ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள்கூட தேக்கு விற்பான் !
கவிஞர் வாலியின் இளைமைக்கால கவிதை வரிகள்.
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன்.பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். சினிமா பாட்டெழுத வந்துவிட்டால் வாலிபனாகிவிடுவார் இந்த வாலிபக்கவிஞன்.
வாலியின் பெற்றோர் பெயர் : ஸ்ரீனிவாச அய்யங்கார்-பொன்னம்மாள்.
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்தது, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார்.
அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.
வாலி எப்பவும் உடுத்துவது, நூலாடையாக இருந்தால் வெள்ளை,சில்க்காக இருந்தால் சந்தன நிறம்.இவை தவிர வேறெதையும் விரும்புவதில்லை. | |
வாலி படங்களிலும் நடித்திருக்கிறார். பொய்க்கால் குதிரை, சத்யா,
பார்த்தாலே பரவசம், ஹே ராம், இவர் நடித்த படங்கள்.
அம்மா,பொய்க்கால் குதிரை, நிஜ கோவிந்தம்,பாண்டவர் பூமி,
கிருஷ்ணா விஜயம், என மொத்தம் 15 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். இதில் கவிதை,
உரைநடை,சிறுகதை என எல்லா வகையும் இதில் அடக்கம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கவிஞர் வாலி இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்தவர்கள். 1964 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த படகோட்டி படத்தில் இவர் எழுதிய
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
என்ற இந்த ஒரு பாட்டின் மூலம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்கவைத்த கவிஞர்.
இவர் வீட்டில் செய்யப்படும் தோசையும்,மிளகாய் பொடியும் ரெம்ப பிரபலம். இந்த சுவையான தோசையையும், மிளகாய் பொடியையும் சாப்பிட எம்.ஜி.ஆர். அடிகடி இவர் வீட்டுக்கு வருவாராம்.
இவர் பாடல்களில் எதுகையும்,மோனையும், எளிய சொற்களும் கொண்டு பாடல்கள் எழுதபடுவதால் மனதில் எளிதில் படிந்துவிடுவதே இவரின் தனி சிறப்பு. இவர் ஒரு வருடம் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்திருக்கிறார்.ஓவியம் வரைவதிலும் சிறந்த ஆற்றல் கொண்டவர்.
பள்ளி பருவத்தில் இவர் வரைந்த " பாரதி " யின் ஓவியத்திற்கு கீழே
"வாலி " என்று கையெழுத்திட்டிருந்தார். படத்தை வாங்கிப் பார்த்த தமிழ் ஆசிரியர்,வாலியை பாராட்டியதோடு நக்கலாக வாலியை பார்த்து
" உனக்குத்தான் வால் இல்லையே பிறகு ஏன் வாலி என்று பெயர் வச்சுகிட்டே " என்று கேட்க
இதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க உடனே வாலி ஒரு துண்டு சீட்டில்
" வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா ?
காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா
என்று எதுகை மோனையோடு எழுதிக்காட்டி தான் வாலி என்று நிரூபித்து காட்டியவர்.
2 கருத்துகள்:
வாலிப கவிஞ்சனின் எத்தனையோ அருமையான பாடல்கள் என்னைக்கவர்ந்தது.. தொடரவும்
கவிஞர் வாலியின் சிறப்பு இன்னும் தொடரும் ரியாஸ் .
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக