நன்றி: பொறியாளர் சுல்தான் அவர்கள்.
ஞாயிறு, 17 ஜூன், 2012
குலசை: உலகத் தந்தையர் தினம்
குலசை: உலகத் தந்தையர் தினம்: உலகத் தந்தையர் தினமான இன்று இந்த உலக தந்தையர்களை நினைவில் கொள்வோமே! உலகத் தந்தையர்கள் இவர்களின் கண்டுபிடிப்புக்கள் முதல் முதல...
நன்றி: பொறியாளர் சுல்தான் அவர்கள்.
நன்றி: பொறியாளர் சுல்தான் அவர்கள்.
திங்கள், 11 ஜூன், 2012
நாம் தமிழர் கட்சியின் 'புதிய பார்ப்பனியம்'
நாம் தமிழர் கட்சி ஆவணம் அக்கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், வரலாற்று சம்பவங்களாக பல திரிபுகளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட ஓட்டுக்கட்சி அரசியலால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரான தமிழ்த்தேசிய முழக்கத்தை கையிலெடுத்திருக்கும் 'செந்தமிழன்' சீமான் அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் முன்வைக்காமல், எதிர்ப்பு அரசியலிலும், தமிழினம் போற்றும் தலைவர்களை குறை சொல்வதிலும் அதீத கவனம் கொண்டு ஆவணத்தை வெளியிட்டிருக்கிறார்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20043:2012-06-10-07-42-45&catid=1:articles&Itemid=264
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20043:2012-06-10-07-42-45&catid=1:articles&Itemid=264
செவ்வாய், 14 டிசம்பர், 2010
கறைபட்டுப் போன கனவு ?
முகத்திலே முறுவல், நடையில் நம்பிக்கையின் துள்ளல்.மிடுக்காக உடை அணிந்து தலை நிமிர்ந்து நடந்து வருகிற இளைஞனின் முகத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.வசிகரமா ? கம்பீரமா ? தன்னம்பிக்கையா
எனக்கு அதைச் சொல்ல சரியான வார்த்தை அகப்படவில்லை.
வர்ணிக்க முடியாத அந்த வசீகரத்தின் பின் ஒரு வரலாறு இருக்கிறது.
நெடுநாள்களாக நானறிந்த பையன் அவன்.சில ஆண்டுகளுக்கு முன் வரை அவன் பொருளாதாரப் பின்னணி ஒன்றும் பிரமாதமாக இருந்திடவில்லை.ஆனால் அவன் நம்பிக்கை வைத்திருந்த கல்வியும்,அதற்குப்பின் இருந்த உழைப்பும்,உலகை ஜெயிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவனை மாற்றின.வெற்றியும் இளமையும் இன்று அவன் விலாசங்களாகிவிட்டன.
கம்பீரமான இளைஞன் என் ஜன்னலைக் கடந்து போனான்.அவன் முதுகுப் புறத்தைப் பார்த்த நான் பதறிப் போனேன்.அவனது ஆடையின் பின் புறம் முழுவதும் -மிடுக்கான ஆடை எனச் சற்று முன் சொன்னேனே அந்த ஆடை-முழுக்க சேறு.குதிங்காலில் இருந்து தோள்பட்டைவரை மழைச் சேறு புள்ளி புள்ளியாய் கோலமிட்டிருந்தது.புள்ளிகள் எல்லாம் பெரும் புள்ளிகள்.
எப்படி சேறு வந்தது என்று உற்றுப்பார்த்தேன்.பாதுகாக்கும் என்று எண்ணி அவன் அணிந்திருந்த ரப்பர் செருப்பு தயக்கமின்றி அவன் முதுகில் சேற்றை வாரித் தெளித்திருந்தது.முதுகெல்லாம் சேறு இருப்பதை அறியாமல் அவன் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான்
மிடுக்காக.
அவனது முன்புறத்தையும் முகத்தையும் பாத்தவர்கள் நட்புப் பாராட்டி முறுவலித்தர்கள்.முதுகைப் பார்த்தவர்கள் ஏளனமாக சிரித்து உதட்டோரம் சிரிப்பை ஒளித்துக் கொண்டார்கள்.
ஓடிப் போய் அந்த இளைஞனிடம் உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும் என ஓர் துடிப்பு எழுந்தது. பாதுகாக்கும் என நீ நினைத்த செருப்பு உன்னைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது நண்பா.உதறி தள்ளு அதை என அவனுக்குச் சொல்லும் ஆசையில் எழுந்தேன்.
என் மடியில் இருந்த செய்தித்தாள்கள் நழுவித் தரையில் விழுந்து விரிந்தன.
