Pages

வியாழன், 3 டிசம்பர், 2009

சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி "


சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி "
பிரணவ் பற்றி:குஜராத்தை சேர்ந்த 28 வயது பிரணவ், மும்பை I.I.T யில் பட்டம் பெற்று அமெரிக்கா சென்றவர் மைக்ரோசாப்ட்டில் சில காலம் பணிபுரிந்துள்ளார். இதற்கு முன்னரே 3D பேனா,குறிப்புத்தால்கணினி,பிசிக்கல் மேப் என விளையாடியவர்.அவரின் கண்டுப்பிடிப்பே இந்த " சிக்ஸ்த் சென்ஸ் "
சந்தேகமே இல்லை... இந்தியாவும் இந்தியர்களும் இந்த உலகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியம். இந்தியரான ஆர்யபட்டா" பூஜ்யம் " கண்டுப்பிடித்த பிறகுதான் கணிதம் நாலுகால் பாய்ச்சலில் பரிணமித்தது.இப்போது இந்த கணினி யுகத்திலும் ஓர் இந்தியனின் கண்டுப்பிடிப்புதான் " Talk Of The World "
பிரணவ் மிஸ்ட்ரி உலகத்தில் இதுவரை வாழ்ந்த மூன்று சிறந்த கண்டுப்பிடிப்பாளர்களுள் " பிரணவ் " நிச்சயம் என்பது ஒரு வரி அறிமுகம்.உலகின் தலை சிறந்த அறிவியல் ஆய்வு கூடம் அமெரிக்காவின் மாசாசூட்ஸ் ஆய்வு கூடம். அங்கு அறிவியல் கண்டுப்பிடிப்புகளை வணிகரீதியில் உருவாக்குவது பற்றி ஆய்வு செய்வது எம்.ஐ.டி.பரிசோதனைக்கூடம்.
அதன் டக்டரடே மாணவரான பிரணவ் கண்டுப்பிடித்திருப்பதுதான் " சிக்ஸ்த் சென்ஸ் " ஆறாவது அறிவு.




கிட்டத்தட்ட மனிதனின் கைகளில் இருக்கும், மூளையின் செயல் திறனுக்கு ஒப்பான ஒரு கருவி.சிம்பிளாக ,உங்கள் உள்ளங்கையில் ஒரு லேப்டாப்பைப் புதைத்து வைத்திருப்பதற்கு ஒப்பான ஒரு டெக்னாலஜி .சுருக்கமாக " பேப்பர் லேப்டாப் " என்கிறார்கள்.
தொப்பி அல்லது கண்ணாடியில் அணிந்துகொள்ளகூடிய ஒரு கேமரா, சின்ன ப்ரொஜெக்டர்,கீ செயின் வடிவில் பாக்கெட்டுக்குள்  அடங்கும் ஒரு சின்னமெசின், விரல் முனைகளில் பொருத்திகொள்ளும் வளையங்கள்.இவ்வளவுதான் " சிக்ஸ்த் சென்ஸ் "
உங்கள் கண் பார்வை பதியும் இடங்களில் லென்ஸ் பதியுமாறு அந்தக் கேமராவை பொருத்திக்கொள்ளவேண்டும்.நீங்கள் பார்க்கும் எந்த பொருள் அல்லது சம்பவம் பற்றி உங்களுக்கு தகவல் தெரிய வேண்டும் என்றாலும், விரல் சொடுக்கினால், விவரங்கள்
வீடியோ வடிவில் புள்ளி விவரங்களுடன் உங்கள் உள்ளங்கையையே திரையாக்கி காட்சிகளாக விரியும்.

வெள்ளைத்தாள்,  சுவர்,துணி,பாலிதீன் உறை,கண்ணாடி என எதிரில் இருக்கும் எந்த பொருளின் மீதும் விவரங்களைப் புராஜெக்ட் செய்யலாம். தேவைப்படும் மாற்றங்களையும் எடிட் செய்து பதிவேற்றி உலகத்துக்கு உண்மைகள் சொல்லலாம்.கம்ப்யூட்டர் படிப்புகளில்
ஊறித் திளைத்து பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் இதை பயன்படுத்தமுடியும் என்பது இல்லை. அடிப்படை ஆங்கிலம் தெரிந்த, செல்போன் இயக்கத்தெரிந்த எவரும் அதே லாவகத்தோடு இந்த " சிக்ஸ்த் சென்ஸை " பொருத்தி உபயோகபடுத்தலாம்  என்பது இன்னொரு விசேஷம்.










       


புரொஜெக்டர்,கேமரா சென்ஸார்,எல்லாம் முந்தியே இருக்கிறதுதானே,அந்த மூன்றையும் ஒருங்கினைத்திருகிறான்,இதற்கு  ஏன் இத்தனை உற்சாகக் கூக்குரல் எனக் கேட்கும் ஜீனியஸ்களே --- ஒரு நிமிடம், தரமான நிறுவனத்தின் மிகக்  குறைந்தபட்ச  நினைவு திறன், வேகம் கொண்ட ஒரு மேசை கணினியின் விலையே குறைந்த பட்சம்
20 ஆயிரத்தில் இருந்துதான்துவங்கும்.ஆனால் கிட்டத்தட்ட உலகத்தையே உள்ளங்கையில் அடக்கும் இந்த " சிக்ஸ்த் சென்சின் "  விலை 15 ஆயிரத்துக்குள்தான்.அதிலும் அந்த சிக்ஸ்த் சென்சின் ரகசியத்தை உலகத்துக்கு இலவசமாக அளிக்க போகிறேன் என்று
பிரணாவ் அறிவித்திருப்பதுதான் சிலிக்கன் வேலியின் இன்றைய நம்பமுடியாத பர பர விவாதம்.
விண்டோஸ் என்ற ஒற்றை மென்பொருள் மூலம் பில் கேட்ஸ் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனதுபோல,இந்த சிக்ஸ்த் சென்ஸ்  மூலம் பிரணாவ் அவரைகாட்டிலும் கோடிகளில் டாலர்களை குவிக்கலாம்.அந்த வாய்ப்பைத்தான் " ஜஸ்ட் லைக் தட் "
உதாசீனப்படுத்தீருக்கிறார் பிரணாவ்.உலகின் போக்கை தீர்மானிக்கும் மல்டி நேசனல் நிறுவனங்கள் இந்த சிக்ஸ்த் சென்ஸை   என்னிடம் விலை பேசின..ஆனால் சிக்ஸ்த் சென்ஸை உலகின் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதுதான் என் கனவு.
அதை சாத்தியப்படுத்தும் ஆசையுள்ள எவருடனும் கைகோர்க்க ஆவலாக உள்ளேன். இந்திய அரசாங்கம் ஆர்வம் காட்டினால் முதல் முன்னுரிமை அவர்களுக்குதான் என்று அறிவித்துள்ளார் பிரணாவ்.   சபாஸ்.


 

3 கருத்துகள்: