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. face in space என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புகைப்படத்தையோ அல்லது பெயரையோ விண்வெளியில் பறக்க விட முடியும்.
இத்திட்டத்திற்காக https://faceinspace.nasa.gov என்ற பெயரில் ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்திற்கான சுட்டி தங்களின் புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்ப விரும்புபவர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் புகைப்படத்தை "அப்லோடு' செய்ய வேண்டும்.இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை, விண்வெளிக்கு கொண்டு செல்ல டிஸ்கவரி எஸ்.டி.எஸ்.,-133 மற்றும் எண்டோவர் எஸ்.டி.எஸ்., - 134 என்ற இரண்டு விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தப்படும்.
"இத்திட்டம் பொதுமக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை விண்வெளி வீரர்கள் கொண்டு சென்று, பூமியின் வட்டப்பாதையில் மிதக்க விடுவார்கள். விண்வெளியில் இருந்து ஓடம் திரும்பியதும், விண்வெளிக்கு சென்று வந்த கமாண்டரின் கையெழுத்துடன் ஒரு நினைவுச் சான்று இன்டர்நெட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம், புகைப்படம் அனுப்பியவர் தனது புகைப்படம் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது என்ற இனிய நினைவுகளை பெற முடியும். அவர் மறைந்தாலும், அவரது புகைப்படம் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் மிதந்து கொண்டிருந்து, வரலாற்றில் அவரது உருவத்தை பதிய வைக்கும்'.
வியாழன், 16 செப்டம்பர், 2010
பெற்றோரின் டுவிட்டர் மோகம் : சிக்கியது பச்சிளங்குழந்தை

ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பது பழமொழி,
ஆனால் தற்போது சமூக வலை தளங்களைப்
பயன்படுத்தாதவன் மனிதனல்ல - புது மொழி என்பதுபோல
சமூகவலை தளங்கள் இன்றைய நாகரீக மக்களை பெரிதும்
ஆட்கொண்டுள்ளன.
அதற்கு ஒரு சான்றாக, பஞ்சாப் மாநிலம்
ஜலந்தரில் உள்ள குர்சிம்ரன் என்ற பெண் தான் டுவிட்டரில்
இணைந்ததோடு மட்டுமல்லாமல், பிறந்து 2 நாட்களே ஆன
ஹினாயத் என்று பெயர் சூட்டப்பட்ட தனது
பச்சிளங்குழந்தையையும் டுவிட்டரில் இணைத்துள்ளார்.
டுவிட்டர்அட்பேபிஹினாயத் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள
இந்த டுவிட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களின்
எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.
இதுகுறி்தது குர்சிம்ரன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :
தான் கர்ப்பமாக இருந்தபோது, என் டுவிட்டர் நண்பர்கள் எனக்காக
பிரார்த்தித்ததாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்
விதமாக, தங்களது பச்சிளங்குழந்தையையும் டுவிட்டரில்
இணைத்து, அவளது போட்டோக்களையும் டுவிட்டரில்
இணைத்ததாக அவர் அதில் தெரிவித்தார். தாங்கள், டுவிட்டரில்
பேபிஹினாயத் சேர்ந்த சில நிமிடங்களிலேயே, அவருக்கு
உலகின் பலபகுதிகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம்
உள்ளதாகவும், அவர் மேலும் கூறுகையில், டுவிட்டரில்
செய்திகள் உடனுக்குடன் பரிமாறப்படுவதால், நட்புறவு எளிதில்
விரிவடைவதாகவும், தங்கள் குழந்தைக்கு ஹினாயத் என்ற
பெயர் கூட டுவிட்டரில் உள்ள நண்பர் கூறித்தான் வைத்தது
என்றும், இதன்மூலம், டுவிட்டரில் பிறந்து 2 நாட்களே ஆன என்
குழந்தைக்கும் டுவிட்டரில் அக்கவுண்ட் உள்ளது குறித்து
பெருமையடைவதாக குர்சிம்ரன் தெரிவித்துள்ளார்.
நன்றி :
தினமலர்
சனி, 11 செப்டம்பர், 2010
பூமியை நோக்கி வரும் விண் கற்கள் !
இரண்டு விண்கற்கள் இன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது:
பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 2010ஆர்எக்ஸ்30 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் சுமார் 32 முதல் 65 அடி நீளம் இருக்கலாம் என்று தெரிகிறது.
இது பூமியை 2.46 லட்சம் கி.மீ. தூரத்தில் புதன்கிழமை கடக்கும். 2010ஆர்எப்12 என்ற கல் 20 முதல் 46 அடி நீளம் இருக்கும் என்று தெரிகிறது. இது 78 ஆயிரம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும். பிரபஞ்சத்தை பொருத்தவரை இந்த தொலைவு மிகமிக குறைவு. அதனால், ‘நூலிழையில்’ பூமி தப்பியது என்றே கூறலாம். இந்த கற்களால் பூமிக்கு ஆபத்து இல்லை
வியாழன், 9 செப்டம்பர், 2010
ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !

வலைப்பூ நண்பர்கள்,வலைப்பூ பதிவர்கள், வலைப்பூ
வாசகர்கள், மற்றும் வலைப்பூ திரட்டிகளான
தமிழ்மணம்,இன்ட்லி,தமிழ்வெளி இன்னும் பிற
உங்கள் அனைவருக்கும் என்னுடைய
" இனிய ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் "
நட்புடன்
திங்கள், 6 செப்டம்பர், 2010
3D ஒரு அதிசயம் : இனி படங்களை தொட்டுபார்க்கலாம்!
3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து
வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில்
வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும்
கேமராக்கள் வந்துவிட்டன.
3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.
இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு
தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல்
தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை
எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில்
பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது
கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே
பார்க்கலாம்.
குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம்
மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும்.
பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின்
இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன.
இதன் அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர்.
முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில்
இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



























