செவ்வாய், 22 டிசம்பர், 2009

"பேரீச்சை" பழத்தின் மகத்துவம்


உலகின் பழமையான நாகரிகமான “மெசபடோமியா”வில்தான் முதன் முதலாகப் பேரீச்சம்பழத்தின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள பேரீச்சம்பழம் கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் “சத்துணவுப்பழமாக” உலக மக்களால் உண்ணப்பட்டு வருகின்றது.

ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்.

தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.

எங்கேனும் அடிபட்டதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும்போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.

தினசரி 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அ மிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.

காலம் மாறும் கனவு மெய்ப்படும்


இனவிடுதலைக்காகவும் அடக்குமுறைக்கும் எதிராகப் போராடியவர்கள் எல்லோரும் அவர்களது வாழ்நாளிலேயே வெற்றி பெற்றுவிடவில்லை. உண்மையான போராளிகள் அதை எதிர்பார்க்கவும் முடியாது. அதுவும் ஆயுதப் போராட்டம் என்றால், வாழும் காலத்தில் இலக்கை எட்டும் வாய்ப்பு மிகவும் அரிது. அப்படிப்பட்டதொரு நிலைதான் ஈழத்துக்காகப் போராடியவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது போராட்டம் முடிந்து போனதற்கான அடையாளம் இல்லை. சமகால ஆயுதக் குழுக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஓர் அத்தியாயம் அவ்வளவுதான்.

விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக ஒடுக்கப்பட்டு விட்டதால், ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைக் காட்டி, போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இந்த வெற்றிடம் நிரந்தரமானதல்ல என்பதைத் தமிழர்கள் அறிவார்கள். ஏன் இலங்கை அரசுக்கே கூட அந்த அச்ச உணர்வு உண்டு. ஆனால் எந்த வகையான போராட்டம் இனி தொடரப்போகிறது? போராட்டத்துக்கு தலைமை ஏற்கப்போவது யார்? என்பன போன்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் தமிழ் பேசும் அனைவரிடமும் இருக்கிறது.

எப்படியும் விடிவு ஏற்படும் என்கிற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு ஓர் இனம் காத்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டுமானால், இந்த நம்பிக்கையை வலுப்படுத்தியாக வேண்டும். குறைந்தபட்சம் இந்த நம்பிக்கையைத் தகர்க்காமலிருக்கலாம். 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் உச்ச நாள்களில் நடந்த மர்மங்களே இன்று வரைக்கும் விலகாத நிலையில், நாள்தோறும் புதிய கதைகள் புனையப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கதைகள் தார்மிக ரீதியாகத் தமிழர்களுக்கு ஆதரவானவை போன்று தோன்றினாலும், இன விடுதலைக்கான நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் பணியைத்தான் அவை செய்கின்றன. தமிழர்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

போராட்டக்காரர்கள் பிரிந்து கிடப்பதாகவும், சுயநலமாகச் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசியவிடப்படுகின்றன. இந்தத் தகவல்கள் ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் என்று கூறி வருபவர்களை யாரும் நம்ப வேண்டாம்  அவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என்பன போன்ற அறிவுரைகளும் நடமாடுகின்றன. சில ஊடகங்கள் ஒரு தரப்பை நல்லவர்களாகவும், மற்றவர்களை மோசக்காரர்களாகவும் காட்டுகின்றன.

ஒரு கட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்கள், இன்று துரோகிகளாகவும், இலங்கை அரசின் கைப்பாவைகளாகவும் மாறி இருக்கிறார்கள். ராணுவத்துக்குத் தலைமையேற்று பயங்கரமான சித்திரவதைக் கொலைகளை அரங்கேற்றியவர்கள் ஆபத்பாந்தவர்களாக உருமாற்றம் பெற்றிருக்கிறார்கள். மக்களைக் குழப்புவதற்காக நடத்தப்படும் இந்த ராஜதந்திர விளையாட்டில், தமிழ் அரசியல் கட்சிகளும் சிலரின் பேனாக்களும்கூட சிக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தக் குழப்பமான சூழலைக் கண்டு தமிழர்கள் யாரும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய அவசியமேயில்லை. உலகின் எல்லா வகையான விடுதலைப் போராட்டங்களிலும் வெவ்வேறு கட்டங்களில் இதுபோன்ற குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கத்தான் செய்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்துக்குக்கூட இது பொருந்தும். ஈழத் தமிழர் போராட்டம் அடுத்த நிலைக்கு உருமாற வேண்டிய நேரம் இது. அரசியல் ரீதியாகவோ வேறு வழியிலோ ஒரு சீரிய தலைமையின்கீழ் தமிழர்கள் ஒன்றுபடும்வரை இந்தக் குழப்பம் நீடிக்கத்தான் செய்யும்.