விரிந்த இதழ்கள் எல்லாவற்றிலும் ஊழல் செய்திகள் ஒலித்துக் கொண்டிருந்தன.காற்றையும் காந்த அலைகளையும் காசு பண்ணிய ஊழல்.படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை பதவியில் இருப்பவர்கள் பங்கு போட்டுக் கொண்ட ஊழல்.அண்டை மாநிலத்தில் அரசு நிலத்தை பெண்டு பிள்ளைகளுக்கு ஒதுக்கிய ஊழல்.
உலக அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் உள்ளிருந்தே சுருட்டிய ஊழல்.வரிக்கு வரி,வார்த்தைக்கு வார்த்தை ஊழல்கள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அந்த நொடியில் நமது அரசமைப்பு சட்டம் இந்த தேசத்தை "சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசு " என்று வர்ணிக்கின்ற வரி மனதில் ஓடி மறைந்தது.
அத்தனையும் பொய்,அர்ததமற்ற அலங்கார வார்த்தைகள் என உள்ளம் குமுறியது.
உன்னதமான ஒரு கனவு கறைபட்டுப் போனதை எண்ணிய போது இதயத்தின் ஓரத்தில் ஊமை வலி ஒன்று எழுந்தது.உட்கார்ந்து விட்டேன்.அந்த இளைஞனைப் போல் அல்லவா இருக்கிறது என் தேசம்! முதுகிலே இருக்கிற சேறு தெரியாமல் முகத்திலே முறுவல் ஏந்தி நடை போடுகிறது.காலனி போல் காப்பாற்றும் என நினைத்த அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் சகதியை அல்லவா வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறையாக நடந்திருந்தால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருமானம் வந்திருக்கும் என்கிறது மத்திய தணிக்கை அறிக்கை.அரசுக்கு இந்த பணம் வந்திருந்தால் இப்போது உள்ளதைவிட பள்ளிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகரித்திருக்கலாம்.( இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கிய நிதி 49,904 கோடி ரூபாய் ) எத்தனை விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்திருக்கலாம்! விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு 70 ஆயிரம் கோடி.இது அதைப் போல இரண்டரை மடங்கு அதிகம்.
ஊழலினால் பாதிக்கப்படுவது அமைச்சர்கள் வீட்டு குழந்தைகள் அல்ல.
அதிகாரிகளின் வீட்டு பிள்ளைகளும் அல்ல.பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும்,சிறுதொழில் புரிவோர்க்களும்தான்.ஊழல் நிறைந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெரிய நிறுவனங்கள் ஏகபோக சந்தைகளை உருவாக்கி கொள்கின்றன.அதிக லாபம் அடைகின்றன. அவை இந்த ஊழல்நிறைந்த அமைப்பைப் பாதுகாக்கவே முயற்சிக்கும்.
சமநீதி கொண்ட,சம வாய்ப்புக் கொண்ட ஒரு சமூகத்தில் நம் குழந்தைகள், நம் குழந்தைகளின் குழந்தைகள் வாழ வேண்டும் என நாம் நிஜமாகவே விரும்புவோமானால் ஊளை ஒழிக்கக் களமிறங்க வேண்டும்.அதில் ஈடுபட்டோரையும்,அவர்களைக் காப்போரையும் கடுமையாக விரைந்து தண்டிக்க வகை செய்யும் சட்டங்களும் அமைப்புகளும் கோரி நாம் குரலெழுப்ப வேண்டும்.
ஏனெனில் ஊழலை விடக் கொடுமையானது அதைக் கண்டு அமைதி காப்பது.
நன்றி : திரு.மாலன் அவர்கள்
புதிய தலைமுறை
செவ்வாய், 16 நவம்பர், 2010
இனிய தியாகத் திருநாள் (பக்ரீத்)வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அழைக்கும்.....
தியாகத் திருநாள் (பக்ரீத்)வாழ்த்துக்கள் ........

வலைப்பூ நண்பர்கள், வலைப்பூ வாசகர்கள், வலைப்பூ திரட்டிகளான தமிழ்மணம், இன்ட்லி,தமிழ்வெளி, தமிழ் 10 மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த

" இனிய தியாகத் திருநாள் (ஹஜ்ஜு பெருநாள் ) வாழ்த்துக்கள்.. "
நட்புடன்
அபுல்.
திங்கள், 25 அக்டோபர், 2010
தமிழனின் வெற்றிக்கு வாக்களிப்போம் !
நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!!
தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை.
இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில் வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின் கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!
இந்தமாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக உதவணும் என்று இவர் முடிவு செய்த போது இவரது வயது வெறும் 21
இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!
இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது!
கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது
இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspx
- இதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.
- உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.
- அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள்.
- அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.
- முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.
மறக்காமல் உங்கள் வாக்கை பதிவு செய்து ஒரு தமிழனை வெற்றி
பெறச் செய்யுங்கள்.
நன்றி : சசிகுமார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


