வியாழன், 16 செப்டம்பர், 2010

பெற்றோரின் டுவிட்டர் மோகம் : சிக்கியது பச்சிளங்குழந்தை



ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பது பழமொழி, 
ஆனால் தற்போது சமூக வலை தளங்களைப் 
பயன்படுத்தாதவன் மனிதனல்ல - புது மொழி என்பதுபோல 
சமூகவலை தளங்கள் இன்றைய நாகரீக மக்களை பெரிதும் 
ஆட்கொண்டுள்ளன. 

அதற்கு ஒரு சான்றாக, பஞ்சாப் மாநிலம் 
ஜலந்தரில் உள்ள குர்சிம்ரன் என்ற பெண் தான் டுவிட்டரில் 
இணைந்ததோடு மட்டுமல்லாமல், பிறந்து 2 நாட்களே ஆன 
ஹினாயத் என்று பெயர் சூட்டப்பட்ட தனது 
பச்சிளங்குழந்தையையும் டுவிட்டரில் இணைத்துள்ளார். 

டுவிட்டர்அட்பேபிஹினாயத் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள 
இந்த டுவிட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களின் 
எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. 
இதுகுறி்தது குர்சிம்ரன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : 

தான் கர்ப்பமாக இருந்தபோது, என் டுவிட்டர் நண்பர்கள் எனக்காக 
பிரார்த்தித்ததாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் 
விதமாக, தங்களது பச்சிளங்குழந்தையையும் டுவிட்டரில் 
இணைத்து, அவளது போட்டோக்களையும் டுவிட்டரில் 
இணைத்ததாக அவர் அதில் தெரிவித்தார். தாங்கள், டுவிட்டரில் 
பேபிஹினாயத் சேர்ந்த சில நிமிடங்களிலேயே, அவருக்கு 
உலகின் பலபகுதிகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் 
உள்ளதாகவும், அவர் மேலும் கூறுகையில், டுவிட்டரில் 
செய்திகள் உடனுக்குடன் பரிமாறப்படுவதால், நட்புறவு எளிதில் 
விரிவடைவதாகவும், தங்கள் குழந்தைக்கு ஹினாயத் என்ற 
பெயர் கூட டுவிட்டரில் உள்ள நண்பர் கூறித்தான் வைத்தது 
என்றும், இதன்மூலம், டுவிட்டரில் பிறந்து 2 நாட்களே ஆன என் 
குழந்தைக்கும் டுவிட்டரில் அக்கவுண்ட் உள்ளது குறித்து 
பெருமையடைவதாக குர்சிம்ரன் தெரிவித்துள்ளார். 

நன்றி :
தினமலர்

 

13 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அந்தம்மா ரொம்ப லேட்டு.

அஹமது இர்ஷாத் சொன்னது…

உலகம் எங்கே போகுது என்பது தெளிவாயிடுச்சு..

ஸாதிகா சொன்னது…

ஹ்ம்ம்ம்... இதற்கு என்ன சொல்வது.ஹினாயத் 2 வயதில் கூகுளில் அக்கவுண்ட் திறந்து மூன்று வயதில் வலைப்பூவும் ஆரம்பித்து விடுவார் போலும்.

Unknown சொன்னது…

வாருங்கள் அக்பர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இர்ஷாத்.

ஸாதிகா சொன்னது…

சகோ ஸ்நேகிதி பாயிஷா(என் இனிய இல்லம்)அல்ல.ஸாதிகா(எல்லாப்புகழும் இறைவனுக்கே)

தமிழ்த்தோட்டம் சொன்னது…

இன்று உலகம் குழந்தையின் கையில் தான் உள்ளது

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

உலகம் ரொம்ப வேகமாக முன்னேறிவருகிறது இல்ல.. எல்லாம் நல்லபடியாக நடந்தால் நல்லதுதான்..

Unknown சொன்னது…

வாருங்கள் தமிழ் தோட்டம்.தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி

Unknown சொன்னது…

வாருங்கள் சேக்.தங்களின் " உம்ராஹ்" இனிதாக அமைந்திருக்கும்.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சேக்

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோதரி ஸாதிகா.

புல்லாங்குழல் சொன்னது…

விசித்திரமான, அதே நேரத்தில் சுவையான சம்பங்களை பொறுக்கி எடுத்து வழங்கும் உங்கள் திறன் பாராட்டுக்குறியது.

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,
வாழ்த்துக்கும் நன்றி
@நூருல் அமீன் அவர்களே.