ஆனால், ஈழத்திலும் அது தொடர்பாக உலகமெங்கும் உள்ள போராட்டக்காரர்கள் மத்தியிலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் சிறுசிறு கருத்து மோதல்களையும் அலசி ஆராய்ந்து, அவசரப்பட்டு ஒவ்வொருவரையும் துரோகிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் முத்திரை குத்துவது, புதிய தலைமை உருவாவதைத் தாமதப்படுத்துவதற்குத்தான் உதவும். இந்த விஷயத்தில் புலனாய்வு செய்வது இப்போதைக்கு அவசியமே இல்லை. ஊகங்களை வெளியிடுவதையும், கண்மூடித்தனமாகக் குற்றம்சாட்டுவதையும்,  தவிர்த்தாலே, போராட்டம் அடுத்தகட்டத்துக்கு விரைவாக முன்னேறும்.

அதிபர் தேர்தல் சமீபித்திருக்கும் இந்த வேளையில், பொன்சேகாவுக்கு சில தமிழ்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சில கட்சிகள் தனித்து தேர்தலைச் சந்திக்கின்றன. வேறு சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன. இதில் எது தவறு, எது சரியென்று கூறுவதற்கில்லை.

தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கைகளால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் இப்போது நமக்குத் தெரியாது. நல்லதும் நடக்கலாம், தீயதும் நடக்கலாம். இந்தச் சூழலில் தமிழ்க்கட்சிகளை தமிழர் ஆதரவு ஊடகங்களும் உலகெங்கும் வசிக்கும் போராட்டக்காரர்களும் விமர்சிப்பது, தமிழர்களுக்குள் பிளவைத்தான் ஏற்படுத்தும். ஒன்றுபடுவதைத் தாமதப்படுத்தும். எல்லோரும் தங்களது பொறுப்புணர்ந்து இதுபோன்ற விமர்சனங்களை இப்போது தவிர்க்கலாம்.

சொந்த மண்ணில் முள்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்களை, மறு குடியமர்த்தும் பணிகளை வலியுறுத்துவது ஒன்றே தமிழ் அரசியல்கட்சிகளும் போராட்டக்காரர்களாக அடையாளப்படுத்திக் கொள்வோரும் இப்போதைக்குச் செய்ய வேண்டிய முதல் பணியாக இருக்க வேண்டும். மற்ற வேலைகளைப் பிறகு பார்க்கலாம். 

காலம் மாறும், கனவு ஒருநாள் மெய்ப்படும் 


நன்றி:
திரு:எம்.மணிகண்டன்

திங்கள், 21 டிசம்பர், 2009

புது பொலிவுடன் சென்னை மெரீனா கடற்கரை


மெரினா கடற்கரை ரூ.26 கோடியில் உலக தரத்துக்கு இணையாக அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதை முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார்.

உலகின் 2வது நீண்ட கடற்கரையான மெரினாவுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். கடந்த 1884ல் அன்றைய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்ட்ன் கிராண்ட் டஃப் என்பவர்தான் கடற்கரையில் முதன்முதலாக அழகான நடைபாதை அமைத்து ‘மெரினா‘ என்று பெயர் சூட்டினார். ‘‘பெருமை வாய்ந்த மெரினா கடற்கரை, உலக தரத்துக்கு இணையாக அழகுபடுத்தப்படும்’’ என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

அதன்படி, முதல் கட்டமாக தலைமை செயலகம் எதிரில் ரூ.10 கோடியில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, அழகிய புல்வெளி, வண்ண பூங்கா அமைக்கப்பட்டது. இதை முதல்வர் கருணாநிதி கடந்த மே மாதம் திறந்து வைத்தார்.

