"உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் தானா' என, மத்திய மனிதவள அமைச்சகம் கேள்வி எழுப்பிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தனக்கு ஐதராபாத் பல்கலை வழங்கவிருந்த கவுர டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க மறுத்துள்ளார்.
பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், ஆடிப் போன மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், செஸ் சாம்பியன் ஆனந்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை இவருக்கு உண்டு. உலக செஸ் சாம்பியனும் கூட. இந்தியாவைச் சேர்ந்த இளைய தலைமுறையினர், செஸ் விளையாட்டில் சாதிப்பதற்கு முன்னோடியாக விளங்கியவர்.இவரது சாதனைகளை பாராட்டும் வகையில், இந்திய அரசு இவருக்கு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
சர்வதேச அளவில் நடக்கும் செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக இவர், ஸ்பெயினில் தங்கியுள்ளார்.இந்நிலையில், ஐதராபாத் பல்கலைக் கழகம், ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. இதற்கான கோப்புகளை கடந்தாண்டு மத்திய மனித வள அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இது தொடர்பாக முடிவு எடுப்பதில் மனிதவள அமைச்சகம் தாமதித்தது.
ஆனந்த், ஸ்பெயின் குடியுரிமை பெற்றவர் என்ற தகவல், மனிதவள அமைச்சகத்துக்கு கிடைத்தது தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.எனவே, ஆனந்த் இந்திய குடியுரிமை உடையவர் தான் என்பதை நிரூபிக்கும்படியும், அதற்கான சான்றுகளை அளிக்கும்படியும் மனிதவள அமைச்சகம் சார்பில், ஐதராபாத் பல்கலைக்கு வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, ஐதராபாத்தில் தற்போது நடந்து வரும் சர்வதேச கணிதவியலாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆனந்த் நேற்று வந்தார். அந்த தேதியிலேயே அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்க, ஐதராபாத் பல்கலை திட்டமிட்டது. ஆனால், மத்திய மனிதவள அமைச்சகத்திடம் இருந்து இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை.
இதனால், பட்டமளிப்பு விழாவை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இந்த தகவலால், ஆனந்த் வருத்தம் அடைந்தார். இதற்கு பதிலடியாக,"எனது குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பி, சர்ச்சையை கிளப்பிய இந்த டாக்டர் பட்டத்தை ஏற்கப்போவது இல்லை என, ஆனந்த் அதிரடியாக அறிவித்தார்.
ஏமாற்றம் அடையவில்லை : ஆனந்த் மனைவி பேட்டி: ஆனந்தின் மனைவி அருணா கூறியதாவது:ஆனந்தின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை எழுந்தது எங்களுக்கு ஏமாற்றத்தை தரவில்லை. எரிச்சலைத் தான் ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் இந்திய பாஸ்போர்ட்டைத் தான் வைத்துள்ளார். இந்த பிரச்னையில் ஏற்கனவே ஆனந்த்தின் பாஸ்போர்ட் நகலை கேட்டனர். அதை அனுப்பி வைத்தோம். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை.
போட்டிகளில் ஆனந்த் வெற்றி பெறும்போதெல்லாம், அவருக்கு அருகில் இந்திய தேசியக் கொடி இருப்பதை காணலாம்.அவரின் குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கு இது ஒன்று போதாதா? ஐதராபாத் பல்கலையில் டாக்டர் பட்டம் பெறுவது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால், தற்போது நடக்கும் விஷயங்கள் அதற்கு சாதகமாக இல்லையே. இவ்வாறு அருணா கூறினார்.
அவமானம் ஆனந்திற்கு அல்ல! இந்திய அரசுக்கே !
10 கருத்துகள்:
ஒருவருடைய குடியுரிமையும் நாட்டு பற்றும் சந்தேகிக்கும் பொழுது, ஏற்படும் வேதனை என்னில் அடங்காது.
இது சின்ன விசயம் இல்லை விரிவாக அலசவேண்டியது.
தன்னுடைய தனி முயற்சியில் இவ்வளவு உயரம் சென்றவரை இப்படி நடத்துவது இந்திய அரசுக்கு அடுக்குமா ?
இவர்களாக விளையாட்டு துறைக்கு என்ன செய்தார்கள். இத்தனை கோடி பேர் இருக்கும் நாட்டில் ஒருவர் கூட தங்கம் வெல்லவா முடியாது. எல்லாம் இந்த கூறுகெட்ட அரசாங்கத்தின் முயற்சியற்ற தனம் தான் !
காமன்வெல்த் ஊழலில் இந்த அரசியல் வியாதிகளின் முகரை தெரிகிறது.
ராஜவம்சம் சொன்னது தான் சரி.
எவரையும் மதிக்க மாட்டோம்.
இருப்பவரை வளர்க்கவும் மாட்டோம்.
இது தான் அரசியல் வியாதிகளின் கொள்கை.
சரியாக சொல்லி இருக்கறீர்கள்
இளம் தூயவன்.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
ஒரு நாட்டின் வெற்றிக்கு தன்னையே அற்பணித்துகொண்ட ஒரு வீரனுக்கு நம் இந்திய அரசு தரும் அவ மரியாதையை எந்த ஒரு வீரனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாதுதானே.
உண்மையில் இது சின்ன விஷயம் இல்லை.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி @ராஜவம்சம்
உண்மையில் இந்திய அரசு
" ஆனந்தை " மட்டம் தட்டிதான் இருக்கிறது.இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே.
தங்களின் வருகைக்கும்,
கருத்துபகிர்வுக்கும் நன்றி
@ரிஷபன்மீனா.
எவரையும் மதிக்க மாட்டோம்.
இருப்பவரை வளர்க்கவும் மாட்டோம்.
//இது தான் அரசியல்(வாதிகளின்) வியாதிகளின் கொள்கை.//
இந்திய அரசியல்வாதிகளைப்பற்றிய தங்களின் கணிப்பு மிகச் சரியே.
வருகைக்கும்,கருத்துக்கும் மிக நன்றி @ஜோதிஜி அவர்களே.
உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறானவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் ஒன்றுதான் .. இவை இரண்டுமே மன்னிக்க முடியாத செயல் ... இந்தியாவிற்க்க இந்தியக் கோடி ஏந்தி பங்கேற்கும் ஆனந்த்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை ... இவ்வளவு நாட்களும் இல்லாத திருநாளாக இப்பொழுது என்ன திடீர் சந்தேகம், ஆனந்த் இந்தியரா இல்லையா என்று .. மேலும் அறிய http://haripandi.blogspot.com/2010/08/blog-post_26.html
//உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறானவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் ஒன்றுதான் .. இவை இரண்டுமே மன்னிக்க முடியாத செயல்.//
சாட்டையடி வார்த்தைகள்.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக