Pages

திங்கள், 20 செப்டம்பர், 2010

விண்வெளியில் உங்கள் புகைப்படம் ! ஒரு அரிய வாய்ப்பு

     விண்வெளியில் தங்கள் புகைப்படம் மிதக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா' அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், புகைப்படத்தை மட்டுமல்லாமல், பெயரையும் விண்வெளியில் மிதக்க விட முடியும்.


விண்வெளிக்கு பறக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, நமது முகமாவது பறந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. face in space  என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புகைப்படத்தையோ அல்லது பெயரையோ விண்வெளியில் பறக்க விட முடியும்.
 இத்திட்டத்திற்காக https://faceinspace.nasa.gov என்ற பெயரில் ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்திற்கான  சுட்டி  தங்களின் புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்ப விரும்புபவர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் புகைப்படத்தை  "அப்லோடு' செய்ய வேண்டும்.இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் புகைப்படங்கள் மற்றும்  பெயர்களை, விண்வெளிக்கு கொண்டு செல்ல டிஸ்கவரி எஸ்.டி.எஸ்.,-133 மற்றும் எண்டோவர் எஸ்.டி.எஸ்., - 134 என்ற இரண்டு விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தப்படும். 

"இத்திட்டம் பொதுமக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை விண்வெளி வீரர்கள் கொண்டு சென்று, பூமியின் வட்டப்பாதையில் மிதக்க விடுவார்கள். விண்வெளியில் இருந்து ஓடம் திரும்பியதும், விண்வெளிக்கு சென்று வந்த கமாண்டரின் கையெழுத்துடன் ஒரு நினைவுச் சான்று இன்டர்நெட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம், புகைப்படம் அனுப்பியவர் தனது புகைப்படம் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது என்ற இனிய நினைவுகளை பெற முடியும். அவர்  மறைந்தாலும், அவரது புகைப்படம் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் மிதந்து கொண்டிருந்து, வரலாற்றில் அவரது உருவத்தை  பதிய வைக்கும்'.


 

16 கருத்துகள்:

  1. அருமையான தகவல் அபுல்.. இதுக்கு கட்டணம் உண்டா?..

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
    @அஹமத் இர்ஷாத்.

    பதிலளிநீக்கு
  3. நாசா வலைத்தளத்தில் கட்டணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆகையால் இலவசமாகத் தான் இந்த சேவை இருக்கக்கூடும்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி @ஸ்டார்ஜன்.

    பதிலளிநீக்கு
  4. வாருங்கள் அக்பர்.
    இந்த சேவைக்கு கட்டணம் எதுவும் வாங்குவதாக தெரியவில்லை.
    இலவச சேவையாகத்தான் இருக்கும்.

    முயற்சிப் பண்ணி பாருங்களேன்.
    வருகைக்கும்,கருத்துக்கும்
    நன்றி @ அக்பர்.

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அழைக்கும் அபுல்,
    எல்லா மக்களுக்கும் பயன்
    உள்ள தகவல்.

    பதிலளிநீக்கு
  6. அவசியமான அருமையான பகிர்வு.பகிர்தலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

    பதிலளிநீக்கு
  8. வாருங்கள் மனோ சாமிநாதன்.
    தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாருங்கள் ஸாதிகா.
    தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. தங்களின் அழைப்புக்கு மிக்க நன்றி சுவேதா.

    பதிலளிநீக்கு