இரண்டாவது கட்டமாக காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை ரூ.25.92 கோடியில் 3.10 கி.மீ. தூரத்துக்கு அழகுபடுத்தப்பட்டது.

கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, அலங்கார விளக்குகள், புல்வெளிகள், நீரூற்று, நடைபயிற்சிக்கான தனிபாதை, வாகனங்கள் நிறுத்த இடம், நவீன கழிப்பிட வசதி என பல அம்சங்களுடன் மெரினா கடற்கரை அழகுபடுத்தப்பட்டுள்ளது.  கடல் பறவை வடிவில் சாலை விளக்குகள், அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மெரினா கடற்கரை ஜொலிக்கிறது.

அழகுபடுத்தப்பட்ட மெரினா கடற்கரை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை, முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர், அவர் சர்வீஸ் சாலையில் காரில் சென்று கடற்கரை அழகை ரசித்தார். காமராஜர் சாலையில் செம்மொழி அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையையும் முதல்வர் திறந்து வைத்து மரக்கன்று நட்டார்.

மெரினாவை அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து முதல்வரிடம் மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் விளக்கினர். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், தலைமை செயலர் ஸ்ரீபதி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை காந்தி, காமராஜர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் தமிழ்ச் சான்றோர்களின் சிலைகள் அமைந்துள்ளன. இந்த சிலைகள் உள்ள பகுதியை சுற்றிலும் கிரானைட் கற்கள் பதித்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. சிலைகளின் மீது ஒளிவீசும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களை முட்டாள்களாக்கும் தொ(ல்)லைகாட்சி வியாபாரம்


         மக்களின் நம்​பிக்​கையை வைத்து லாப​கர​மாக வியாபாரம் செய்வது எப்படி என்பதை நமது தொலைக்​காட்சி சானல்க​ளைப் பார்த்​துத்​தான் கற்​றுக்​கொள்ள வேண்​டும். காலை​யில் எழுந்தவுடன், அவசர அவசரமாகக் குழந்தைக​ளைப் பள்​ளிக்கோ கல்லூ​ரிக்கோ தயார் செய்து அனுப்பி​விட்​டுக் கணவரை அலுவலகத்​திற்​குப் புறப்படச் செய்வதற்​குள் 
குடும்பத்தலைவிக​ளுக்கு போதும் போது​மென்​றாகி விடுகிறது. இடையே மூச்சுவிடக் கூட நேரம் இருப்ப​தில்லை என்ப​தால், தொலைக்​காட்சி​யின் பக்கம் கவனம் செலுத்துவது என்​கிற பேச்​சுக்கே இட​மில்லை.​ அத​னால்​தான் பெரும்​பா​லான சானல்க​ளில் ஆன்மிகம், செய்திகள் போன்ற அனைவ​ருக்​கும் பொது​வான நிகழ்ச்சிகள் அந்த நேரத்​தைப் பங்கு​போட்​டுக் கொள்​கின்றன. 

          இந்தக் காலை​நேர அவசரங்கள் முடிந்த பிறகு, நிதானமாகத் தொலைக்​காட்சி​யைத் திருப்​பும் குடும்பத் தலைவிகள் மீது தங்கள் தாக்குத​லைத் தொடங்கு​கின்றன நமது சானல்கள். பொது​வாக, ஒவ்​வொரு குடும்பத்தி​லும் ஏதாவது ஒரு பிரச்னை குறித்த கவலை குடும்பத் தலைவிக​ளுக்கு இருப்ப​துண்டு. இந்தக் கவலை​யைத் தங்க​ளுக்​குச் சாதகமாகப் பயன்ப​டுத்தி, அவர்களது அறியாமையை​யும் நம்​பிக்கையை​யும் காசாக்க முயல்​கின்றன சில வர்த்தக நிறுவனங்கள். உங்கள் பிரச்னை தீர​வேண்​டுமா? இந்தக் கல்லை வாங்​குங்கள், அந்தக் கவசத்தை வாங்​குங்கள் என்று சானல்க​ளில் ஜோராகக் களை கட்டுகிறது இந்த நம்​பிக்கை வியாபாரம். காசு ஒன்றே குறி என்​கிற உன்னத​மான குறிக்கோ​ளோடு, கண்ணை மூடிக்​கொண்டு சானல்க​ளும் இதற்​குத்  துணை போவது கொடுமையி​லும் கொடுமை! 

           விஜய்  தொலைக்​காட்சி​யில், அதிர்ஷ்டக் கற்களை விற்பனை செய்வதற்​காக வரும் நகைக்க​டைக்காரர், போக​ரின் பாஷா​ணம், சித்தர் திருவள்ளுவர், காமா கதிர்கள், இரும்பு தங்க​மாக மாறுவது (தெரிந்​தால் இவரே தங்கம் தயா​ரிக்க வேண்டியது​தானே!) என்பது போன்ற ஒன்​றுக்​கொன்று சம்பந்த​மில்​லாத விஷயங்களை அதிர்ஷ்டக் கற்களுடன் தொடர்​புப்ப​டுத்​திப் பேசி​யும், ஜெம்மாலஜி, க்ராஃபாலஜி, அஸ்ட்ராலஜி, ஃப்​யூச்சராலஜி, நியூமராலஜி என்று ஏகப்பட்ட 'லஜி'களைக் கூறி​யும், ஏற்கெனவே குழப்பத்​தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்​தில் ஆழ்த்தி​னார்.     

            உங்கள் ஜாதகத்துடன் நகைக்க​டைக்​குள் செல்வது, மாஸ்டர் செக்கப்​பிற்​காக மருத்துவம​னைக்​குச் செல்வ​தைப் போன்றது என்று தனது வியாபாரத்​திற்கு வலு சேர்க்​கும் இவர் சொல்ல வருவது என்ன​வென்​றால், 'எங்கள் கடை​யில், நாங்கள் கூறும் ரத்தினக் கற்களை வாங்கி அணி​யுங்கள், உங்கள் பிரச்னைகள் அனைத்​தும் தீர்ந்துவி​டும்' என்பது​தான். கல் ஒன்று, மாங்​காய் இரண்டு என்பது பழ​மொழி. கல் ஒன்று, பலன்கள் பல என்பது இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து​கொண்ட புது​மொழி!   

           அதிர்ஷ்டக்கல் வியா​பாரி தனது வியாபாரத்தை முடித்து​விட்​டுச் சென்றவுடன் அந்த இடத்தை விரைந்து நிரப்புகி​றார் கட​வுள் பெய​ரில் கவச விற்பனை செய்​யும் சாமி​யார் வேட​மிட்ட ஒரு வியா​பாரி.​  செல்வச் செழிப்பு, புகழ், நோயற்ற ஆரோக்​கிய வாழ்வு ஆகியவற்​றோடு எதிரிகளை வீழ்த்துவது, விபத்திலி​ருந்து காப்பது, வழக்குக​ளில் வெற்றி பெற வைப்பது போன்ற உப பலன்களை​யும் நல்குகிற​தாம் இந்தக் கவசம் (ராணுவத்தினர், வாகன ஓட்டிகள், வழக்குறைஞர்கள் கவ​னிக்க)​. குழந்தைக​ளுக்​குப் பள்​ளிக் கட்டணம் கூடக் கட்ட முடி​யாத நிலை​யில் இருந்த ஒருவர், இந்தக் கவசத்தை வாங்​கிய பின்னர் (கவசம் வாங்க மட்​டும் காசு எங்கி​ருந்து வந்த​தென்று தெரிய​வில்லை!) செல்வச் செழிப்​பில் திளைப்பதாகப் பேட்டி​யும் உண்டு.   

