Pages

சனி, 5 டிசம்பர், 2009

ஆஸ்கார் தமிழன்:சின்ன சின்ன தகவல்கள்


       அன்பா, வெறுப்பா, ? என  வாழ்க்கை கேட்டபோது அன்பை தேர்ந்தெடுத்த ஆஸ்கார் தமிழன்.
ரஹ்மானுக்கு என்று எந்த செல்ல பெயரும் கிடையாது. அம்மா,சகோதரிகள் அனைவரும் வாய்நிறைய" ரஹ்மான் " என்றுதான் அழைப்பார்கள்.
குடும்பச்சூழல் காரணமாக பத்மா சேஷாத்ரி பள்ளியில் அவர் படித்தது ஒன்பதாம் வகுப்பு வரைதான்.
தனது ஜனவரி  6 -ம் தேதி பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடுவது இல்லை. அதிகாலை தொழுகை,ஆதரவற்றோர் இல்லம் விசிட் என ஆழ்ந்த அமைதியுடன் கழியும் அந்த நாள்.
பசியாறுவதற்கு எந்த உணவாக இருந்தாலும் போதும், சில நேரங்கில் ரசம் சாதம் மட்டும் போதும்.
தங்க நகைகள் மீது துளியும் ஆர்வம் கிடையாது. மெலிதான பிளாட்டினம் மோதிரம் மட்டும் சில நேரங்களில் அணிந்திருப்பார்.கையில் கடிகாரம் கட்டும் பழக்கமும் இல்லை.
எம்.ஜி.ஆர்.,சிவாஜி, படப் பாடல்களை அடிக்கடி விரும்பி கேட்பார்.
படத்தின் இசை கோர்ப்பு பணிகளின் போது கைகளை விரித்துக்கொண்டு புதிய வானம்,புதிய பூமி, எங்கும் பணி மழை பொழிகிறது  என ரஹ்மான் பாடினால் அந்த படத்துக்கான அவர் சம்பந்தப் பட்ட வேலைகள் முடிந்துவிட்டது என்று அர்த்தம்.
குழந்தைகளுக்கு லீவு கிடைத்தால் குடும்பத்தோடு வெளிநாடு போய்விடுவார்.
அங்கும் இசைச் சேர்ப்பு வேலைகள் உள்ளடக்கி இருக்கும்.
சமீபத்தில் ரஹ்மான் இசை அமைத்து இருக்கும் " Couples Retreat " படத்தின் ஆல்பம் 100 மில்லியன் டாலர்கள் வசூலித்திருகிறது. சமீபத்திய ரஹ்மானின் பிரமாண்ட ஹிட்டான அதில் தமிழ் பாடல்களும் உண்டு.
முக்கியமான் இசைவிழாக்களில் தோன்ற உடைகள் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் கொள்வார்.அவருக்கு ஆடை தேர்வு செய்பவர்கள் மனைவி சாய்ராவும், மும்பையின் பிரபல  டிசைனர் தீபக்கும்.
கதிஜா, ரஹீமா, என இரு பெண் குழந்தைகள், அமீன், என ஓர் ஆண் குழந்தை.
தனது சகோதரிகள் ரெஹானா, பாத்திமா, இஸ்ரத்,ஆகியோரிடம், எந்த நிலையிலும் பாசத்தை பொழியும் சகோதரர் " ரஹ்மான் "
சமூக பணிகளில் அதிக ஆர்வம், தான் செய்யும் எந்த உதவியையும் வெளி காட்டிகொள்ளமாட்டார்.
இசைக்கு அடுத்து ரஹ்மானின் விருப்பம் வீடியோ கேம்ஸ், அவருடைய விளையாட்டு தோழர்கள் மகள் கதிஜா, ரஹீமா, மகன் அமீன்.
தன் தாயார் கரிமா பேகத்தோடு  இரண்டு முறை " புனித ஹஜ்ஜு " பயணம் சென்று வந்திருக்கிறார்.
ரஹ்மான் இசை அமைத்து வெளிவந்த முதல் படம் " ரோஜா " என்பது தமிழில்தான். ஆனால் அவர் இசை அமைத்து வெளிவந்த முதல் படம் " யோதா " மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம்.
இயக்குனர் மணிரத்தினம் எந்த நொடி நினைத்தாலும் ரஹ்மானை சந்திக்க முடியும்.
தன்னை அறிமுகப் படுத்திய இயக்குனர் மீது அவ்வளவு அபிமானம்.
மிகவும் குறைவாகவே பேசுவார். ஆனால் மிக நெருங்கிய நண்பர்களிடம் ரெம்பவே
குதூகலமாகச் சிரித்து பேசுவார்.
பாடகரும் நண்பருமான சாகுல் ஹமீது மறைவில் அதிகம் வருந்தியவர்.
தியாட்டார், பொழுது போக்கு இடங்கள், பார்ட்டிகள் , என எங்கும் ரஹ்மானை பார்க்கமுடியாது.
ஓய்வு நேரங்களைக் கழிக்க விரும்புவது குடும்பத்தினரோடு மட்டும்தான்.

2 கருத்துகள்: