உலகின் மூன்றாவது பணக்காரரான " வாரன் பப்பட்" உடன் சாப்பிடுவதற்காக நடைபெற்ற ஏலத்தில் ஒருவர் ரூ.12 கோடி தருவதாக ஒப்புக்கொண்டு ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் சான்பிரான்ஸ்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் " கிளைடு பவுண்டேசன் " என்ற தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக இந்த ஏலம் நடைபெற்றது.
இதற்கு உலகின் மூன்றவது பணக்காரரும்,பெர்க்சையர் ஹாத்வே " என்ற இன்சூரன்ஸ் முதலீட்டு நிறுவன அதிபருமான வாரன் பப்பெட் கடந்த 10 ஆண்டுகளாக நிதி திரட்டி வருகிறார்.
ஏலத்தின் மூலம் அதிக பணம் கொடுப்பவர் வாரன் பப்பெட் உடன் விருந்து சாப்பிடலாம். e-bay மூலம் நடைபெற்ற 11 வது வருடத்திற்கான ஏலம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.
அதிகபட்சமாக ரூ.12 .3 கோடி தர ஒருவர் ஒப்புக்கொண்டதால் ஏலத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏலம் எடுத்தவரின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டின் ஏலத்தொகை ரூ. 9 9 கோடி. அதை விட இந்த ஆண்டு 24 சதவீதம் அதிகம்.
ஏலத்தில் வெற்றி பெற்ற நபர் " மன்ஹாட்டன் நகரில் உள்ள " ஸ்மித் அண்ட் உல்லன்சுகி" ஹோட்டலில் நடைபெறும் விருந்தில் வாரன் பப்பெட்டுடன் விருந்து சாப்பிட அனுமதிக்கப்படுவார்.
அவருடன் நண்பர்கள்,உறவினர்கள் என மொத்தம் 7 மட்டுமே அனுமதிகபடுவர் ஏலத்தில் கிடைத்த இந்த பணம் அந்த தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்.
7 கருத்துகள்:
அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும்!
http://kaniporikanavugal.blogspot.com/ மிக்க நன்றி!
அவர் எந்த நோக்கமும் இல்லாமல் கொடுத்திருந்தால் பாராட்டலாம்... ஆனால்...
ஆமா, அந்த டின்னர் ரொம்ப எக்ஸ்பென்சிவ் தான்.. ஆனா பஃபட் தாத்தா அளவுக்கு மில்லியன் டாலர் கணக்குல தானம் செய்ததும் இல்லை.. :)
software Engineer .உங்கள் வலைப்பூவை பார்த்தேன். மூன்று பதிவுகளும் அருமை.
தங்களின் வருகைக்கு நன்றி.
ராசராசசோழன் அவர்களே தங்களின் வருகைக்கு நன்றி.
சகோதரி நாசியா அவர்களே.தங்களின் வலைப்பூவை இன்றுதான் பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது.
ஆழமாகவும்,அழுத்தமாகவும் எழுதி இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கு நன்றி.
என்னான்னு சொல்றது.. இவ்வள்வு விலையுள்ள விருந்துன்னு நினைத்தாலே சாப்பிடமுடியாது... நீங்கள் குறிப்பிட்டமாதிரி 'அம்மாடியோவ்'தான்...
தமிழிஷ்'ல சேர்த்தாமட்டும் போதாது. பதிவிட்டபிறகு 'சப்மிட்' கொடுங்க...
தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், ஞாபகமூட்டியதற்க்கும்
நன்றி இர்ஷாத்.
தொடர்ந்து உங்கள் ஆலோசனைகளை தாருங்கள்.
கருத்துரையிடுக