            இதைத் தொடர்ந்து  - கண் திருஷ்​டியிலி​ருந்து காக்​கும் மெகா சுரக்ஷா கவர். கண் திருஷ்டி பற்றி பைபிளி​லும் குரானி​லும் கூடக் குறிப்பிடப்பட்டி​ருப்பதாகக் கூறித் தங்கள் வியாபாரத்​திற்கு வலு சேர்த்​தார்கள் இந்நிகழ்ச்சி​யில். கல்யாணமா​காத பெண்கள் இதை வாங்கி​னால் உடனே திருமணம் நிச்சயமாகு​மாம் (பலன​டைந்தவ​ரின் பேட்டி​யும் உண்டு). இத்த​னைக்​குப் பிற​கும் நீங்​கள் ஏமாளியாகாமல் இருந்​தால் ஆச்சரியம்​தான்! 



     

          மக்கள் தொலைக்​காட்​சிப் பக்கம் போனால்,  'உங்க​ளைச் சொட்டை, வழுக்கை, கிரிக்​கெட் கிர​வுண்டு என்று கிண்டல் செய்கி​றார்களா? கவ​லைப்​பட வேண்​டாம், எங்க​ளுக்கு போன் செய்​யுங்கள்' என்று அழைத்​துக்​கொண்டி​ருந்​தார் ஒருவர். ஏதோ காவல்துறையின​ரின் அறி​விப்பு இது என்று நினைத்​தால், அது உங்கள் தவறு. குறிப்​பிட்ட தைலத்தை வாங்​கிப் பூசி​னால், இத்த​கைய கிண்டல் பேச்சுகளிலி​ருந்து தப்​பும் அள​விற்கு உங்கள் சொட்டை, வழுக்கை​யெல்​லாம் மறைந்து முடி கருகரு​வென்று வளரு​மாம். மக்க​ளின் பலவீனங்க​ளில் இது​வும் ஒன்றல்லவா? அதைக் காசாக்க முயல்பவர்க​ளுக்கு உத​விக்​கொண்டி​ருந்தது மக்கள் தொலைக்​காட்சி. நீங்க​ளுமா?    







            மெகா தொலைக்​காட்சி​யிலோ, கருப்பானவர்க​ளைச் சிவப்​பாக மாற்​றும் மந்திரக் களிம்பு விற்பனை... அந்தக்​கால முனிவர்க​ளின் கடுமை​யான உழைப்​பின் பல​னாம் இது (முனிவர்கள் இதற்காகத்​தான் கடுந்தவம் புரிந்​தார்கள் போலி​ருக்கிறது!). ஜெயா, ராஜ், பொதிகை எனப் பெரும்பா​லான சானல்களை ஆக்கிர​மித்​துள்ள இந்த வியா​பார வில்லங்கங்கள் எவ்வளவு விபரீதமானவை என்பது பற்றி யாருக்​கென்ன கவலை? Magical remedy  பற்றி விளம்பரம் செய்யக் கூடாது என்று, ஏதோ விதி இருப்ப​தாக, எப்​போதோ, யாரோ சொல்லக் கேட்ட ஞாபகம்! அப்படி ஏதாவது இருக்​கும் பட்சத்​தில், அந்த விதி எங்கே தூங்​கிக்​கொண்டி​ருக்கிறது என்ப​தைக் கண்டுபி​டித்​துக் கொடுப்பவர்க​ளுக்​குப் பரிசு அறி​விக்க​லாம்!    


   


       

 

கல், தகடு, அதிர்ஷ்டம் என்ற நம்​பிக்கைகள் ஒருபுறம் என்​றால், பங்​குச்சந்தை மீதான நம்​பிக்கை மறுபுறம். இந்த நம்​பிக்கை​யைப் பங்கு​போட்​டுக்​கொண்டு விற்பதி​லும் சளைத்தவையல்ல நமது சானல்கள். வணிகம் வசப்ப​டும் (கலைஞர்), வளாகம் (மக்கள்), வர்த்தக உலகம் (சன் நியூஸ்), மார்க்​கெட்  டிப்ஸ் (ஜெயா பிளஸ்) என்று எல்​லாச் சானல்களி​லும் ஏதாவது ஒரு வடி​வில் நுழைந்து விடுகிறது பங்​குச்சந்தை.    

