வெள்ளி, 30 ஜூலை, 2010

மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்




மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை.

மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும். இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர். அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். 

இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆய்வு நடத்தினார். ஒருவருக்கு உள்ள திறமை மற்றும் தனித்தன்மை என்ன என்று மூளைக்கு தான் தெரியும். 

எனவே, மூளையை “ஸ்கேன்” செய்வதன் மூலம் இதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக அவர் 6 ஆயிரம் பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து ஆய்வு மேற் கொண்டு அதன் முடிவில் " மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்காலத் திட்டங்களை " தீர்மானிக்கலாம் என கண்டறிந்துள்ளார்.

5 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஒருவேளை இது இப்படியாக இருக்கலாம்.

மூளையை ஸ்கேன் செய்து அவர்களின் திறமை, விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப எதிர்காலத்தில் படிக்கும் பிரிவை தேர்வு செய்யலாம் என்று.

நன்றி அபுல்பசர்.

Unknown சொன்னது…

மனோதத்துவ கணக்கீடு நல்லாதான் இருக்கு...

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்
நன்றி @ அக்பர்

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்
நன்றி @ சிநேகிதி.

Unknown சொன்னது…

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html