சுஜாதா : ஒரு சிறப்புப்பார்வை தொடர்ச்சி..........
சுஜாதா ஒரு புத்தகப் பிரியர். புதிதாக வருகின்ற இலக்கிய புத்தகமானாலும் சரி, அறிவியல் சம்பந்தமான புத்தகமாக இருந்தாலும் சரி அதை முதலில் படித்து முடித்துவிட்டுதான் பிற வேளைகளில் கவனம் செலுத்துவார்.
உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என்ற தாகம் அவரிடம் இருந்தது.அதை கடைப் பிடிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதிகம்.
ஹாலில் ஒரு புத்தகம்,பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம் என மாறி,மாறிப் படிக்கிற பழக்கமுடையவர் சுஜாதா.சுஜாதாவின் நாடங்கள் பலவற்றை பூர்ணம்விஸ்வநாதன் மேடையேற்றினார்.அவர் எழுதிய நாடங்களில் " கடவுள் வந்திருந்தார் " என்ற நாடகம் புகழ் பெற்ற ஒன்றாகும்.
டெல்லியில் பதினான்கு வருடங்கள் கழித்து, 1970ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் [BEL] நிறுவனத்தில் டெபுடி மானேஜராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின் முப்பது வருடங்கள் பெங்களூர் வாசம் தான். பிறகு சிறிது வருடங்களில் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டு பிரிவில் ஜிஎம் பதவிக்கு உயர்ந்த போது, கடுமையான வேலைகள் காத்துக் கொண்டிருந்தன.
இங்குதான் மீண்டும் தன் நண்பர் கலாமுடன் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் ஏவுகணை ப்ரோக்கிராமிங் செய்தார்கள். கலாமைப் பற்றி தனது நினைவுகளை பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் சுஜாதா. அவர்களிருவரும் சேர்ந்து ராக்கெட் இயலை பற்றி திப்பு சுல்தான்லிருந்து தொடங்கி எழுத நினைத்திருந்தனர். இன்னும் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இதே நேரத்தில், எழுத்துலகில் ராக் ஸ்டார் அளவிற்கு புகழ் பெற்றார். ஒரே நேரத்தில் ஐந்து புத்தகங்களில் ஆறு தொடர்கதைகளெல்லாம் எழுதினார். “இவர் எழுதினா இவரோட லாண்டிரி பில்லைக் கூட பப்ளிஷ் செய்வாங்க” என்றெல்லாம் பேசினார்கள். கதை, கட்டுரை, நாடகம், ஊடகம் என்று தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு எழுதினார்.
இவரின் கதைகள் நன்றாக இருந்தாலும் அவைகளை சினிமா படமெடுத்தவர்கள் மாற்றியதால் தோல்வியைத் தழுவின. பாலசந்தருக்கு நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு முதன் முதலில் வசனமெழுதினார்.
1993ல் பிஇஎல்லிலிருந்து ரிடையரான போது முடிவெடுக்கப் பட வேண்டிய விஷயம் ஒன்றிருந்தது. ரிடையர்மெண்டுக்கு பிறகு எங்கு செல்வது? சென்னை செல்ல வேண்டாம், குடிநீர்ப் பிரச்சனை என்று சொன்ன நண்பர்களை தட்டிக் கொடுத்து சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் குடியேறினார்.
இதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான் மணிரத்னத்தின் ரோஜா படத்திற்கு வசனமெழுதினார். அந்தப் படம் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றிப் போட்டது. சென்னைக்கு வந்த பின், கமல் சொல்லி ஷங்கரின் படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார்.
சிவாஜி புத்தகத்தில் வந்த சிறுகதை தொடங்கி இன்று ரஜினியின் சிவாஜிப் படத்திற்கு வசனம் வரை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலம் எழுத்துலகில் இருந்து வந்திருக்கிறார். இன்று வரை 100 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 15 நாடகங்களும், ஏராளமான விஞ்ஞான மற்றும் இதர கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். நண்பர்களுக்காக அவ்வப்போது சினிமாப் படங்களுக்கும் வசனம் எழுத்து இருக்கிறார்.