            எந்தப் பங்கை வாங்க​லாம்? என்ன விலைக்கு வாங்க​லாம்? சந்தை ஏறுமா, இறங்​குமா? என்பது போன்ற கேள்விக​ளுக்​குப் பதில​ளிக்கக் காத்தி​ருக்கி​றார்கள் பங்​குச் சந்தை வல்லுனர்கள். குடுகு​டுப்​பைக்காரன் குறி சொல்வது போல இவர்கள் கொடுக்​கும் பரிந்து​ரையை நம்பி, பங்​குச் சந்தை​யில் பணம் போடுபவர்க​ளைப் பார்த்​துப் பரிதாபப்படாமல் வேறென்ன செய்ய? பங்​குச்சந்தையை​யும் பரிந்துரைகளை​யும் நம்பு​வோர் இருக்​கும் வரை, இந்நிகழ்ச்சிகளை வழங்​கும் சானல்க​ளின் வியாபாரம் அமோகம்​தான்!    

             எல்லா நம்​பிக்கைக​ளும் ஏதோ ஒருவகை​யில் வியாபாரமா​கிக் கொண்டி​ருக்க, ஜனநாயகத்​தின் மீது மக்கள் கொண்டி​ருக்​கும் நம்​பிக்கை​யும் வியாபாரமா​கிக் கொண்டி​ருந்த​தைச் செய்திக​ளில் பார்க்க முடிந்தது. வாக்காளர்க​ளுக்கு மதுபானம், வேட்டி சட்டை வழங்கப்பட்டதை ஒரு சான​லில் பார்த்த அதிர்ச்சி அடங்​கும் முன்​னரே, வாக்காளர்க​ளுக்கு வழங்குவதற்​காக வைக்கப்பட்டி​ருந்த கட்​டுக்கட்​டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது மற்​றொரு சான​லில் ஒளிபரப்பானது. கட்சிகளுடன் சானல்க​ளும் சேர்ந்து செய்த தேர்தல் வியாபார​மும், நேயர்க​ளின் நம்​பிக்​கையை அடிப்படையாகக் கொண்டதே என்ப​தைச் சொல்லத் தேவை​யில்லை.    

            நிச்சயமாக என்றே​னும் ஒரு​நாள், இவை​யெல்​லாம் மாறக்கூ​டும்... இந்த தொலைக்காட்சி வியாபாரிகளிடம் சிக்​காத நாள் கூட வர​லாம்...​ நம்​புங்கள்...!

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

உலகின் சிறந்த நிர்வாகிகள் : முகேஷுக்கு 5ம் இடம்


இந்திய பங்கு சந்தைகளில் அதிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் தலைசிறந்த நிர்வாகிகள் பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளார்.
 

உலகின் தலைசிறந்த 5 நிர்வாகிகளின் பட்டியலை ஹார்வர்டு பல்கலைகழகத்தின் ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ இதழ் தயாரித்துள்ளது. பங்குச் சந்தையில் பதிவு பெற்றுள்ள 2000 கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள் இந்தப் பட்டியலுக்காக ஆய்வு செய்யப்பட்டனர். 

1995 ஜனவரிக்கு பின் 2007 டிசம்பர் வரை பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் 33 நாடுகளைச் சேர்ந்தவர்கள். 48 தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் சராசரி வயது 52. இவர்களில் 1.5 சதவீதம் பேர் பெண்கள். 15 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் சொந்த நாடு அல்லாத பிற நாடுகளில் பணி புரிகிறார்கள்.
 

உலக அளவில் தலை சிறந்த 5 நிர்வாகிகளின் பெயரைக் கொண்ட பட்டியலுடன் தயாரித்து ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ இதழ் வெளியிட்டுள்ளது. முதல் நான்கு இடங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், யுன் ஜோங்& யோங்& சம்சங் எலெக்ட்ரானிக்ஸ், அலெக்ஸி மில்லர்&கேஸ்புரோம் நிறுவனம்&ரஷ்யா, ஜான் சேம்பர்ஸ்&சிஸ்கோ சிஸ்டம்ஸ் ஆகியோர் உள்ளனர்.

டாப் 50 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி.