திங்கள், 20 செப்டம்பர், 2010

விண்வெளியில் உங்கள் புகைப்படம் ! ஒரு அரிய வாய்ப்பு

     விண்வெளியில் தங்கள் புகைப்படம் மிதக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா' அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், புகைப்படத்தை மட்டுமல்லாமல், பெயரையும் விண்வெளியில் மிதக்க விட முடியும்.


விண்வெளிக்கு பறக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, நமது முகமாவது பறந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. face in space  என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புகைப்படத்தையோ அல்லது பெயரையோ விண்வெளியில் பறக்க விட முடியும்.
 இத்திட்டத்திற்காக https://faceinspace.nasa.gov என்ற பெயரில் ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்திற்கான  சுட்டி  தங்களின் புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்ப விரும்புபவர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் புகைப்படத்தை  "அப்லோடு' செய்ய வேண்டும்.இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் புகைப்படங்கள் மற்றும்  பெயர்களை, விண்வெளிக்கு கொண்டு செல்ல டிஸ்கவரி எஸ்.டி.எஸ்.,-133 மற்றும் எண்டோவர் எஸ்.டி.எஸ்., - 134 என்ற இரண்டு விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தப்படும். 

"இத்திட்டம் பொதுமக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை விண்வெளி வீரர்கள் கொண்டு சென்று, பூமியின் வட்டப்பாதையில் மிதக்க விடுவார்கள். விண்வெளியில் இருந்து ஓடம் திரும்பியதும், விண்வெளிக்கு சென்று வந்த கமாண்டரின் கையெழுத்துடன் ஒரு நினைவுச் சான்று இன்டர்நெட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம், புகைப்படம் அனுப்பியவர் தனது புகைப்படம் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது என்ற இனிய நினைவுகளை பெற முடியும். அவர்  மறைந்தாலும், அவரது புகைப்படம் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் மிதந்து கொண்டிருந்து, வரலாற்றில் அவரது உருவத்தை  பதிய வைக்கும்'.


 

வியாழன், 16 செப்டம்பர், 2010

பெற்றோரின் டுவிட்டர் மோகம் : சிக்கியது பச்சிளங்குழந்தை



ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பது பழமொழி, 
ஆனால் தற்போது சமூக வலை தளங்களைப் 
பயன்படுத்தாதவன் மனிதனல்ல - புது மொழி என்பதுபோல 
சமூகவலை தளங்கள் இன்றைய நாகரீக மக்களை பெரிதும் 
ஆட்கொண்டுள்ளன. 

அதற்கு ஒரு சான்றாக, பஞ்சாப் மாநிலம் 
ஜலந்தரில் உள்ள குர்சிம்ரன் என்ற பெண் தான் டுவிட்டரில் 
இணைந்ததோடு மட்டுமல்லாமல், பிறந்து 2 நாட்களே ஆன 
ஹினாயத் என்று பெயர் சூட்டப்பட்ட தனது 
பச்சிளங்குழந்தையையும் டுவிட்டரில் இணைத்துள்ளார். 

டுவிட்டர்அட்பேபிஹினாயத் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள 
இந்த டுவிட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களின் 
எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. 
இதுகுறி்தது குர்சிம்ரன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : 

தான் கர்ப்பமாக இருந்தபோது, என் டுவிட்டர் நண்பர்கள் எனக்காக 
பிரார்த்தித்ததாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் 
விதமாக, தங்களது பச்சிளங்குழந்தையையும் டுவிட்டரில் 
இணைத்து, அவளது போட்டோக்களையும் டுவிட்டரில் 
இணைத்ததாக அவர் அதில் தெரிவித்தார். தாங்கள், டுவிட்டரில் 
பேபிஹினாயத் சேர்ந்த சில நிமிடங்களிலேயே, அவருக்கு 
உலகின் பலபகுதிகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் 
உள்ளதாகவும், அவர் மேலும் கூறுகையில், டுவிட்டரில் 
செய்திகள் உடனுக்குடன் பரிமாறப்படுவதால், நட்புறவு எளிதில் 
விரிவடைவதாகவும், தங்கள் குழந்தைக்கு ஹினாயத் என்ற 
பெயர் கூட டுவிட்டரில் உள்ள நண்பர் கூறித்தான் வைத்தது 
என்றும், இதன்மூலம், டுவிட்டரில் பிறந்து 2 நாட்களே ஆன என் 
குழந்தைக்கும் டுவிட்டரில் அக்கவுண்ட் உள்ளது குறித்து 
பெருமையடைவதாக குர்சிம்ரன் தெரிவித்துள்ளார். 

நன்றி :
தினமலர்

 

சனி, 11 செப்டம்பர், 2010

பூமியை நோக்கி வரும் விண் கற்கள் !


இரண்டு விண்கற்கள் இன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது: 

பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 2010ஆர்எக்ஸ்30 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் சுமார் 32 முதல் 65 அடி நீளம் இருக்கலாம் என்று தெரிகிறது.
இது  பூமியை 2.46 லட்சம் கி.மீ. தூரத்தில் புதன்கிழமை கடக்கும். 2010ஆர்எப்12 என்ற கல் 20 முதல் 46 அடி நீளம் இருக்கும் என்று தெரிகிறது. இது 78 ஆயிரம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும். பிரபஞ்சத்தை பொருத்தவரை இந்த தொலைவு மிகமிக குறைவு. அதனால், ‘நூலிழையில்’ பூமி தப்பியது என்றே கூறலாம். இந்த கற்களால் பூமிக்கு ஆபத்து இல்லை

வியாழன், 9 செப்டம்பர், 2010

ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !

வலைப்பூ நண்பர்கள்,வலைப்பூ பதிவர்கள், வலைப்பூ 
வாசகர்கள், மற்றும் வலைப்பூ திரட்டிகளான 


தமிழ்மணம்,இன்ட்லி,தமிழ்வெளி இன்னும் பிற 
உங்கள்  அனைவருக்கும் என்னுடைய  

" இனிய ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் "  

நட்புடன்
 

திங்கள், 6 செப்டம்பர், 2010

3D ஒரு அதிசயம் : இனி படங்களை தொட்டுபார்க்கலாம்!



 
3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து 
வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் 
வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் 
கேமராக்கள் வந்துவிட்டன. 

3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.
இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு
தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல்
தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை 
எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில் 
பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது 
கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே 
பார்க்கலாம்.

குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் 
மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும். 
பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் 
இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன. 

இதன்  அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். 
முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில் 
இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.