பங்களா வீடு, பென்ஸ் கார்,என எதற்கும் ஆசைப்பட்டதில்லை.எப்பொழுதும் எளிமையாக இருக்கவே அவருக்கு விருப்பம்.சுஜாதாவின் பிரபலமான "மெக்சிக்கோ சலவைக்காரி " ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்கு சொல்லவே இல்லை. ஆனால் மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் சொல்லி வாய்விட்டு சிரிப்பாராம் சுஜாதா. அது செம "A"
ஜோக்.
சுஜாதாவிற்கு என்பதுகளின் நடுவிலும் பிறகு 2002லும் உடல் நிலை பாதித்தது. இரண்டு முறை ஆன்ஜியோவும் ஒரு பைபாஸும் செய்திருக்கிறார்.
உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27 , 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29.02.2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.
என்றும் சுழலும் சுஜாதாவின் நினைவுளுடன்......
நன்றி:
விக்கி பீடியா.
கிறுக்கல்.காம்....
11 கருத்துகள்:
good post
சுஜாதாவை பற்றிய உங்களது இரண்டாம் சிறப்பு பார்வையும் அருமை.மகன்கள், ஜப்பான் மருமகளோடு குடும்பப்படமும் அருமை.
சுஜாதா பற்றிய தகவல்கள் அவரது எழுத்துக்கள் போல இன்னும் இன்னும் படிக்க ஆர்வமாக உள்ளது. தொடருங்கள் அபுல். நன்றி
மூன்று படங்களும் மட்டுமே அவரின் வரலாற்றை உணர்த்துவதாக இருக்கிறது. கடைசி படம் இதுவரை நான் பார்க்காத ஒன்று. இந்த பதிவை என்னுடைய கூகுள் பஸ்ஸில் இணைத்து உள்ளேன்.
தொடருங்கள்.
இன்னும் கொஞ்சம் விரவாக உள்ளே நுழைய முடியுமா? என்று பாருங்கள்.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி @ விருட்சம்
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி @ பத்மநாபன்
சுஜாதா அவர்களைப் பற்றிய தகவல்களை திரட்டி இன்னும் எழுத முயற்சிக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி @ ஸ்டார்ஜன்.
வாருங்கள் ஜோதிஜி அவர்களே.
என்னுடைய இந்த பதிவை தங்களின் கூகுள் பஸ்ஸில் இணைத்தமைக்கு நன்றி சார்.
உங்களைப் போன்றோர்களின் கருத்துக்கள் தான் எங்களை இன்னும் சிறப்பாகவும்,அதே நேரத்தில் கவனமாகவும் எழுத தூண்டுகிறது.
உங்களின் பாராட்டுக்கள் எனக்கு ஒரு உற்சாக டானிக்.
திரு:சுஜாதா அவர்களைப் பற்றிய தகவல்களை இன்னும் திரட்டி எழுத முயற்சிக்கிறேன்.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்.
சுஜாதா இந்த வார்த்தைக்கு ஒரு வசீகரம் சேர்த்தவர் அவர்.
நல்ல பதிவு வாழ்த்துகள் சார்.
உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி @ அக்பர்.
சுஜாதா ஒரு சகாப்தம். சுஜாதாவை படித்தவர்கள் அவரது பாதிப்பு இல்லாமல் எழுதுவது முடியாது. மரண ப்டுக்கையில் கூட வசீகரமாகத் தான் படுத்திருக்கிறார்.
ஆனால் அப்படி அவரை பார்க்க நெஞ்சை பிசைந்தது. மரணம் ஒரு முற்று புள்ளியல்ல என்பது தான் என் நம்பிக்கை. ஆயினும்.....
கருத்துரையிடுக