பெங்களூரில் இயங்கி வரும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர். டி.ஓ.) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள அதிநவீன ‘லேசர் கைடு பாம்’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இது குறித்து டி.ஆர்.டி.ஓ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:
நாட்டின் பாதுகாப்புக்கு தேவைப்படும் போர் தளவாடங்கள், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் சார்பில் பெங்களூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், போர் விமானங்கள் மூலம் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் படைத்த ‘லேசர் கைடு பாம்’ என்ற நவீன வெடிகுண்டு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
செயல்படுவது எப்படி?
ஒளிக்கற்றை மூலம் இலக்கை துல்லியமாக கணித்து, அதை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படுவதுதான் ‘லேசர் கைடு பாம்’. அமெரிக்கா இதை 1960ம் ஆண்டிலேயே தயாரித்து, வியட்நாம் போரில் பயன்படுத்தியது. போர் விமானங்களில் இருந்து வீசப்படும் சாதாரண வெடிகுண்டுகள் குத்து மதிப்பாகவே வீசப்பட்டு, இலக்குகள் தகர்க்கப்படுகின்றன. அது, நூறு சதவீதம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால், ஒளிக்கற்றை பயன்படுத்தி வீசப்படும் வெடிகுண்டுகள், இலக்கை நூறு சதவீதம் துல்லியமாக தாக்கி அழிக்கும். ராக்கெட் போன்ற வடிவத்தில் இருக்கும் இந்த வெடிகுண்டுகளின் மூக்குப் பகுதியில், ‘லேசர்’ எனப்படும் ஒளிக்கற்றையை உருவாக்கும் உணர்வு கருவி உள்ளது.
தாக்கப்படும் இலக்கை போர் விமானம் நெருங்கும்போது இதை விமானி இயக்குவார். உடனே, வெடிகுண்டின் மூக்குப் பகுதியில் இருந்து வெளிப்படும் ஒளிக்கற்றை இலக்கின் மீது படும். அது சரியாக இருந்தால், வெடிகுண்டை விமானி விடுவிப்பார். அது ஒளிக்கற்றை பட்ட இலக்கை நோக்கி சீறிச் சென்று தாக்கி அழிக்கும்.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் சாதனை:
இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள போக்ரானில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் மூலம் இந்த வெடிகுண்டுகள் வீசி சோதனை நடத்தப்பட்டது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் சாதனை:
இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள போக்ரானில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் மூலம் இந்த வெடிகுண்டுகள் வீசி சோதனை நடத்தப்பட்டது.
இதில், அந்த வெடிகுண்டுகள் சிறப்பாக செயல்பட்டு இலக் கை வெற்றிகரமாக தகர்த்தன. இதன் மூலம், டி.ஆர்.டி.ஓ. மேற்கொண்ட முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பில் இந்த தயாரிப்பு புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது.
இதன் மூலம், இந்திய விமானப்படை இப்போது பயன்படுத்தும் ‘ஆன் கைடு பாம்’கள் மாற்றப்பட்டு ‘லேசர் கைடு பாம்’கள் பயன்படுத்தப்படும். இதை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா விரைவில் நடத்தப்படும்.
நன்றி :-
தினகரன்
3 கருத்துகள்:
வெடிகுண்டு தாக்குதல் பற்றி அறிந்துகொண்டேன். நல்ல பதிவு அபுல்.
நல்லாயிருக்கு..
ஷேக் , ரியாஸ்.
தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
நன்றி.
கருத்துரையிடுக