செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி- 1)

 
  
மருத்துவ துறையில் தமிழகம் அடைந்திருக்கும் மகத்தான வளர்ச்சியினை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சர்வேதேச தரத்திலான வசதிகளாலும்,மாநில அரசின் பொது சுகாதார கொள்கையினாலும் தமிழகம் இந்தியாவின் மருத்துவ தலைவாசலாகி வருகிறது.இதனால் வெளிநாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் மருத்துவ சேவையை நாடி தமிழம் வருகிறார்கள். முதலீடுகளும் வந்து குவிகின்றன.

நீங்கள் எப்போதாவது தமிழகத்தில் வாழ்வது குறித்து சலித்துக்கொண்டதுண்டா? மக்கள் நெருக்கடியும்,வேலையில்லாத் திண்டாட்டமும்,சமுக பிரச்சிசைனகளும், அடிப்படை வசதிகளற்ற கிராமங்களும்,உங்களை அவ்வாறு நினைக்க தூண்டி இருக்கின்றனவா? மேலைநாடுகளோடு ஒப்பிட்டு பெருமூச்செரிந்திருகிரீர்களா? நல்லது. அப்படியே அந்த சித்திரத்தை அழித்துவிடுங்கள்.இன்று நீங்கள் காணும் தமிழகம் தலை தாழ்ந்த தமிழகம் அல்ல,தலை நிமிர்ந்த தமிழகம்.

கல்வி,வாகன உற்பத்தி ஆகியவற்றுக்கு இணையாக மருத்துவத்திலும் மின்னல் வேகத்தில் வளர்ந்துவருகிறது தமிழ் கூறும் நல்லுலகம்.உலகின் வேறெந்த முன்னேறிய நாட்டைக்காட்டிலும் தமிழகத்தில் மருத்துவ துறை காட்டிவரும் வளர்ச்சி வேகம் அபரிமிதமானது.

அதற்கு பல்வேறு கோணங்களும்,பல்வேறு காரணங்களும்  இருக்கின்றன. 1991-92 ல் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் அளவு ரூ. 6250. கோடி.அதில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு ரூ.411. கோடி.ஆனால்  2009-2010 ல் மாநில அரசின் பட்ஜெட் ரூ. 59,295 கோடி. இதில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.3,390.69 கோடி. அதாவது மொத்த பட்ஜெட்டில் இது 5.37 சதவீதம்.

நாட்டின் மிக வேகமாக வளர்ந்துவரும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் பொது சுகாதாரத்திற்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு அதிகரித்துவருவது மாற்றத்தின் குறியீடு மட்டுமல்ல,முன்னேற்றத்தின் குறியீடும்தான். மருத்துவ துறையைப் பொறுத்தவரை நாட்டின் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு தமிழகத்திற்கு எப்போதும் உண்டு.


அதுதான் பொது சுகாதாரத்துறையில் அரசின் அதீதமான பங்களிப்பு.நோயரிதலுக்காக வரும் முன் காப்போம் திட்டம்,ரூ. 150 கட்டணத்தில் அரசு மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை திட்டம்,பள்ளிக் குழந்தைகளைப் பரிசோதிக்க மருத்துவ முகாம்கள், 15 அரசு மருத்துவக் கல்லூரிகள்,கடந்த ஆண்டு ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம், அவசர கால சிகிச்சைக்கான 108  ஆம்புலன்ஸ் சேவை, கர்ப்பிணிப் பெண்களுக்கான " டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதிவுதவித் திட்டம் "  என்று கருவுறும் காலம் முதல் கல்லறை வரை பொது சுகாதாரத் துறையின் வாயிலாக தமிழக அரசு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. 

இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிலேயே இங்கு மட்டும்தான் இருக்கின்றன என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். உலகிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ வசதிகள் (அரசு மூலமாக ) வழங்கப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

இந்தியாவிலேயே இங்குதான்  1533 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சேவையாற்றி வருகின்றன.தமிழக ஆட்சி கட்டிலில் எந்த கட்சி அமர்ந்தாலும் மேற்கண்ட நலத்திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டதில்லை என்பது ஆரோக்கியமான விஷயம்.இதன் விளைவாக பிரசவகால  இறப்பு வீதம் கணிசமாகக் குறைந்து வந்திருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  மருத்துவ சேவைகளை வழங்குவதில் அரசுக்கு உள்ள பங்கு கணிசமான அளவு செலுத்தப்பட்டு வந்த போதிலும்,செல்ல வேண்டிய தூரம் அதைத் தாண்டியும் நிறையவே இருக்கிறது என்பதை தமிழகம் என்றோ உணர்ந்த்துவிட்டது. அதன் விளைவாகத்தான் மருத்துவத் துறையில் தனியார் பங்களிப்புக்கு பெருமளவு ஊக்கம் தரப்பட்டது.

தரமான மருத்துவக் கல்வியைப் பெற்ற ஒரு தலைமுறை அத்துறையில் தொழில்முனைவோராகவும் உருவெடுக்க,மருத்துவ சேவைத் துறை ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த துறையாகப் பரிமளிக்க ஆரம்பித்தது. கடந்த  30 ஆண்டுகளில் தமிழக மருத்துவத் துறை கண்ட வளர்ச்சி என்பது அரசு மற்றும் தனியார்  ஆகிய இரு கைகளின் ஓசைதான் என்று தாராளமாகச் சொல்லலாம்.

இன்னும் வரும் ............................
Source : India Today 



2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

தமிலகம் தலைனிமிர்ந்து நிர்க்கிறது. உங்கள் கட்டுரை அருமை. வாழ்த்துக்கள்.

புருனோ சொன்னது…

கட்டுரைத்தொடருக்காக

நன்றிகள்
வாழ்த்துக்கள்